3/30/2012

| |

தீர்மானம் தொடர்பில் அரசின் உத்தியோகபு+ர்வ நிலைப்பாடு விரைவில் * தமிழ்க் கூட்டமைப்புக்கு மீண்டும் அழைப்பு * அமெரிக்காவின் இரட்டை வேடம் அம்பலம்

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பான அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும். மனித உரிமைப் பேரவையில் இருந்து விலகுவது தொடர்பில் அரசாங்கம் எதுவித முடிவும் எடுக்கவில்லை. இலங்கைக்கு வெளிநாட்டுத் தலையீடு தேவையென வாக்களித்த அமெரிக்கா, இஸ்ரேலுக்கு வெளிநாட்டுத் தலையீடு தேவையில்லையென வாக்களித்ததன் மூலம் அதன் இரட்டை வேடம் தெளிவாவதாக பதில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். பாராளுமன்றத் தெரிவுக் குழுவினூடாகவே தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று கூறிய அமைச்சர், இதில் அங்கம் வகிப்பதினூ டாகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு தமது மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு எட்ட முடியும் எனவும் குறிப்பிட்டார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. ஜெனீவா பிரேரணை தொடர்பாகவும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை, தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தை என்பன பற்றியும் ஊடகவியலா ளர்கள் கேள்வி எழுப்பினர். இவற்றுக்குப் பதிலளித்த அமைச்சர், மனித உரிமைப் பேரவையில் இஸ்ரேலுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அந்த நாடு நிராகரித்துள்ளது. தமது நாட்டுக்கு கண்காணிப்பாளர் குழுவினர் வருவதற்கு இடமளிக்கப்போவதில்லை எனவும் அறிவித்துள்ளது. இது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக 36 நாடுகளும் எதிராக அமெரிக்காவுமே வாக்களித்தன. இலங்கைக்கு வெளிநாட்டு தலையீடு தேவை என பிரேரணை முன்வைத்து ஆதரவாக வாக்களித்த அமெரிக்கா, இஸ்ரேலுக்கு வெளிநாட்டுத் தலையீடு தேவையில்லையென எதிராக வாக்களித்தது. இதன் மூலம் அதன் இரட்டை வேடம் தெளிவாகிறது. ஒவ்வொரு நாடு தொடர்பிலும் ஒவ்வொரு விதமாக நடந்து வருகிறது. இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்பதாலே அமெரிக்காவின் பிரேரணையின் போது வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது தவிர்த்ததாக மலேசியா அறிவித்துள்ளது. இஸ்ரேலைப் போன்று நாமும் மனித உரிமைப்பேரவையில் இருந்து விலக இது வரை எந்த முடிவும் எடுக்கவில்லை. அமைச்சரவையிலும் இது தொடர்பில் எதுவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை ஏற்கப்போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பல்ல. ஜெனீவா தீர்மானம் தொடர்பான அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பை அரசாங்கம் வெளியிடும். இது தொடர்பில் இன்னும் அமைச்சரவை முடிவு செய்யவில்லை. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை எமக்கே உரிய தனித்துவப்படி நாம் முன்னெடுப்போம். இதற்கு கால எல்லையோ கட்டுப்பாடோ கிடையாது. இதில் நீண்டகாலம் தேவைப்படும் பரிந்துரைகளும் உள்ளன. சில பரிந்துரைகளை செயற்படுத்த பாராளுமன்ற தெரிவுக்குழுவினூடாக இறுதி முடிவு எட்டப்பட வேண்டும். சகல அரசியல் கட்சிகளுடனும் பேச்சு நடத்தி வடபகுதிக்கோ தென்பகுதிக்கோ பாதிப்பு ஏற்படாத வகையில் பிரச்சினைக்கு சகலரும் ஏற்கக் கூடிய தீர்வு எட்டப்பட வேண்டும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க வேண்டும். தமது பிரச்சினைகளுக்கு இதனூடாகவே தீர்வு பெற முடியும். பாராளுமன்றத்தில் உள்ள மிக உயர்ந்த இடம் இந்த தெரிவுக்குழுவாகும். இங்கு தமது தரப்பு விடயங்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு முன்வைக்க அவகாசம் உள்ளது. இதனூடாக தேசிய பிரச்சினைக்குத் தீர்வு எட்ட முடியும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள்ளேயும் பிளவு காணப்படுகிறது.
»»  (மேலும்)

| |

பிரிக்ஸ் கூட்டமைப்பு சாதிக்க முடியுமா ? இரான் அமைதி நோக்கங்களுக்கு அணு சக்தியைப் பயன்படுத்திக்கொள்வது அனுமதிக்கப்படவேண்டும்

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய ஐந்து வேகமாக வளரும் பொருளாதாரங்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய ப்ரிக்ஸ் என்ற அமைப்பின் நான்காவது உச்சி மாநாடு நேற்றும் இன்றும் டில்லியில் நடந்து முடிந்துள்ளது. இந்த மாநாட்டின் இறுதியில், இந்த அமைப்பு, சிரியா மற்றும் இரான் குறித்த பிரச்சினைகளில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு எதிராக தனது கருத்தை தெரிவித்திருக்கிறது. இரானைப் பொறுத்தவரை, இரான் அமைதி நோக்கங்களுக்கு அணு சக்தியைப் பயன்படுத்திக்கொள்வது அனுமதிக்கப்படவேண்டும் என்று ப்ரிக்ஸ் கூறியிருக்கிறது. இது போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேசப் பிரச்சினைகளில் தனது நிலைப்பாட்டை வலியுறுத்தியிருக்கும் ப்ரிக்ஸ் அமைப்பு, உண்மையில் ஒரு வலுவான, ஒருங்கிணைந்த அமைப்பல்ல, அதன் உறுப்பு நாடுகளிடையேயே, முரண்பாடுகள் இருக்கின்றன எனவே அதனால், சர்வதேச அரங்கில் பெரிய தாக்கத்தைச் செலுத்த முடியாது என்று சில விமர்சகர்கள் கூறுகிறார்கள். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவி வரும் அரசியல் மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகள் பொருளாதாரப் போட்டிகள் ஆகியவை இருந்தாலும், இந்தப் பிரச்சினைகள் கடந்த சுமார் 60 ஆண்டுகளில் தோன்றியவைதான். ஆனால், இரு நாடுகளுக்கிடையே பல ஆயிரம் ஆண்டுகளாக கலாசார, நாகரீகத் தொடர்புகள் இருந்திருக்கின்றன
»»  (மேலும்)

| |

சுவாமி விபுலானந்த அடிகளாரின் 120 வது ஜனன தினம்-அவர் பிறந்த காரைதீவு மண்ணில் பல நிகழ்வுகள்

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 120 வது ஜனன தினத்தையொட்டி அவர் பிறந்த காரைதீவு மண்ணில் பல நிகழ்வுகள் நடைபெற்றன.செவ்வாய்க்கிழமை காலை காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் பிரதி அதிபர் எஸ்.இலங்கநாதன் தலைமையில் விபுலானந்தவிழா நடைபெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட காரைதீவு விபுலானந்த பணிமன்றத் தலைவர் வி.ரி.சகாதேவராஜா கலந்து கொண்டார்
»»  (மேலும்)

| |

கிழக்கு மாகாணத்தின் திட்டமிடல் செயலகத்தின் இவ்வருடத்திற்கான 1வது கூட்டம்.

கிழக்கு மாகாணத்தின் திட்டமிடல் செயலகத்தின் இவ்வருடத்திற்கான 1வது கூட்டம் நேற்று (28.03.2012) கிழக்கு மாகாணசபையின் ஒன்று கூடல் மண்டபத்தில் மாகாணசபையின் பிரதம செயலாளர் வி.ரி.பாலசிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களும், வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்,எம். உதுமாலெவ்வை மற்றும் முதலமைச்சரின் செயலாளர், அரசாங்க அதிபர், கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
»»  (மேலும்)

3/29/2012

| |

க.பொ.த.சா/த பரீட்சை இரண்டு இலட்சத்து 70 ஆயிரம் மாணவர்களில் ஒரு இலட்சத்து 64, 000 பேர் உயர்தரம் கற்க தகுதி

* 3908 பேர் 9 ‘A’ * 12,795 பேர் 9 ‘F’ * முதல் 10 இடங்களில் தமிழ்மொழி மூலம் இல்லை * 463 பெறுபேறுகள் நிறுத்தம் 2011 டிசம்பர் மாதம் நடைபெற்ற க. பொ. த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய 2,70, 314 பாடசாலை பரீட்சார்த்திகளில் 1, 64, 191 பேர் க. பொ. த உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். தாம் தோற்றிய 9 பாடங்களிலும், ‘ஏ’ தரத்தில் 3908 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். 12,795 மாணவர்கள் 9 பாடங்களிலும் ‘எவ்’ பெற்று சித்தியடையவில்லை என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனா நேற்று தெரிவித்தார். க. பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதை அடிப்படையாகக் கொண்டு அகில இலங்கை ரீதியில் சிறப்பு சித்தி பெற்ற முதல் 10 மாணவர்களின் பெயர்கள் வெளியிடுவதற்கான செய்தியாளர் மாநாடு நேற்று கல்வி அமைச்சில் நடைபெற்றது. பரீட்சை ஆணையாளர் நாயகம் புஷ்பகுமார, அமைச்சின் செயலாளர் எச். எம். குணசேகராவுடன் அமைச்சர் பந்துல குணவர்தனா கலந்துகொண்டு பேசும்பேதே மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார். அகில இலங்கை ரீதியில் திறமை சித்திபெற்று முதல் 10 பேரின் பெயர்களும் நேற்று வெளியிடப்பட்டன. இதில் முதல் 10 இடங்களுக்கும் கொழும்பு, மாத்தறை, கண்டி, ரம்புக்கன உட்பட 13 மாணவ, மாணவிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் டொப் டென் முதற் பத்துப் பேரின் பெயர்ப்பட்டியலில் எந்தவொரு தமிழ் மொழி மூல மாணவனோ மாணவியோ தெரிவாகவில்லை என்றும் அமைச்சர் பந்துல தெரிவித்தார். அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூல மாணவர்கள் எவரும் ஹிலிஜி10 வரிசைக்குள் வரவில்லை எனினும் மாவட்ட மட்டத்தில் முதல் 10 வரிசையில் வரலாம் எனக் கூறிய அமைச்சர் பந்துல மாவட்ட மட்ட, வலய மட்டத்தில் திறமைச் சித்திபெற்றவர்களின் விபரம் இன்று வெளியிடப்படும் என்றும் கூறினார். சகல பாடங்களிலும் ‘ஏ’ சித்திபெற்றவர்கள் மேல் மாகாணத்திலேயே உள்ளனர். இங்கு 2001 மாணவர்கள் சித்திபெற்றுள்ளனர். அதேபோன்று சகல பாடங்களிலும் ஆகக் கூடுதலாக ‘எவ்’ பெற்று சித்தியடையாதவர்களும் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளது. இங்கு 2 692 பேர் ‘எவ்’ பெற்றுள்ளனர். வடக்கு, கிழக்கில் ஆகக் குறைவான மாணவர்களே சகல பாடங்களிலும் ‘எவ்’ பெற்றுள்ளனர். வடக்கில் 64 மாணவர்களும், கிழக்கில் 792 மாணவர்களும் சித்தியடையவில்லை. இம்முறை வெளியாகியுள்ள க. பொ. த சாதாரண தர பெறுபேறுகளுடன் கடந்த வருட பெறுபேறுகளை ஒப்பிடுகையில் சகல பாடங்களிலு ஏ சித்தி பெற்றவர்கள் 2010 ஆம் ஆண்டு 3057 மாணவர்கள், 2011 இல் 3908 மாணவர்கள், சகல பாடங்களிலும் ‘எவ்’ புள்ளிபெற்று சித்தியடையாதவர்கள் 2010 ஆம் ஆண்டு 14, 411 மாணவர்கள், 2011 ஆம் ஆண்டு 12,795 மாணவர்கள் எனவும் பதிவாகியுள்ளது என பரீட்சை ஆணையாளர் டபிள்யூ எம். என். ஜே. புஷ்பகுமார தெரிவித்தார். 463 மாணவர்களின் பெறுபேறுகள் நிறுத்தி வைப்பு அகில இலங்கை ரீதியில் இம்முறை பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுள் 463 பேரின் பரீட்சை பெறுபேறுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. பரீட்சை மண்டபத்தில் ஆளடையாளத்தை உறுதிப்படுத்த தவறியவர்கள் 410 பேர் உட்பட 663 பேரினதும் பரீட்சை பெறுபேறுகள் அனுப்பப்படவில்லை. ஆள்மாறாட்டம், பார்த்தெழுதுதல் போன்ற சம்பவங்களுக்காக இவர்களது பெறுபேறுகள் நிறுத்திவைக்கப்பட்டு ள்ளன. காலியிலுள்ள ஒரு பாடசாலையில் 32 மாணவர்களுடன் பெறுபேறுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இவர்கள் பார்தெழுதியதாக பரீட்சை மண்டப அதிகாரிகளினால் இரகசியமாக அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையின் ஊடாக தெரியவந்துள்ளது. இவர்கள் தொடர்பாக எதிர்வரும் 4ம் திகதி விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.
»»  (மேலும்)

