3/26/2012

| |

முதல்வரினால் சித்தாண்டி புதிய வீதி திறந்துவைப்பு

சித்தாண்டி வினாயகர் கிராமத்தில் முதல்வரின் பணிப்புரையின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்ட சித்தாண்டி புதியவீதி இன்று (25.03.2011) காலை 10.30 மணியளவில் திறந்து வைக்கப்ட்டதுடன், அதனை மக்களிடம் கையளிக்கும் வைபவம் சித்தாண்டி பிள்ளையார் ஆலய முன்றலில் இடம்பெற்றது. நிகழ்வினை ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளர் அவர்கள் தலைமையேற்றி நடாத்தியதுடன், நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கின் முதல்வரும், தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை – சந்திரகாந்தன் கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில் கட்சியின் தேசியசெயலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் , கட்சியின் தேசியப்பொருளாளர் ஆறுமுகம் தேவராசா, கட்சியின் முக்கியஸ்தர் அருண் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் பலரும் கலந்துகொண்டனர். நிகழ்வுகளின்போது மாவடிவேம்பு கிராம மக்களின் அபிவிருத்திகளை முக்கியமாக மணல்வீதிகளை அமைத்தல் மற்றும் மின்சாரம் வழங்குதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட செயற்றிட்ட வேண்டுகொள் ஒன்று முதல்வரிடம் மாவடிவேம்பு பிரதேசத்தின் கட்சி உறுப்பினர் திருப்பதி அவர்களினால் கையளிக்கப்பட்டதுடன், மேலும் பொதுமக்கள் தமது குறைகளையும் முதல்வரிடம் மனுக்களாக சமர்ப்பித்தனர்.