3/01/2012

| |

சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் பரிசளிப்பு விழாவும் பெற்றோர் தின விழாவும்

மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் பெற்றோர் தின விழாவும் ஆரம்ப பாடசாலை மாணவர்களின் பரிசளிப்பு விழாவும் செவ்வாய்க்கிழமை(28.02.2012) இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி எலிசபெத் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
மட்டக்களப்பு கல்வி வலய கோட்டக் கல்வி பணிப்பாளர் கே.டேவிட். தாண்டவன்வெளி காணிக்கை மாதா ஆலய பங்குத்தந்தை அருட்பணி கிளமென்ட் அன்னாடாஸ் உட்பட பாடசாலை அதிபர்கள்,பெற்றோர்,பழைய மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது பாடசாலையில் பல்வேறு நிகழ்வுகளில் சாதணை படைத்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.
அத்துடன் ஆரம்ப மாணவர்களின் கலை நிகழ்வுகள் அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தன.