3/28/2012

| |

வடக்கு, கிழக்கு மீள் நிர்மாணத்துக்கு ரூ. 160 பில். செலவீடு

மேலும் துரித செயற்; திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தகவல் 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை அரசாங்கம் வடக்கு கிழக்கு மாகாணங்களின் மீள் நிர்மாண நடவடிக்கை களுக்காக 160 பில்லியன் ரூபாவை செலவிட்டிருக்கிறது. பொருளாதார அபிவிருத்தி துறை அமைச்சின் மேலதிக செயலாளர் நிஹால் சமரவீர, வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தை ஊக்கு விப்பதற்காக அரசாங்கம் 15 பில்லி யன் ரூபாவை செலவிட்டிருக்கிற தென்று கூறினார். கிழக்கு மாகாணம் தேசிய பொருளாதாரத்திற்கு 6 சதவீத பங்களிப்பை இப்போது வழங்கு கின்றது. இது வடமத்திய மாகாணம் மற்றும் ஊவா மாகாணம் பெற்றுக் கொடுக்கும் பங்களிப்பை விட கூடுதலாகும். வடமாகாணம் தேசிய பொரு ளாதாரத்திற்கு 3 சதவீத பங்களிப்பை வழங்குகின்றதென்றும் அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்தார். நாட்டின் வடக்கு, கிழக்கு மாகா ணங்களில் பல்வேறு அமைச்சுகள் பலதரப்பட்ட அபிவிருத்தி திட்டங் களை நடைமுறைப்படுத்தி வருவதாக வும் அவர் கூறினார். தற்போது பல குறுகிய கால திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதுடன், நடுத்தர அளவிலான அபிவிருத்தி திட்டங்களும் இப்போது முடிவுபெறும் நிலையை எட்டியிருக்கின்றது. மின்சார எரிசக்தி துறை அமைச்சு, நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சு, நெடுஞ்சாலைகள் அமைச்சு, போக்குவரத்து அமைச்சு ஆகியன பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தி வருகின்றன. இம் மாகாணங்களில் நடுத்தர அளவிலான அபிவிருத்தி நடவடிக்கைகள் அனைத்துமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இதில் கண்ணிவெடி அகற்றுதல், மீள் குடியேற்றம், வாழ்வாதார அபிவிருத்தி, உட்கட்டமைப்பு அபிவிருத் திக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை ,இராணுவம் இரண்டாயிர த்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினரை கண்ணி வெடி அகற்றுவதற்காக பயன்படுத்தி வருகின்றது. இவற்றிற்கு மேலதிக 6 அணிகள் கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அரசாங்கம் 800 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இவ்விரு மாகாணங்களில் உள்ள 250 கிலோமீற்றர் நீளமான ரயில் பாதைகளை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இத்துடன் வடக்கு, கிழக்கின் மின் விநியோகத் திட்டத்திற்காக அரசாங்கம் 65 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் செலவிட்டுள்ளது. இவ்வாண்டு இறுதிக்குள் யாழ்குடாநாடு தேசிய மின்விநியோக வலையமைப்பில் இணைத்து கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்படுகின்றது. அரசாங்கம் இரணைமடு நீர் விநியோகத்திட்டத்திற்கு 1064மில்லியன் ரூபாவையும், வட மாகாண கிராமிய அபிவிருத்தி திட்டத்திற்கு 600 மில்லியன் ரூபாவையும் செலவிட்டுள்ளது. இந்தத்திட்டங்கள் அனைத்துமே 2013 ம் ஆண்டில் நிறைவுபெறும் என்று பொருளாதார அபிவிருத்தி துறை அமைச்சு தெரிவித்தது
»»  (மேலும்)

| |

அமெரிக்கா அப்பாவி மக்களை படுகொலை செய்கிறது அந்நாட்டு மனித உரிமை மேம்பாட்டாளர் கண்டனம்

அமெரிக்காவின் முன்னணி மனித உரிமைகள் செயற்பாட்டா ளரான வண. ஜெசி ஜெக்ஸன் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இடம்பெற்ற பிறிதொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றி னார். இவர் அமெரிக்காவின் முன்னோடி மனித உரிமை மேம்பாட்டாளராக விளங்கி துப்பாக்கி குண்டுக்கு பலியான கறுப்பு இனத்தைச் சேர்ந்த மார்டின் லூதர் கிங்கின் உதவியாளராக பணியாற்றியிருக்கிறார். ஜெனீவாவில் நடந்த இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், லக்பிம நிவ்ஸ் ஆங்கில வார இதழின் ஆசிரியர் ராஜ்பால் அபேநாயக்க, அமெரிக்காவின் கறுப்பு இன மக்கள் ஆட்சியாளர்களினால் கொடு மைப்படுத்தப்படுகிறார்களா என்று கேட்ட கேள்விக்கு 'ஆம்' என்று கூறுவதற்கு பதில் 'நான் என்ன சொல்வது' என்று கூறினார். இவர் தனது உரையில் மறைமுகமாக அமெரிக்க ஜனாதிபதி ஒபா மாவை தாக்கிப் பேசினார். அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மீது தனது ஆளில்லா விமானங்களின் மூலம் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டு, அப்பாவி ஆண் கள், பெண்கள் மற்றும் சிறுவர்களை குறிப்பாக இன்னுமொரு இனத் தைச் சேர்ந்த மக்களை படுகொலை செய்கிறதே? இதற்கு யார் கார ணம் என்று அந்த ஆசிரியர் தொடர்ந்தும் கேள்வி எழுப்பிய போது பதிலளித்த வண. ஜெசி ஜெக்ஸன், எய்தவன் இருக்கும் போது அம் பின் மீது நாம் குற்றம் சுமத்த முடியுமா? அமெரிக்க நிர்வாகமே இந்தப் படுகொலைகளுக்கான பொறுப்பை ஏற்க வேண்டுமென்று கூறினார். இந்தக் கருத்தின் மூலம் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் அரசாங்கமே ஆப் கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் மனித உயிர்களை பலியெடுப்ப தற்கான பொறுப்பை ஏற்க வேண்டுமென்று அமெரிக்காவின் இந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கண்டனம் தெரிவித்தார். அமெரிக்க அரசாங்கம் அமுலாக்கியுள்ள புதிய தேர்தல் சட்டத்தினால் அந்நாட்டின் 21மில்லியன் கறுப்பின மக்கள் வாக்குரிமையை இழக் கிறார்கள். இந்த சட்டம் கறுப்பின மக்கள் அதிகமாக உள்ள மா நிலங்களையே பாதிக்கின்றது. இதனால் 25சதவீதமான அமெரிக்க பிரஜைகளுக்கு வாக்குரிமை மறுக்கப்படுகிறது. கறுப்பின மக்களின் மனித உரிமைக்காக போராடும் னிதிதிவிஜி அமைப்பு இதுபற்றிய முறைப்பாடொன்றை ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பித்தது. ஆயினும் இது குறித்து மனித உரிமை பேரவை எவ்வித தீர்க்கமான நடவடிக்கையும் எடுக்காமல் அந்தப் பிரேரணையை அப்பால் வைத்து மறைமுகமாக அதனை நிராகரித்தது. இதிலிருந்து அமெரி க்க அரசாங்கம் ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயற்பாடுகளில் எந்தளவிற்கு தனது அதிகாரத்தை பிரயோகித்து வருகிறதென்பதை நாம் புரிந்து கொள்ளலாம். அமெரிக்க அரசாங்கத்தின் மாநில தேர்தல் சட்டங்கள் அமெரிக்காவில் உள்ள சிறுபான்மை மக்களின் சிவில் மற்றும் மனித உரிமைகளை அடக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கிறதென்று அந்நாட்டின் கறுப்பின மக்களின் முன்னேற்றத்திற்காக செயற்பட்டு வரும் தேசிய அமைப்பு (னிதிதிவிஜி) ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் முறைப்பாடொ ன்றை தாக்கல் செய்தது. ஜெனீவா மனித உரிமைகள் பேரவை பொதுவாக லிபியா, சிரியா, ஐவ ரிகோஸ்ட் ஆகிய நாடுகளின் மனித உரிமை மீறல்களை ஆராய் ந்து வருவதுண்டு. 1940ம், 50ம் ஆண்டு காலப்பகுதியில் ஆரம்பிக் கப்பட்ட னிதிதிவிஜி அமைப்பு அமெரிக்காவில் கறுப்பு இன மக்க ளின் சிவில் உரிமை போராட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத் தினதும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை மன்றத்தினதும் பிரச்சினை களை தீர்த்து வைப்பதற்கு உதவுமாறு கோரிக்கைகளை விடுத்தது. இலங்கை போன்ற நாடுகளின் மனித உரிமை மீறல்கள் பற்றி பெரிது படுத்தி ஆய்வுகளை நடத்தி வரும் அமெரிக்கா தனது நாட்டில் உள்ள கறுப்பின மக்களை இவ்விதம் துன்பப்படுத்துகிறது. அமெரிக் காவில் கடந்த ஆண்டு முதல் 15 மாநிலங்களில் இந்த புதிய தேர் தல் சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி ஒருவர் அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்ற அடையாளப் புகைப்படம் கையி ருப்பில் இருந்தால் மட்டுமே அவர் அமெரிக்க பிரஜை என்பதை நிருபித்து தேர்தலில் வாக்களிக்க இடமளிக்கப்படுகிறது. இதனால் உண்மையிலேயே அந்நாட்டின் பிரஜாவுரிமையுடைய கறுப்பு இன மக்கள் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை இழக்கிறார்கள். இது அமெரிக்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல் என னிதிதிவிஜி அமைப்பு குற்றம் சாட்டுகிறது. அமெரிக்க அரசாங்கம் தனது நாட்டில் உள்ள மனித உரிமை மீறல்கள் பற்றி அந்தளவிற்கு அக்கறை காட்டாமல், தமது நாட்டுப் பிரஜைக ளின் மனித உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்கும் இலங்கை போன்ற நாடுகளின் மனித உரிமை மீறல்கள் பற்றி பெரிதுபடுத்தி, துன்புறுத் தும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதை அமெரிக்காவில் உள்ள கறுப்பின மக்களே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று இந்த ஆட்சேபனை குறித்து கருத்து தெரிவித்த சட்டவல்லுநர் ஒருவர் கருத்து தெரிவித்தார். அது மட்டுமன்றி அமெரிக்க சனத்தொகையில் 25 சதவீதமானோருக் கும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள புகைப்படம் இல்லாதிருக்கிறது. அடையாள புகைப்படம் இல்லாத பிரதேசங்க ளில் வாழும் மக்களில் பெரும்பாலானோர் கறுப்பின மக்களாவர்.
»»  (மேலும்)

| |

நல் ஆழுகை மன்றத்திற்கு முதலமைச்சரினால் நிதி ஒதுக்கீடு.

