3/02/2012

| |

'போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவோம்! பாடசாலை கட்டிட திறப்பு விழா

மட்டக்களப்பு மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட படுவான்கரை பிரதேச மாணவர்களின் நலன்கருதி 'போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவோம்' திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மட்ஃவெள்ளிமலை பிள்ளையார் அ.த.க.பாடசாலையின் ஐரோப்பிய யூனியனின்
நிதியுதவியின் கீழ் ஒருகோடியே 14 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத்திற்கான திறப்பு விழா
பாடசாலை அதிபர் கந்தசாமி தலைமையில் நேற்று (29.02.2012) நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதீதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சார்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான பூ.பிரசாந்தன் கலந்து கொண்டதுடன், யுனிசெவ் நிறுவனத்தின் மாவட்ட பணிப்பாளர் அசாத்துல் ரகுமான் பட்டிருப்பு வலயக் கல்வி பணிப்பாளர்
திருமதி.பிள்ளைநாயகம், கோட்டக்கல்வி பணிப்பாளர்கள் பாலச்சந்திரன்,விமலநாதன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.