திருகோணமலை நல்ஆழுகை மன்றத்திற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதல்வருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் தனது அமைச்சின் நிதியிலிருந்து சுமார் 5லட்சம் ருபாவினை ஒதுக்கீடு செய்துள்ளார். மேற்படி மன்றமானது தொழில் பயிற்சி முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதாவது வேலைவாப்பற்று இருக்கின்ற யுவதிகளை இனைத்து அவர்களுக்கான கைப்பணிப் பொருட்களை உற்பத்தி செய்தல் பற்றிய பயிற்சி நெறிகளை வழங்கி அவர்களுக்கான தொழில்வாய்ப்பினை மேற்கொண்டு வருகின்றது. இது தொடர்பான அங்குரார்ப்பன நிகழ்வு இன்று (26.03.2012) திருகோணமலை கடலூர் கிராமத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பல்வேறு கைப்பணி பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டதுடன் புதிதாக இணைந்து கொண்ட பயிற்சியாளர்களுக்கான பயிற்சிநெறிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந் நிகழ்வில் முதல்வரினால் பல்வேறு தொழிற்சாதனங்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் கு.நளினகாந்தன், முதலமைச்சர் செயலக திட்டமிடல் பணிப்பாளர் கௌரிதரன், மற்றும் முதலமைச்சர் செயலகத்தின் கணக்காளர் அன்ரனிதாஸ், பிரதேசத்தின் மீன்பிடி தலைவர் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள.
»»  (மேலும்)

3/27/2012

| |

பாத்திமா ஸஹ்ரா பெண்கள் அரபுக்கல்லூரியின் 14வது ஆண்டு நிறைவு மலர் வெளியீடு.

ஓட்டமாவடி பாத்திமா ஸஹ்ரா பெண்கள் அரபுக்கல்லூரியின் 14வது ஆண்டு நிறைவு மலராக ‘அஸ்ஸஹ்ரா’ நூல் வெளியீடு இன்று (25.03.2012) கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது. கல்லூரியின் தலைவர் எம்.எம்.மஹ்மூத் லெப்பை தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேலும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரான எம்.எஸ்.ஜவாகிர்சாலி, ஓட்டமாவடி பிரதேசசபையின் தவிசாளர் கே.வி.எஸ்.ஹமீட், பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர்கள், மற்றும் பல முக்கியஸ்த்தர்களும் கலந்து கொண்டார்கள்.
»»  (மேலும்)

| |

திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் ஆரம்பப்பிரிவு கட்டடம் முதல்வரினால் திறந்து வைப்பு.

கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களது நிதி ஒதுக்கீட்டில் நிர்மானிக்கப்பட்ட திருகோணமலை கோனேஸ்வரா இந்துக்கல்லூரியின் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான கட்டிடம் இன்று (26.03.2012) திறந்து வைக்கப்பட்டது. சுமார் பல மில்லியன் ரூபாய் செலவில் நிர்மானிக்கப்பட்ட மேற்படி கட்டிட திறப்பு விழாவில் திருமலை வலையக்கல்வி பணிப்பாளர், மற்றும் முதலமைச்சரின் திட்டமிடல் பணிப்பாளர் கௌரிதரன், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.
»»  (மேலும்)

| |

தங்கள் யுத்தக் குற்றச்சாட்டுகளை மறைக்கும் அமெரிக்காவுக்கு இலங்கையை தண்டிப்பதற்கு அருகதை இல்லை

இந்நாட்டு மக்களை பயங்கரவாத பிடியில் இருந்து மீட்டு, அவர்களின் வாழ்க்கையை வளமாக்கி வரும் புனிதப் பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் இலங்கை அரசாங்கத்தின் மீது அமெரிக்கா வீராவேசத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கண்டனப் பிரேரணை ஒன்றை நிறைவேற்றி இருக்கின்ற போதிலும் அமெரிக்கா அதைவிட படுமோசமான மனித உரிமை மீறல்களையும் யுத்தக் குற்றச் செயல்களையும் புரிந்துள்ளது என்பதை ஆதாரபூர்வமாக எடுத்துக் காட்டுவதற்காக நியூஸ் வீக் என்ற சர்வதேச அமெரிக்க சஞ்சிகையில் மார்ச் மாதம் 27ம் திகதி வெளிவந்த ஒரு கட்டுரையின் மொழிபெயர்ப்பை இங்கு தருகின்றோம். 1968ல் தென் வியட்னாமில் சுமார் 500 அப்பாவி மைலாய் கிராமத்து மக்களை படுகொலை செய்த அமெரிக்க படையின் பொறுப்பதிகாரி லெப்டினன்ட் வில்லியம் கெலி. 1968ம் ஆண்டு மார்ச் மாதம் 16ம் திகதியன்று வியட்னாமில் உள்ள அமெரிக்க படைகளின் 23வது அணியைச் சேர்ந்த சாலி கொம்பனி என்று அழைக்கப்படும் ஒரு படையணி தென் வியட்னாமின் மை லாய் என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு பின்தங்கிய கிராமத்திற்குள் புகுந்து அங்கு மறைந்திருப்பதாக கூறப்படும் வியட்கொங் கெரில்லா போராளிகளை துவம்சம் செய்யும் பணியை மேற்கொண்டனர். காலை 8 மணிக்கு அந்த கிராமத்திற்குள் புகுந்த அமெரிக்கப்படையினர் பல மணித்தியாலங்களுக்கு பின்னர் அக்கிராமத்தில் இருந்து திரும்பும் போது கிராமத்து மக்களில் 300ற்கும் 500ற்கும் இடைப்பட்ட எண்ணிக்கை யினர் கொல்லப்பட்டனர். இவர்கள் துப்பாக்கி முனையினால் குத்திக் குதறியும் மிக அருகில் இருந்து துப்பாக்கி யினால் சுடப்பட்டும் படுகொலை செய்யப் பட்டனர். தங்களுக்கு ஆபத்து வருகிறதென்று பயந்து சிலர் முழங்கா லிட்டு, பிரார்த்தித்துக் கொண்டிருந்த போதும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த படுகொலை குறித்து 1969ம் ஆண்டில் அமெரிக்க இராணுவ விசாரணை நடைபெற்றது. இந்த படையணிக்கு தலைமை தாங்கிய லெப்டினன்ட் வில்லியம் கெலியின் ஆணைப்படியே நாம் இந்த கிராமத்தவர்களை படுகொலை செய்தோம் என்று இந்த அமெரிக்க படை அணியினர் விசாரணையின் போது தெரிவித்தனர். மைலாயில் படுகொலை செய்யப்பட்டவர்களில் ஒரு சிலர். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சிறு பிள்ளைகளும் பெண்களுமாகும். இறந்தவர்களில் ஒருவர் கூட வியட்கொங் கெரில்லா போராளிகள் அல்ல. இந்த சம்பவமே வியட்னாம் போரில் இருந்து அமெரிக்கா வெளியேறுவ தற்கு அடிதளமாக அமைந்தது. இந்த சம்பவம் 40 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றது. அதே போன்று இன்னுமொரு சம்பவம் ஆப்கானிஸ் தானின் தெற்கு கந்தஹார் மாகாணத் தில் சமீபத்தில் இடம்பெற்றது. அங்கு 16பேர் சுட்டுக் கொல்லப்பட் டனர். அவர்களின் விரல்களும் வெட்டி துண்டிக்கப்பட்டன. இது போன்று ஆப்கானிஸ்தானில் இன்னுமொரு இடத்தில் அமெரிக்க இராணுவத்தினர் மனித நீதியையும் இறந்தவர்களுக்கு மதிப்பளிக்கும் இராணுவ சட்டத்தை மறந்து போர் முனையில் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் மீது சிறுநீர் கழித்த வெட்கக்கேடான சம்பவங்களும் இடம்பெற்றன. மைலாய் மனிதப் படுகொலைக்கு பொறுப்பாளர் என்று தண்டிக்கப்பட்ட அமெரிக்க இராணுவத்தின் லெப்டினன்ட் வில்லியம் கெலி மீது விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை குறித்து அமெரிக்க மக்கள் அந்தளவிற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. அன்று அமெரிக்காவில் உள்ள ஐவரில் நான்கு பேர் இந்த கொலையாளியை விடுவிக்க வேண்டுமென்ற கருத்தை கொண்டிருந்தனர். மைலாய் படுகொலையில் உயிர்தப்பிய சிறுமி உடைகளின்றி தப்பியோடி வரும் காட்சி. இப்போது 50 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்தப் பெண் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். அமெரிக்க படையினரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிர்தப்பிய சிறு குழந்தைகள் அளித்த வாக்கு மூலத்தில் தங்கள் மீது அமெரிக்க படையினர் கைக்குண்டுகளையும் எரிந்ததாக கூறினர். பொதுவாக ஒரு யுத்தத்தின் போது குற்றச் செயல்கள் இடம்பெறுவதுண்டு. மற்ற நாடுகளின் அரசாங்கங்கள் இராணுவத்தினர் புரியும் குற்றச் செயல்களை விசாரணை செய்து, அவர்களை சட்டபூர்வமான முறையில் தண்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்கின்ற போதிலும் அமெரிக்க அரசாங்கம் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தங்கள் நாட்டவர்களை காப்பாற்றுவதற்கான இரகசிய செயற்பாடுகளில் ஈடுபடுவது இந்த விசாரணைகளின் மூலம் இப்போது அம்பலத்திற்கு வந்திருக்கிறது. மைலாய் விசாரணையிலும் இறுதியில் நடந்தது இதுதான். இந்த குற்ற மனிதப் படுகொலைக்கு பொறுப்பான இராணுவ லெப்டினன்ட் வில்லியம் கெலிக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அந்த சிறைத்தண்டனை 10 ஆண்டாக குறைக்கப்பட்டது. இறுதியில் மூன்றரை வருடங்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட பின்னர் லெப்டினன்ட் வில்லியம் கெலி விடுவிக்கப்பட்டார். இதுதான் அமெரிக்க அரசாங்கத்தின் மனித நேயம். அது போன்று ஈராக்கில் அபு ஹிரைப் சிறைச்சாலையில் அப்பாவி கைதிகளை துன்புறுத்திய சார்ஜன் பேல்ஸ் அவ்விதமே ஆகக்குறைந்த தண்டனையுடன் தப்பிவிட்டார். இவர்களில் சிலருக்கு 10 ஆண்டுகால சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. அவர்களும் ஆறரை ஆண்டுகள் சிறையில் இருந்த பின்னர் விடுவிக்கப்பட்டனர். இது போன்று அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் அமெரிக்க இராணுவத்தினரின் குற்றங்கள் சம்பந்தமாக தாக்கல் செய்யப்பட்டும் இருக்கின்றன. இது பற்றி கருத்துத் தெரிவித்த ஒரு அமெரிக்க இராணுவ ஹெலிகொப்டர் விமானி ஜெனரல் டக்ளஸ் மெகாத, பலவீனமான நிராயுதபாணிகளான மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு பதில் அவர்களை கொலை செய்வது கண்டிக்கத்தக்கது என்றார். நிவ்ஸ் வீக் சஞ்சிகையின் விசேட கட்டுரையில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவ்விதம் தங்கள் இராணுவத்தினர் செய்யும் யுத்த அத்துமீறல் குற்றச்சாட்டுகள், மனித உரிமை மீறல்களை மறைக்கும் அமெரிக்க, இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி துன்புறுத்துவது நியாயம்தானா?
»»  (மேலும்)

3/26/2012

| |

வயல் நிலங்களை இழப்பதாக கிழக்கு விவசாயிகள் கவலை

கிழக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்புள்ள முன்னாள் விவசாய நிலங்கள் கால்நடைகளின் மேய்ச்சல் தரையாக அதிகாரிகளால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு ஏறாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காணி பிரச்சனைகள் தொடர்பான நடமாடும் சேவையில் பெருமளவிலான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. தொடர்புடைய விடயங்கள் புனர்வாழ்வு ஏறாவூர் பற்று பிரதேசத்திலுள்ள சில பகுதிகளில் தமது குடியிருப்புகள் மற்றும் வயல் காணிகளின் உரிமை தொடர்பாக தொடர்ந்தும் பிரச்சனைகளை எதிர்நோக்குவதாக இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மாகாண காணி அமைச்சர் விமலவீர திசாநாயக்கவிடம் முஸ்லிம் விவசாயிகள் முறையிட்டனர். போர்க் காலத்தில் முஸ்லிம்களினால் விவசாயத்தில் ஈடுபட முடியாமல் போன சுமார் 5000 ஏக்கர் பரப்பளவு கொண்ட வயல் நிலங்கள் கால்நடைகளின் மேய்ச்சல் தரையாக அதிகாரிகளினால் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தங்களுக்கு அங்கு பயிர்ச் செய்கை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்படுவதாக முஸ்லிம் விவசாயிகள் பலரும் கவலை தெரிவித்தனர். இதனையடுத்து, பல தசாப்தங்களாக மக்களின் குடியிருப்பு பகுதிகளாகவும் விவசாய நிலங்களாகவும் விளங்கிய பிரதேசங்களை கால்நடைகளின் மேய்ச்சல் தரையாக அதிகாரிகள் அடையாளப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கூறினார். இவ்வாறான பிரச்சனைகளே மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு நியாயம் வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கையில் போருக்கு பின்னர் சுதந்திரமான சூழ்நிலை காணப்படுவதாகக் கூறப்பட்டாலும் மூவினங்களும் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் காணிப் பிரச்சனை தொடர்ந்தும் பாரதூரமான விவகாரமாக இருப்பதாக மாகாண காணி அபிவிருத்தி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
»»  (மேலும்)

| |

முப்பது வருடங்களின் பின்னர் துரித மேம்பாடு காணும் வட மாகாண வீதிகள்

வட பகுதியில் கடந்த 3 தசாப்தங்களுக்கு மேலாக நிலவிவந்த யுத்தசூழல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு சுமார் இரண்டரை வருடங்களுக்கு மேல் கடந்துள்ள நிலையில் வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் பல்வேறு வீதிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பிரதான வீதிகள் உள்ளடங்கலாக உள்ளூர் வீதிகள் பலவும் செப்பனிடப்பட்டு வருகின்றன. ஆசியாவின் அதிசயம் என்ற இலங்கை நோக்கி நாட்டை அபிவிருத்தி செய்துவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வீதி அபிவிருத்தியில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார். மனிதாபிமான நடவடிக்கையின்போது இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கானவர்களில் 97 வீதமானவர்கள் முழுமையாக மீள்குடியமர்த்தப்பட்டிருக்கும் நிலையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் பல வீதிகளும் புனரமைக்கப்பட்டுள்ளன. வட பகுதியையும் நாட்டின் ஏனைய பகுதிகளையும் இணைக்கும் பிரதான தரை வழிப்பாதையாகவிருக்கும் ஏ-9 வீதி புதிதாக புனரமைக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளின் உதவியுடன் மீள்புனரமைக்கப்பட்டு வரும் இந்த ஏ-9 வீதி முழுமையாகப் புனரமைக்கப்பட்டதும் குறைந்த நேர காலத்திற்குள் வட பகுதியை மக்கள் சென்றடைய முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அதேநேரம், யாழ்ப்பாணத்தை இணைக்கும் மற்றுமொரு பிரதான வீதியான ஏ-32 வீதியின் அபிவிருத்திப் பணிகளும் நிறைவடையும் கட்டத்தை அடைந்துள்ளன. குறிப்பாக ஏ-15 வீதியில் காணப்படும் சங்குப்பிட்டி பாலம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு புதிய தோற்றத்துடன் கம்பீராக காட்சியளிக்கிறது. நாட்டைப் பொருளாதார ரீதியில் அபிவிருத்தி செய்வதற்கு சிறந்த வீதிக்கட்டமைப்பு மிகவும் அவசியம் என்பதை உணர்ந்திருக்கும் இலங்கை அரசாங்கம் வீதி அபிவிருத்தியில் கூடுதலாகவே கவனம் செலுத்தியுள்ளது. குறிப்பாக நீண்டகாலம் யுத்த சூழலில் மூழ்கியிருந்த வடபகுதியின் வீதிக் கட்டமைப்பு அபிவிருத்தியில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு கூடுதலான கவனம் செலுத்தியுள்ளது. வட மாகாணத்தில் 1960 கிலோ மீற்றர் நீளமான மாகாண வீதிகளும், 7600 கிலோ மீற்றர் நீளமான உள் வீதிகளும் காணப்படுகின்றன. இந்த வீதிகளின் புனரமைப்புப் பணிகளுக்கென ஜனாதிபதி செயலணியின் ஊடாக 2009 ஆம் ஆண்டு 200.82 மில்லியன் ரூபாவும், 2010 ஆம் ஆண்டு 320 மில்லியன் ரூபாவும், 2011 ஆம் ஆண்டு 150 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளன. வட மாகாண வீதி இணைப்புத் திட்டம், பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் உடனடி வீதி அபிவிருத்தித் திட்டம் மற்றும் பிராந்திய வீதி அபிவிருத்தித் திட்டம் என மூன்று கட்டங்களாக வீதி அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. யாழ்ப்பாண மாவட்டத்தில் உலக வங்கியின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள மாகாண வீதி அபிவிருத்தித் திட்டத்தை எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டிருப்பதாக வட மாகாண சபை அறிவித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் 79.8 மில்லியன் ரூபா செலவில் 28 பிரதான வீதி அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. கிளிநொச்சி மாவட்டத்தில் 39. 73 மில்லியன் ரூபா செலவில் 12 பிரதான வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. வவுனியா மாவட்டத்தில் 66.58 மில்லியன் ரூபா செலவிலும் வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதாக வட மாகாண சபை தெரிவிக்கிறது. இவற்றில் பெரும்பாலான வீதிகளின் நிர்மான பணிகள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதுடன் சில வீதிகள் முடியும் தறுவாயில் காணப்படுகின்றன. அதேபோல 2010 ஆம் ஆண்டு யாழ். மாவட்டத்தில் ஜனாதிபதி செயலணியின் ஊடாக வழங்கப்பட்ட நிதியில் 88.5 மில்லியன் ரூபாவில் பல்வேறு வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் கிளிநொச்சி மாவட்டத்தில் 60.10 மில்லியன் ரூபா செலவில் பிரதானமான 10 வீதித் திட்டங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 52.8 மில்லியன் ரூபா செலவில் வீதி அபிவிருத்தித் திட்டங்களும், வவுனியா மாவட்டத்தில் 57.6 மில்லியன் ரூபா செலவிலும், மன்னார் மாவட்டத்தில் 50.9 மில்லியன் ரூபா செலவிலும் வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன. இந்த வீதி அபிவிருத்திப் பணிகள் மூலம் வட மாகாணத்தின் உற்பத்திப் பொருட்களுக்கு வெளி மாவட்டங்களின் பாரிய சந்தை வாய்ப்பை ஏற்படுத்த முடியுமென அரசாங்க அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தற்பொழுது நிலவும் அமைதிச் சூழலில் யாழ். மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறிகள் உள்ளிட்ட விவசாயப் பொருட்களை தரைவழியாக ஏனைய பகுதிகளுக்கு அனுப்ப முடியுமாக இருப்பதாகச் சுட்டிக்காட்டும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் ஏ-9 வீதியின் அபிவிருத்திப் பணிகள் முழுமையாகப் பூர்த்தியடைந்ததும் குறைந்த நேரத்துக்குள் யாழ். உற்பத்திப் பொருட்களை தென்பகுதி சந்தைக்கு அனுப்புவதற்கு முடியுமாகவிருக்கும் என்றும் அவர் கூறுகின்றார். தென் பகுதி சந்தையில் யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்படும் சின்ன வெங்காயம் உள்ளிட்ட விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு கடும் கிராக்கி காணப்பட்ட நிலையில், கடந்த கால யுத்த சூழலால் தமது உற்பத்திப் பொருட்கள் வட பகுதி தவிர்ந்த ஏனைய சந்தைகளுக்கு அனுப்ப முடியாது வட பகுதி விவசாயிகள் தவித்தனர். 30 வருட கால யுத்தம் ஜனாதிபதி அவர்களால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு நாட்டின் சகல பகுதிகளுக்கும் சுதந்திரமாகப் பயணிக்கே கூடிய நிலைமை ஏற்பட்ட பின்னர் வடபகுதியின் பல்வேறு உற்பத்திப் பொருட்கள் தரை வழியாக தென் பகுதிக்கு வர ஆரம்பித்தன. இதனை மேலும் அதிகரிக்கும் நோக்கில் பிரதான தரை வழிப் பாதையான ஏ-9 வீதியை செப்பனிடும் பணிகளை அரசாங்கம் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றது. இந்தப் பணிகள் பூர்த்தி செய்யப்படும் பட்சத்தில் வட பகுதியின் விவசாய உற்பத்திப் பொருட்கள் மற்றும் கடல் உணவுப் பொருட்களை எந்தவிதமான பாதிப்புமின்றி விரைவில் தென்பகுதி சந்தைக்கு கொண்டுவர முடியும். வீதி அபிவிருத்தியானது இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் பாரிய பங்களிப்பைச் செலுத்தியுள்ளது. யாழ். மாவட்டத்தின் அச்சுவேலி பகுதியில் கைத்தொழில் பேட்டையை மீண்டும் புனரமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு வீதிக் கட்டமைப்பு மிகவும் அவசியமானது. வட பகுதியில் அசாங்கம் முன்னெடுத்திருக்கும் வீதி அபிவிருத்திப் பணிகள் அச்சுவேலி கைத்தொழில்பேட்டைக்கும் மிகவும் புத்தூக்கம் அளிப்பவையாக அமைந்திருக்கும். அதேநேரம், யுத்த அழிவுகளிலிருந்து மீண்டுவரும் வடபகுதியில் பல்வேறு வெளிநாட்டு முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. பல்வேறு முதலீட்டாளர்கள் வடக்கின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அங்கு தமது தொழில் பேட்டைகளையும், தொழிற்சாலைகளையும் அமைப்பதற்கு முன்வந்துள்ளனர். இந்த முலீடுகளைத் தொடர்ந்தும் அதிகரிக்கவேண்டு மாயின் வீதிக் கட்டமைப்பு மிகவும் அவசியமானது என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான அரசாங்கம் அடையாளம் கண்டு வீதி அபிவிருத்திப் பணிகளைத் துரித கதியில் முன்னெடுத்து வருகின்றது. கடந்த 30 வருட அமைதியற்ற சூழலில் வடபகுதியில் பிறந்து வளர்ந்த இளம் சமூகத்தினரில் பலர் தற்போதே தமது பிராந்தியங்களில் காப்பெற் வீதிகளைக் கண்டுள்ளனர். இதுவரை காலமும் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்திருந்த இந்த இளம் சமுதாயம் வளமான எதிர்காலத்தைக் கண்டுள்ளது. கூடிய விரைவில் வட பகுதிக்கு அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறியுள்ளார். வட பகுதிக்குச் செல்வதற்கு நீண்ட நேரம் எடுப்பதாலேயே இனங்களுக்கிடையில் சிறிய இடைவெளி காணப்படுவதாகச் சுட்டிக்காட்டியிருந்த அவர் , அதிவேக நெடுஞ்சாலையொன்று அமைக்கப்பட்டால் அந்த இடைவெளி குறைந்துவிடும் என்றும் நம்பிக்கை வெளியிட்டிருந்தார். யாழ்ப்பாணத்துக்கான அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதும் மூன்று நான்கு மணித்தியாலங்களில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தை சென்றடைய முடியுமென்றும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான அரசாங்கம் நாட்டின் அபிவிருத்தியில் காட்டிவரும் அக்கறை மற்றும் வடபகுதியின் வீதி அபிவிருத்தியில் செலுத்தியிருக்கும் சிரத்தை வட பகுதியை மட்டுமன்றி நாட்டின் ஏனைய பகுதிகளையும் அபிவிருத்தி யடைந்த பிரதேசங்களாக மாற்றும் என்ற நம்பிக்கை இலங்கையர்கள் அனைவர் மத்தியிலும் தற்பொழுது பலமாகக் காணப்படுகிறது.
»»  (மேலும்)

| |

முதல்வரினால் சித்தாண்டி புதிய வீதி திறந்துவைப்பு

சித்தாண்டி வினாயகர் கிராமத்தில் முதல்வரின் பணிப்புரையின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்ட சித்தாண்டி புதியவீதி இன்று (25.03.2011) காலை 10.30 மணியளவில் திறந்து வைக்கப்ட்டதுடன், அதனை மக்களிடம் கையளிக்கும் வைபவம் சித்தாண்டி பிள்ளையார் ஆலய முன்றலில் இடம்பெற்றது. நிகழ்வினை ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளர் அவர்கள் தலைமையேற்றி நடாத்தியதுடன், நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கின் முதல்வரும், தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை – சந்திரகாந்தன் கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில் கட்சியின் தேசியசெயலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் , கட்சியின் தேசியப்பொருளாளர் ஆறுமுகம் தேவராசா, கட்சியின் முக்கியஸ்தர் அருண் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் பலரும் கலந்துகொண்டனர். நிகழ்வுகளின்போது மாவடிவேம்பு கிராம மக்களின் அபிவிருத்திகளை முக்கியமாக மணல்வீதிகளை அமைத்தல் மற்றும் மின்சாரம் வழங்குதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட செயற்றிட்ட வேண்டுகொள் ஒன்று முதல்வரிடம் மாவடிவேம்பு பிரதேசத்தின் கட்சி உறுப்பினர் திருப்பதி அவர்களினால் கையளிக்கப்பட்டதுடன், மேலும் பொதுமக்கள் தமது குறைகளையும் முதல்வரிடம் மனுக்களாக சமர்ப்பித்தனர்.
»»  (மேலும்)

| |

முறக்கொட்டான்சேனை சந்தை பொதுமக்கள் பாவனைக்காக கிழக்கு முதல்வரினால் கையளிப்பு.

முறக்கொட்டான்சேனை சந்தை அங்குரார்ப்பன நிகழ்வு இன்று (25.03.201) பிரதேசசபை தவிசாளர் எஸ்.உதயஜீவதாஸ் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்து கொண்டு சந்தையினை திறந்து வைத்து பொது மக்களின் பாவனைக்காக கையளித்தார். இந் நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ப+.பிரசாந்தன், பிரதேசசபை உறுப்பினர்களான ஆ.சிவநேசதுரை, நடராசலிங்கம், நடராசா மற்றும் பிரதேச பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
»»  (மேலும்)

3/25/2012

| |

கிழக்கு மாகாணத்தை வடக்குடன் இணைப்பதைப் பற்றி வடக்குத் தலைமைகள் தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை கிழக்கை வடக்குடன் இணைப்பதா இல்லையா என்பதனை கிழக்கு மக்களே தீர்மானிக்க வேண்டும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பாவற்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலயத்தின் புதிய இரண்டு மாடிக் கடடிடத்தை திறந்து வைத்து உரையாற்றும்போதே தெரிவித்தார். வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பேசி வருகின்றனர். தொடர்ந்தும் உரையாற்றுகையில் இன்று கிழக்கு மாகாணம் சகல துறைகளிலும் துரிதமாக வளர்ச்சி அடைந்து வருகின்றது. எமது பிரதேசத்தின் கல்வித்துறையும் இன்னும் துரிதமாக விரைவாக வளர்ச்சி அடையவேண்டும் என்பதே எமது நோக்கம் அந்த அடிப்படையிலேதான் நாமும் செயற்பட்டு வருகின்றோம். எமது மாணவர்களை நவின தொழில்நுட்ப யுகத்திற்கு ஏற்ப நாம் தயார்ப்படுத்த வேண்டும் எமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியல் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். வெகு விரைவில் கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறான துரிதமான அபிவிருத்தி நோக்கிய பயணத்தில் அரசியலின் பங்கு அளப்பெரியது. நாம் கிழக்கு மாகாண சபையினை பொறுப்பெடுத்த பின்னர்தான் கிழக்கு மாகாணம் துரிதமாக அபிவிருத்தி கண்டு வருகின்றது. தொடர்ந்தும் துரித அபிவிருத்தியுடனான தனித்துவமான பிரதேசமாக எமது கிழக்கு மாகாணம் இருக்க வேண்டும் என்பதே எமது நோக்கம். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்கு உருப்படியான தீர்வுத் திட்டம் எதனையும் முன்வைக்ப்போவதுமில்லை தமிழ்ன் தமிழீழம் என்று மக்களை உசுப்பேற்றி இதுவரை தமிழ் மக்களுக்கு எதனையும் பெற்றுத் தரவில்லை இத்தனை அழிவுகளை சந்தித்த பின்னர் இன்று மாகாணசபை முறைமை பற்றி பேசுகின்றனர். மாகாணசபை முறைமூலம் துரிதமாக கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்து வருகின்றோம். எமக்குப் பின்னர்தான் கூட்டமைப்பினரே மாகாணசபை பற்றிப் பேசுகின்றனர். கூட்டமைப்பினர் மக்களுக்காக எதனையும் செய்யத் தயாராக இல்லை அவர்கள் தமிழ் மக்களுக்காக எதனையும் செய்யப் போவதுமில்லை. கூட்டமைப்பினருடன் பேசுவதற்காக நான் சம்பந்தன் அவர்களுக்கு கடிதம் அனுப்பி மூன்று மாதங்களை நெருங்குகின்றது. இன்னும் பதில் இல்லை. கூட்டமைப்பின் உப தலைவர் செல்வராசா அவர்கள் ஒரு மேடையில் விரைவில் பதில் வரும் என்று பேசினார் அவர் பேசியும் ஒரு மாதம் கடந்துவிட்டது இன்னும் பதில் இல்லை. தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாகப் பேசுவதற்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதத்திற்கு ஒரு பதில் கடிதம் அனுப்ப முடியாத கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்காக எதனைச் செய்யப் போகின்றனர். கூட்டமைப்பினரும் வடக்குத் தலைமைகளும் வடக்கு கிழக்கு இணைப்புப் பற்றிப் பேசுகின்றனர். கிழக்கை வடக்குடன் இணைப்பதற்கு வடக்கு தலைமைகள் தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை கிழக்கை வடக்குடன் இணைப்பதா இல்லையா என்பதனை கிழக்கு மக்களே தீர்மானிக்க வேண்டும். கடந்தகால அனுபவங்கள் எமக்கு பல படிப்பினைகளை தந்திருக்கின்றன. வடக்கு கிழக்கு இணைந்திருப்பதால் கிழக்கு மாகாணம் இவ்வாறு துரிதமாக அபிவிருத்தி காண முடியாது. வடக்கைச் சேர்ந்தவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை தாழ்த்தப்பட்டவர்களாக பார்க்ககின்ற மனப்பாங்கு இன்னும் மாறவில்லை. நான் எட்டு வருடங்களுக்கு மேல் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தபோது பல அனுபவங்களைச் சந்தித்து இருக்கின்றேன். மட்டக்களப்பான் மடையன் என்றும் மந்திரவாதிகள் என்றும் சொல்வார்கள். நாம் அவர்கள் பக்கம் இருந்தால் எம்மை நல்லவர்கள் என்று சொல்வார்கள் ஏதாவது அவர்களுக்கு எதிராக சொல்லிவிட்டால் துரோகி என்பார்கள். போராட்ட காலங்களில் பாரிய சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தவர்கள் கிழக்கு மாகாணப் போராளிகளே அவ்வாறான சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த போராளிகளை வெருகலில் படுகொலை செய்தார்கள். கடந்தகால கசப்பான அனுபவங்கள் எப்படி இருப்பினும் மாகாணசபை முறைமை மூலம் கிழக்கு மாகாணம் துரிதமாக அபிவிருத்தி அடைய வேண்டும் எமது மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே எமது எண்ணம் அதற்கிணங்க மக்களும் சந்தித்து உண்மைகளை உணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். கிழக்கு மாகாணத்தை வடக்குடன் இணைப்பதைப் பற்றி வடக்குத் தலைமைகள் தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை கிழக்கை வடக்குடன் இணைப்பதா இல்லையா என்பதனை கிழக்கு மக்களே தீர்மானிக்க வேண்டும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பாவற்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலயத்தின் புதிய இரண்டு மாடிக் கடடிடத்தை திறந்து வைத்து உரையாற்றும்போதே தெரிவித்தார். வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பேசி வருகின்றனர். தொடர்ந்தும் உரையாற்றுகையில் இன்று கிழக்கு மாகாணம் சகல துறைகளிலும் துரிதமாக வளர்ச்சி அடைந்து வருகின்றது. எமது பிரதேசத்தின் கல்வித்துறையும் இன்னும் துரிதமாக விரைவாக வளர்ச்சி அடையவேண்டும் என்பதே எமது நோக்கம் அந்த அடிப்படையிலேதான் நாமும் செயற்பட்டு வருகின்றோம். எமது மாணவர்களை நவின தொழில்நுட்ப யுகத்திற்கு ஏற்ப நாம் தயார்ப்படுத்த வேண்டும் எமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியல் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். வெகு விரைவில் கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறான துரிதமான அபிவிருத்தி நோக்கிய பயணத்தில் அரசியலின் பங்கு அளப்பெரியது. நாம் கிழக்கு மாகாண சபையினை பொறுப்பெடுத்த பின்னர்தான் கிழக்கு மாகாணம் துரிதமாக அபிவிருத்தி கண்டு வருகின்றது. தொடர்ந்தும் துரித அபிவிருத்தியுடனான தனித்துவமான பிரதேசமாக எமது கிழக்கு மாகாணம் இருக்க வேண்டும் என்பதே எமது நோக்கம். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்கு உருப்படியான தீர்வுத் திட்டம் எதனையும் முன்வைக்ப்போவதுமில்லை தமிழ்ன் தமிழீழம் என்று மக்களை உசுப்பேற்றி இதுவரை தமிழ் மக்களுக்கு எதனையும் பெற்றுத் தரவில்லை இத்தனை அழிவுகளை சந்தித்த பின்னர் இன்று மாகாணசபை முறைமை பற்றி பேசுகின்றனர். மாகாணசபை முறைமூலம் துரிதமாக கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்து வருகின்றோம். எமக்குப் பின்னர்தான் கூட்டமைப்பினரே மாகாணசபை பற்றிப் பேசுகின்றனர். கூட்டமைப்பினர் மக்களுக்காக எதனையும் செய்யத் தயாராக இல்லை அவர்கள் தமிழ் மக்களுக்காக எதனையும் செய்யப் போவதுமில்லை. கூட்டமைப்பினருடன் பேசுவதற்காக நான் சம்பந்தன் அவர்களுக்கு கடிதம் அனுப்பி மூன்று மாதங்களை நெருங்குகின்றது. இன்னும் பதில் இல்லை. கூட்டமைப்பின் உப தலைவர் செல்வராசா அவர்கள் ஒரு மேடையில் விரைவில் பதில் வரும் என்று பேசினார் அவர் பேசியும் ஒரு மாதம் கடந்துவிட்டது இன்னும் பதில் இல்லை. தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாகப் பேசுவதற்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதத்திற்கு ஒரு பதில் கடிதம் அனுப்ப முடியாத கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்காக எதனைச் செய்யப் போகின்றனர். கூட்டமைப்பினரும் வடக்குத் தலைமைகளும் வடக்கு கிழக்கு இணைப்புப் பற்றிப் பேசுகின்றனர். கிழக்கை வடக்குடன் இணைப்பதற்கு வடக்கு தலைமைகள் தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை கிழக்கை வடக்குடன் இணைப்பதா இல்லையா என்பதனை கிழக்கு மக்களே தீர்மானிக்க வேண்டும். கடந்தகால அனுபவங்கள் எமக்கு பல படிப்பினைகளை தந்திருக்கின்றன. வடக்கு கிழக்கு இணைந்திருப்பதால் கிழக்கு மாகாணம் இவ்வாறு துரிதமாக அபிவிருத்தி காண முடியாது. வடக்கைச் சேர்ந்தவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை தாழ்த்தப்பட்டவர்களாக பார்க்ககின்ற மனப்பாங்கு இன்னும் மாறவில்லை. நான் எட்டு வருடங்களுக்கு மேல் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தபோது பல அனுபவங்களைச் சந்தித்து இருக்கின்றேன். மட்டக்களப்பான் மடையன் என்றும் மந்திரவாதிகள் என்றும் சொல்வார்கள். நாம் அவர்கள் பக்கம் இருந்தால் எம்மை நல்லவர்கள் என்று சொல்வார்கள் ஏதாவது அவர்களுக்கு எதிராக சொல்லிவிட்டால் துரோகி என்பார்கள். போராட்ட காலங்களில் பாரிய சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தவர்கள் கிழக்கு மாகாணப் போராளிகளே அவ்வாறான சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த போராளிகளை வெருகலில் படுகொலை செய்தார்கள். கடந்தகால கசப்பான அனுபவங்கள் எப்படி இருப்பினும் மாகாணசபை முறைமை மூலம் கிழக்கு மாகாணம் துரிதமாக அபிவிருத்தி அடைய வேண்டும் எமது மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே எமது எண்ணம் அதற்கிணங்க மக்களும் சந்தித்து உண்மைகளை உணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
»»  (மேலும்)

| |

முதலமைச்சரின் அபிவிருத்திப் பணியில் இணைந்து கொண்ட யோகேஸ்வரன் எம்.பி.

கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தின் பல பாகங்களிலும் பல்வேறு அபிவிருத்திட்டங்களை நாளுக்கு நாள் செய்து கொண்டே வருகின்றார். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதுவுமே செய்யாது பல விமர்சனங்களை முன்வைத்தே வருகின்றார்கள். அந்த வகையிலே அதில் முதலிடம் வகிப்பவர் வேறு யாருமில்லை எமது மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பிக்களில் ஒருவரான சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆவார். இவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட ரீதியிலும் பொதுவாகவும் முதலமைச்சரை விமர்சித்துக் கொண்டே வருபவர். அப்படி இருந்தும். இன்று(23.03.2012) கிழக்கு மாகாண முதலமைச்சர் வாழைச்சேனை நாசிவன்தீவு மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்களை கையளித்து கொண்டிருந்த வேளையில் தானும் அந் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார். பாருங்கள் எவ்வளவு விமர்சனங்களை செய்து கொண்டு வந்த பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தற்போது முதலமைச்சரின் அபிவிருத்தி திட்டங்களைக் கண்டு வியந்து தற்போது அவருடன் இணைந்து செயற்படுகின்றார். இவரைப் போல் பலர் தொடர்ந்து முதலமைசமைச்வருடன் சேர்ந்து இயங்கவதற்கு தயாராக இருப்பதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுருக்கின்றன. மட்டக்களப்பு கல்லடியில் கடந்த 18.03.2012 அன்று இடம் பெற்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின ;தேசிய மாநாட்டின் வெளிப்பாடுதான் எம்.பி யோகேஸ்வரன் இணைவிற்கு காரணம் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்
»»  (மேலும்)

3/24/2012

| |

உள் விவகாரங்களில் தலையீடு செய்ய சர்வதேசம் பிரேரணையை பயன்படுத்தலாகாது

கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கல் வீசுகின்றவர்கள் தமக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து முதலில் கவனம் செலுத்துவது மிக அவசியம் என்று மனித உரிமைகள் தொடர் பான ஜனாதிபதியின் விசேட தூதுவரும், அமைச்சருமான மஹிந்த சமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 19வது மாநாட்டில் அமெரிக்கா, இலங்கைக்கு எதிராக பிரேரணையொன்றை கொண்டு வந்திருந்தது. அப்பிரேரணை நேற்று முன்தினம் வாக்கெடுப்புக்கு எடுக்கப்பட்டது. இங்கு இலங்கை சார்பில் விசேட உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, ஜெனீவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டுக்கு கொண்டு வந்த இப்பிரேரணையானது காண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கல் வீசும் செயலை ஒத்ததேயன்றி வேறில்லை. இதனை எவரும் மறுக்க மாட்டார்கள். ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும், பலஸ்தீனிலும் இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்காவோ அவர்களது கூட்டாளிகளோ கண்டு கொள்கிறார்களுமில்லை அவற்றை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகளை எடுக்கின்றார்களுமில்லை. அவை குறித்து பேசவே அவர்கள் தயாரில்லை. இப்படியானவர்கள்தான் எம்மை நோக்கி சுட்டு விரலை நீட்டுகின்றார்கள். எமக்கு எதிராகப் பிரேரணை கொண்டு வருகின்றார்கள். ஆனால் அவர்கள் தமது ஏனைய நான்கு விரல் களும் தம்மையே அடையாளம் காட்டுகின்றன என்பதை மறந்துவிடுகின்றார்கள். அதனால்தான் அடுத்தவரை குற்றம் சாட்ட முன்னர் அதற்குரிய தகுதி எம்மிடம் இருக்கிறதா என்பதை முதலில் பரிசீலித்துக் கொள்வது மிக அவசியம் என வலியுறு த்தப்படுகின்றது. எமது நாடு பயங்கரவாதத்தின் பிடியில் 30 வருடங்கள் சிக்கி சின்னாபின்னமாகின. அதன் கோரப் பிடியிலிருந்து 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி இந்த நாடு விடுவிக்கப்பட்டது. இதற்கிடையில் தான் அமெரிக்கா இப்படியான பிரேரணையைக் கொண்டு வந்திருக்கின்றது. ஆனால், பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுபட்ட நாட்டை மீளக் கட்டியெழுப்பவும், இந்நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவென உள்நாட்டு செயன்முறை வெளியிடப்பட்டுள்ளன. அது வெளியாகி மூன்று மாதங்கள்தான் ஆகின்றன. அந்த செயன்முறையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் பல விதமான நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளது. பல் கலாசார, பல்மொழி, பல்லின, பல சமய செயற்பாடுகளைக் கொண்ட நாடாக இந்நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களும் அவற்றின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றன. தேசிய நல்லிணக்க த்தையும், இன ஒற்றுமையையும் அடிப்படையாகக் கொண்டதாக இத்திட்டங்கள் அமைந்திருக்கின்றன. இவ்வாறான சூழ்நிலையில் எமது செயற்பாடுகளைத் தொடர்வதற்கு கால அவகாசம் வழங்காமல் இவ்வாறு பிரேரணை கொண்டு வருவது எந்த வகையில் நியாயம். இலங்கையானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஒத்துழைப்புடனேயே செயற்பட்டு வருகின்றது. இதன் பின்னரும் அவ்வாறே செயற்படும். அதனால், இப் பிரேரணையை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இதன் காரணத்தினால் தான் இப்பிரேரணையானது வெளிநாட்டவர் இலங்கையில் தலையீடு செய்வதற்கான ஒரு தந்திரமாக கருத வேண்டியுள்ளது. இதேநேரம் இம்மாநாட்டில் இலங்கைக்கு ஆதரவளித்து உரையாற்றிய சீன நாட்டுத்தூதுவர் மிகக் குரூரமான பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுபட்டுள்ள இலங்கையை மீளக் கட்டியெழுப்ப சர்வதேச சமூகம் உதவ வேண்டுமே ஒழிய, அதன் சுபீட்சத்திற்குத் தடைக் கல்லாக இருந்துவிடக் கூடாது என வலியுறுத்தினார். இதேபோல் இம்மாநாட்டில் இலங்கைக்கு ஆதரவு நல்கிய கியூபா நாட்டுப் பிரதிநிதி உரையாற்றும் போது; இப்பிரேரணையானது இலங்கையின் இறைமையில் தலையீடு செய்வதற்கு வழிவகுப்பது போல் அமைந்திருப்பதோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கொள்கையை சிதைக்கும் வகையிலும் காணப்படுகின்றது என்று குறிப்பிட்டிருக்கின்றார். எந்தவொரு நாட்டுக்கும் எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு நாம் ஆதரவு நல்க மாட்டோம் என பங்களாதேச நாட்டின் தூதுவர் இம்மாநாட்டில் உரையாற்றிய போது குறிப்பிட்டதுடன் இலங்கைக்கு ஆதரவும் நல்கினார். ஆகவே, இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்வதற்கு இப்பிரேரணையை சர்வதேசம் ஒருபோதும் பயன்படுத்தலாகாது என்பதை நாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
»»  (மேலும்)

3/19/2012

| |

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய மாநாட்டில் 15000 க்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்பு

»»  (மேலும்)

3/18/2012

| |

TMVP's first national party conference

»»  (மேலும்)

3/17/2012

| |

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு எதிர் வரும் 18.03.2012

 தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு எதிர் வரும் 18.03.2012 ஞாயிறு அன்று கல்லடி சிவாநந்த பாடசாலை விளையாட்டு அரங்கில்...... இதன் முன் ஏற்பாட்டு பணிகள் ஒரு கண்ணோட்டம்.
»»  (மேலும்)

| |

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாட்டு நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் இணையத்தளங்கள்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு எதிர்வரும் 18ம் திகதி மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற இருக்கின்றது. இவ் மாநாட்டு நிகழ்வுகள் 18 ம் திகதி காலை 09.00 மணிமுதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் இணையத்தளங்கள்
»»  (மேலும்)

| |

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய மாநாடு

»»  (மேலும்)

3/16/2012

| |

தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் முதலாவது மாநாடு - மட்டக்களப்பு நகரம் களைகட்டுகின்றது

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் முதலாவது தேசியமாநாட்டு ஏற்பாடுகளை ஒட்டி மட்டக்களப்பு நகரமும் மட்டக்களப்பு மாவட்டமும் மிகவூம் பரபரப்பாக முன்னேற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. மாநாடு இடம்பெறவிருக்கும் கல்லடி சிவானந்தா விளையாட்டரங்குஇ மாநாட்டு மண்டப அரங்கு சோடனைகள் என்று களைகட்டி வருகின்றது. கட்கித் தலைவா; சந்திரகாந்தன்இ மாகாணசபை உறுப்பினர்கள்இ கட்சி முக்கியஸ்தர்கள்; என்பலரும் இரவூ பகல் பாராது மாநாட்டு வேலைகளில் மும்முரமாக செயற்பட்டு வருகின்றனர். கிழக்கு மாகாண வரலாற்றில் ஒருபோதும் இல்லாதவாறு மிகபிரமாண்டமான முறையில் இடம்பெறவூள்ள இத்தேசிய மாநாட்டுக்கு சுமார் 10000ற்கும் அதிகமானோர் பங்கெடுப்பர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
»»  (மேலும்)

3/09/2012

| |

இலங்கை குறித்த அமெரிக்கத் தீர்மானம் சமர்ப்பிப்பு

இலங்கை விவாகாரம் தொடர்பாக ஐ நா சபையின் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா ஒரு தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளது.
பயங்கரவாத்த்துக்கு எதிரான நடவடிக்கைகளை ஒரு நாடு எடுக்கும் போது அது, மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பிரகடனம், மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச இணக்கப்பாடுகள், அகதிகள் மற்றும் மனிதநேய சட்டங்கள் மற்றும் இது சம்பந்தமான பிற சட்டங்களுக்கு உட்பட்டுதான் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இலங்கை அரசால் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இலங்கையின் தேசிய நல்லிணக்கத்துக்கு உதவக் கூடும் என்று அந்தத் தீர்மானம் கூறுகிறது.

குறிப்பாக அத்தீர்மானம் மூன்று கருத்துக்களை வலியுறுத்துகிறது.சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் நடைபெற்றது மற்றும் பலவந்தமாக கடத்தப்பட்டு காணமல் போவது போன்றவை தொடர்பில் நம்பகத் தன்மை வாய்ந்த விசாரணை வேண்டும் என்றும் வட பகுதியில் இருந்து படையினரை விலக்கிக் கொள்வதுடன் அதிகாரப் பகிர்வு அளித்து அரசியல் தீர்வு காண வேண்டும் என்றும் ஆணைக் குழு அளித்த பரிந்துரைகளை வரவேற்பதாகக் கூறும் அமெரிக்கா அதே நேரம் அக்குழு சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டுள்ளது குறித்த விடயங்களை சரியாக ஆராயவில்லை என்று கவலைதெரிவித்துள்ளது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை இலங்கை அரசு அமல்படுத்த வேண்டும். இலங்கைவாழ் மக்கள் அனைவருக்கும் நீதி, சமத்துவம், பொறுப்புடைமை மற்றும் நல்லிணக்கம் கிடைப்பதை உறுதி செய்யக் கூடிய சட்டரீதியான மேலதிகல நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இரண்டாவதாக ஆணைக்குழுவின் பரிந்துறைகளை நடைமுறைப்படுத்தவும், சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டது குறித்து ஆராயவும் இலங்கை அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகள் மற்றும் இனி எடுக்க உத்த்தேசித்துள்ள நடவடிக்கைகள் பற்றி இலங்கை அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது
மேற்படி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைகள், தொழில்நுட்ப உதவிகளை மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரின் அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட விசேட தொடர்புடைய நடைமுறைகள் வழங்குவதையும் அவற்றை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதையும் இத் தீர்மானம் ஊக்குவிக்கிறது. அத்துடன் அத்தகைய உதவி வழங்கல் குறித்து ஐ நா மனித உரிமை பேரவையின் 22 ஆவது கூட்டத்தொடரில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தை அமெரிக்கத் தீர்மானம் கோரியுள்ளது.
அதே நேரம் இலங்கை அரசுக்கு எதிரான விமர்சனங்கள் ஏதும் இதில் இடம்பெறவில்லை.
»»  (மேலும்)

| |

இலங்கை விவகாரத்தில் மேற்கு நாடுகளின் முயற்சி வெற்றியடையாது

Flag of Sri Lanka

மேற்குலக நாடுகளும், அமெரிக்காவும் ஓர் அணி சேர்ந்து இல ங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் மீது அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக்கூடிய பிரேரணை ஒன்றை ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேர வைக் கூட்டத்தில் முன்மொழியும் செயற்பாடுகள் இலங்கையை தோல்வி யடைந்த நாடு என்று பட்டம் சூட்டி ஒரு அரசாங்க மாற்றத்தை ஏற்படுத் துவதற்கு மேற்கொள்ளும் முயற்சி எக்காரணத்தாலும் வெற்றி பெறப் போவதில்லை.
அமெரிக்கா போன்ற நாடுகளின் அச்சுறுத்தலுக்கு நாம் அடிபணிவது எமது நாட்டின் இறைமையையும் சுதந்திரத்தையும் அவற்றிற்கு தாரைவார்க்கும் ஒரு செயலாகவே அமையும்.
ஒரு இறைமையுடைய நாட்டின் உள் விவகாரங்களில் தலையீடு செய்து, துன்புறுத்தும் வல்லரசுகளையும், நாம் தோல்வியடைந்த நாடு என்ற அட்டவணையிலேயே சேர்த்துக் கொள்ள வேண்டும். இது ஒரு நாட்டின் மனித உரிமையை மீறும் செயலாகவே நாம் கருத வேண்டியுள்ளது.
சமீபத்தில் அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் தங்கள் நாட்டுக்கு எதிராக செய ற்படுபவர்கள் அமெரிக்க பிரஜைகளாக இருந்தாலும் அல்லது வெளிநாட் டவர்களாக இருந்தாலும் அவர்கள் அமெரிக்காவில் இருந்தாலும் வெளி நாட்டில் இருந்தாலும் அவர்களை சுட்டுக் கொல்வதற்கு அமெரிக்க பாது காப்பு படையினருக்கு பூரண உரிமை இருக்கிறதென்று பகிரங்கமாக அறி வித்துள்ளார்.
இவ்விதம் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறிவரும் அமெரிக்காவுக்கும் அதன் நேசநாடுகளுக்கும் இலங்கை போன்ற நாடுக ளின் மனித உரிமை மீறல்கள் பற்றி கேட்பதற்கு என்ன தகுதி இருக் கிறதென்று நாம் கேட்க விரும்புகிறோம்.
அமெரிக்க படைகள் நேட்டோ படைகளுடன், பிரிட்டிஷ் படைகளுடனும் இணைந்து ஆப்கானிஸ்தன், ஈராக், லிபியா, சிரியா ஆகிய நாடுகளின் இறைமையை துச்சமாக மதித்து மனிதப் படுகொலைகளை கடந்த காலத் தில் மேற்கொண்டன.
இப்போதும் மேற்கொண்டு வருகின்றன. பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற அச்சுறுத்தலினால் மற்ற நாடுகள் அமெரிக்கா வைப் பார்த்து மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை சுமத்த தயங்குகி ன்றன. அவ்விதம் நடந்து கொண்டால் தங்களுக்கும் ஈராக், லிபியா, ஆப் கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளுக்கு ஏற்பட்டது போன்ற பாரதூர மான விளைவுகள் ஏற்படும் என்று தயங்குகின்றன.
இந்த சந்தர்ப்பத்தில் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் இல ங்கை பிரதிநிதியாக இருக்கும் திருமதி தமரா குணநாயகம் மனித உரி மைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடு களும், அமெரிக்காவும் எடுத்துவரும் அநீதிகள் குறித்து பல உண்மைத் தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.
அமெரிக்க இலங்கைக்கு எதிரான தங்களது நகல் பிரேரணையில் எதை எடு த்துரைக்க விரும்புகிறது என்பதை நாம் ஆராய்வது அவசியம். அமெரி க்கா கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தவறு என்று எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை. அத்துடன் இல ங்கையில் திட்டமிட்ட அடிப்படையில் மனித உரிமைகள் மீறப்படவி ல்லை என அமெரிக்கா கூறியிருக்கிறது.
அமெரிக்கா கூறுவதில் ஒரு விடயமே தெளிவாக இருக்கிறது. நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரி சுகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என்பதில் தங்களு க்கு நம்பிக்கை இல்லை என்ற கருத்தையே அமெரிக்கா வலியுறுத்துகிற தென்று திருமதி தமரா குணநாயகம் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக இருந்து வரும் திருமதி தமரா குணநாயகம், இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா கண்டனப் பிரே ரணை ஒன்றை கொண்டு வருவதில் ஆர்வம் காண்பித்து வருவதற்கான காரணத்தை சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அரசாங்கம் எங்களுடைய நோக்கங்களை அடிப்படையாக வைத்து தீர்மானிக்கின்றதே ஒழிய, உண்மையான யதார்த்தத்தை பற்றி அமெரி க்கா சிந்திக்க தவறியுள்ளது என்று தெரிவித்த திருமதி குணநாயகம், அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டை பெரும்பாலான நாடுகள் ஏற்றுக் கொள்ளத்தயாராக இல்லை என்று தெரிவித்தார்.
நாம் இலங்கையின் செயற்திறனை குறைவாகவோ அல்லது அளவுக்கு அதி கமாகவோ மதிப்பீடு செய்யலாகாது என்று தெரிவித்த திருமதி குணநாய கம், எங்கள் நாட்டின் இறைமையை பாதுகாப்பதற்கான இந்தப் புனிதப் போரில் கடைசி நிமிடம் வரை போராட வேண்டுமென்று அவர் தெரிவி த்தார்.
இப்போது மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கைக்கு ஆதரவான நிலை ப்பாடே தலைதூக்கியிருக்கிறது. ஆயினும் இது விடயத்தில் நாம் மேலும் முயற்சிகளை எடுப்பது அவசியம். எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கொள்கை ரீதியிலான நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பத னால் நம்நாட்டு மக்கள் ஜனாதிபதியை ஒரே குரலில் ஆதரிக்கிறார்கள். இது சர்வதேச ரீதியில் இலங்கையின் மதிப்பை உயர்த்தியுள்ளது.
பிரிட்டிஷ் அமைச்சர் ஜெரமி பிரவுனும், நவனீதம் பிள்ளையும் இலங்கை யில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற கருத்தை ஆதரிக்கிறார் கள். அவர்கள் மனதில் எத்தகை மாற்றம் செய்ய வேண்டுமென்று எங்க ளுக்கு தெரியாது.
இவர்கள் எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையி டுவதை நாம் ஏற்க முடியாது. நாம் அவ்விதம் செய்தால் எமது தாய் நாட்டின் இறைமையையும் சுதந்திரத்தையும் அவர்களிடம் தாரை வார்த்து கொடுப்பதற்கு ஒப்பாக அமையும் என்றும் திருமதி குணநாயகம் தெரிவி த்தார்.
அமெரிக்காவும், அதன் மேற்குலக நேச நாடுகளும் மனித உரிமைகள் பேர வையில் பொய், புரட்டு, மாறுபட்ட நிலைப்பாடுகள் கையாளப்படுகின்றன. பெரிய வல்லரசுகள் மனித உரிமை பேரவையையும் வளர்முக நாடுகளை துன்புறுத்தும் ஒரு ஆயுதமாக பயன்படுத்த இப்போது நடவடிக்கை எடு த்து வருகின்றது.
இந்த வல்லரசு நாடுகள் தாங்கள் முன்னர் ஆட்சி புரிந்த நாடுகளின் இயற்கை மற்றும் பொருளாதார வளங்களை சூறையா டுவதில் ஒரு புதிய ஆர்வத்துடன் செயற்படுவதும், மனித உரிமை பேர வையில் இன்று உருவாகியிருக்கின்ற பிரச்சினைக்கு ஒரு காரணமாகும் என்றும் அவர் கூறினார்.மேற்குலக நாடுகளும், அமெரிக்காவும் ஓர் அணி சேர்ந்து இல ங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் மீது அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக்கூடிய பிரேரணை ஒன்றை ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேர வைக் கூட்டத்தில் முன்மொழியும் செயற்பாடுகள் இலங்கையை தோல்வி யடைந்த நாடு என்று பட்டம் சூட்டி ஒரு அரசாங்க மாற்றத்தை ஏற்படுத் துவதற்கு மேற்கொள்ளும் முயற்சி எக்காரணத்தாலும் வெற்றி பெறப் போவதில்லை.
அமெரிக்கா போன்ற நாடுகளின் அச்சுறுத்தலுக்கு நாம் அடிபணிவது எமது நாட்டின் இறைமையையும் சுதந்திரத்தையும் அவற்றிற்கு தாரைவார்க்கும் ஒரு செயலாகவே அமையும்.
ஒரு இறைமையுடைய நாட்டின் உள் விவகாரங்களில் தலையீடு செய்து, துன்புறுத்தும் வல்லரசுகளையும், நாம் தோல்வியடைந்த நாடு என்ற அட்டவணையிலேயே சேர்த்துக் கொள்ள வேண்டும். இது ஒரு நாட்டின் மனித உரிமையை மீறும் செயலாகவே நாம் கருத வேண்டியுள்ளது.
சமீபத்தில் அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் தங்கள் நாட்டுக்கு எதிராக செய ற்படுபவர்கள் அமெரிக்க பிரஜைகளாக இருந்தாலும் அல்லது வெளிநாட் டவர்களாக இருந்தாலும் அவர்கள் அமெரிக்காவில் இருந்தாலும் வெளி நாட்டில் இருந்தாலும் அவர்களை சுட்டுக் கொல்வதற்கு அமெரிக்க பாது காப்பு படையினருக்கு பூரண உரிமை இருக்கிறதென்று பகிரங்கமாக அறி வித்துள்ளார்.
இவ்விதம் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறிவரும் அமெரிக்காவுக்கும் அதன் நேசநாடுகளுக்கும் இலங்கை போன்ற நாடுக ளின் மனித உரிமை மீறல்கள் பற்றி கேட்பதற்கு என்ன தகுதி இருக் கிறதென்று நாம் கேட்க விரும்புகிறோம்.
அமெரிக்க படைகள் நேட்டோ படைகளுடன், பிரிட்டிஷ் படைகளுடனும் இணைந்து ஆப்கானிஸ்தன், ஈராக், லிபியா, சிரியா ஆகிய நாடுகளின் இறைமையை துச்சமாக மதித்து மனிதப் படுகொலைகளை கடந்த காலத் தில் மேற்கொண்டன.
இப்போதும் மேற்கொண்டு வருகின்றன. பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற அச்சுறுத்தலினால் மற்ற நாடுகள் அமெரிக்கா வைப் பார்த்து மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை சுமத்த தயங்குகி ன்றன. அவ்விதம் நடந்து கொண்டால் தங்களுக்கும் ஈராக், லிபியா, ஆப் கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளுக்கு ஏற்பட்டது போன்ற பாரதூர மான விளைவுகள் ஏற்படும் என்று தயங்குகின்றன.
இந்த சந்தர்ப்பத்தில் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் இல ங்கை பிரதிநிதியாக இருக்கும் திருமதி தமரா குணநாயகம் மனித உரி மைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடு களும், அமெரிக்காவும் எடுத்துவரும் அநீதிகள் குறித்து பல உண்மைத் தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.
அமெரிக்க இலங்கைக்கு எதிரான தங்களது நகல் பிரேரணையில் எதை எடு த்துரைக்க விரும்புகிறது என்பதை நாம் ஆராய்வது அவசியம். அமெரி க்கா கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தவறு என்று எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை. அத்துடன் இல ங்கையில் திட்டமிட்ட அடிப்படையில் மனித உரிமைகள் மீறப்படவி ல்லை என அமெரிக்கா கூறியிருக்கிறது.
அமெரிக்கா கூறுவதில் ஒரு விடயமே தெளிவாக இருக்கிறது. நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரி சுகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என்பதில் தங்களு க்கு நம்பிக்கை இல்லை என்ற கருத்தையே அமெரிக்கா வலியுறுத்துகிற தென்று திருமதி தமரா குணநாயகம் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக இருந்து வரும் திருமதி தமரா குணநாயகம், இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா கண்டனப் பிரே ரணை ஒன்றை கொண்டு வருவதில் ஆர்வம் காண்பித்து வருவதற்கான காரணத்தை சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அரசாங்கம் எங்களுடைய நோக்கங்களை அடிப்படையாக வைத்து தீர்மானிக்கின்றதே ஒழிய, உண்மையான யதார்த்தத்தை பற்றி அமெரி க்கா சிந்திக்க தவறியுள்ளது என்று தெரிவித்த திருமதி குணநாயகம், அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டை பெரும்பாலான நாடுகள் ஏற்றுக் கொள்ளத்தயாராக இல்லை என்று தெரிவித்தார்.
நாம் இலங்கையின் செயற்திறனை குறைவாகவோ அல்லது அளவுக்கு அதி கமாகவோ மதிப்பீடு செய்யலாகாது என்று தெரிவித்த திருமதி குணநாய கம், எங்கள் நாட்டின் இறைமையை பாதுகாப்பதற்கான இந்தப் புனிதப் போரில் கடைசி நிமிடம் வரை போராட வேண்டுமென்று அவர் தெரிவி த்தார்.
இப்போது மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கைக்கு ஆதரவான நிலை ப்பாடே தலைதூக்கியிருக்கிறது. ஆயினும் இது விடயத்தில் நாம் மேலும் முயற்சிகளை எடுப்பது அவசியம். எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கொள்கை ரீதியிலான நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பத னால் நம்நாட்டு மக்கள் ஜனாதிபதியை ஒரே குரலில் ஆதரிக்கிறார்கள். இது சர்வதேச ரீதியில் இலங்கையின் மதிப்பை உயர்த்தியுள்ளது.
பிரிட்டிஷ் அமைச்சர் ஜெரமி பிரவுனும், நவனீதம் பிள்ளையும் இலங்கை யில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற கருத்தை ஆதரிக்கிறார் கள். அவர்கள் மனதில் எத்தகை மாற்றம் செய்ய வேண்டுமென்று எங்க ளுக்கு தெரியாது.
இவர்கள் எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையி டுவதை நாம் ஏற்க முடியாது. நாம் அவ்விதம் செய்தால் எமது தாய் நாட்டின் இறைமையையும் சுதந்திரத்தையும் அவர்களிடம் தாரை வார்த்து கொடுப்பதற்கு ஒப்பாக அமையும் என்றும் திருமதி குணநாயகம் தெரிவி த்தார்.
அமெரிக்காவும், அதன் மேற்குலக நேச நாடுகளும் மனித உரிமைகள் பேர வையில் பொய், புரட்டு, மாறுபட்ட நிலைப்பாடுகள் கையாளப்படுகின்றன. பெரிய வல்லரசுகள் மனித உரிமை பேரவையையும் வளர்முக நாடுகளை துன்புறுத்தும் ஒரு ஆயுதமாக பயன்படுத்த இப்போது நடவடிக்கை எடு த்து வருகின்றது.
இந்த வல்லரசு நாடுகள் தாங்கள் முன்னர் ஆட்சி புரிந்த நாடுகளின் இயற்கை மற்றும் பொருளாதார வளங்களை சூறையா டுவதில் ஒரு புதிய ஆர்வத்துடன் செயற்படுவதும், மனித உரிமை பேர வையில் இன்று உருவாகியிருக்கின்ற பிரச்சினைக்கு ஒரு காரணமாகும் என்றும் அவர் கூறினார்.
»»  (மேலும்)

3/08/2012

| |

மட்/கன்னன்குடா மகாவித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டு போட்டி

மட்டக்களப்பு மேற்கு வலய பாடசாலைகளில் ஒன்றான மட்/கன்னன்குடா மகாவித்தியாலயத்தின் 2012ம் ஆண்டுக்கான மெய்வல்லுனர் விளையாட்டு விழா நேற்று (06.03.2012) பாடசாலையின் அதிபர் புலேந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றது. இவ் விளையாட்டு விழாவிற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வெற்றிக்கேடையங்களை வழங்கிவைத்தார்.
இந் நிகழ்வில் அதிதிகளாக வவுனதீவு பிரதேசசெயலாளர், மட்டக்களப்பு மேற்கு வலையக்கல்வி பணிப்பாளர் பாஸ்கரதாஸ் ,பிரதி வலையக்கல்வி பணிப்பாளர் சிவநேசன், வவுணதீவு பிரதேசசபை பிரதி தவிசாளர் ஜெயராஜ் , ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள்பாடசாலையின் ஆசிரியர்கள் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
»»  (மேலும்)

3/07/2012

| |

இந்தியத் தேர்தல்கள்-காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு

இந்தியாவில் ஐந்து மாநில சட்டமன்றங்களுக்கு நடைபெற்ற தேர்தல்களில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதுவரை ஆட்சியில் இருந்த மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்து ஆட்சியை இழந்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சிக்கு 50 இடங்களும் காங்கிரஸ் கட்சிக்கு 38 இடங்களும் கிடைத்துள்ளன.உத்திரப்பிரதேசத்தில் தேசியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகியவை படுதோல்வியடைந்துள்ளன. 403 இடங்களைக் கொண்ட உ பி யில் சமாஜ்வாதி கட்சி 226 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 77 இடங்களிலும் வென்றுள்ளன.

கட்சி வெற்றி ஆனால் முதல்வர் தோல்வி

உத்திராகாண்ட் மாநில முதல்வர் பி சி கண்டூரி
அண்டை மாநிலமான உத்தராகண்டில் காங்கிரஸ் மற்றும் பா ஜ க இடையே கடும் போட்டி நிலவுகிறது. அங்குள்ள 70 இடங்களில் பா ஜ க 32 தொகுதிகளையும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும் வென்றுள்ளன.
பகுஜன் சமாஜ் கட்சி மூன்று இடங்களிலும், சுயேட்சைகள் மற்றும் இதர கட்சி நான்கு இடங்களையும் பெற்றுள்ளன.
எனினும் இந்த மாநிலத்தின் முதல்வர் பி சி கண்டூரி தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.
இந்நிலையில் அங்கு யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது கூர்ந்து கவனிக்கப்படுகிறது.

அகாலி தளம் மீண்டும் வெற்றி

வெற்றியை கொண்டாடும் அகாலி தளத் தொண்டர்கள்
பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் அகாலிதள-பா ஜ க கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அங்கு முதல் முறையாக ஆட்சியில் இருந்த கூட்டணியே மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
அங்கு அகாலிதளம் தலைமையிலான கூட்டணி மொத்தமுள்ள 117 இடங்களில் 68 இடங்களை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 46 இடங்கள் கிடைத்துள்ளன. இதர கட்சிகள் மூன்று தொகுதிகளில் வென்றுள்ளனர்.
அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத ஒரு மாநிலம் என்று கருதப்படும் கோவாவில் காங்கிரஸ் கட்சியிடமிருந்து பா ஜ க ஆட்சியை கைப்பற்றியுளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் கட்சி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.

தோல்விக்கு ராகுல் காந்தி பொறுப்பேற்றுள்ளார்

உத்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி அடைந்துள்ள தோல்விக்கு தான் பொறுப்பேற்பதாக அக்கட்சியின் பொதுச் செயலர்களில் ஒருவரான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அங்கு தேர்தல் பிரச்சாரங்களுக்கு தான் தலைமையேற்றிருந்த நிலையில் இந்தத் தோல்விகள் தனக்கு ஒரு பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
சமாஜ்வாடி கட்சியின் தேசியத் தலைவர் முலாயம் சிங் யாதவ் உத்திரப் பிரதேச மாநில முதல்வராக பொறுப்பேற்பார் என்று அவரது மகனும் கட்சியின் மாநிலத் தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் முலாயம் சிங் யாதவ் மாநில சட்டமன்றத்துக்கு இடம்பெற்ற தேர்தலில் போட்டியிடவில்லை.
தமது கட்சிக்கு இந்த மகத்தான வெற்றியை அளித்துள்ள மாநில மக்களுக்கு தான் நன்றி கூறுவதாக பிபிசி செய்தியாளரிடம் முலாயம் சிங் யாதவ் தெரிவித்தார்

"மன்மோகன் சிங் பதவி விலகத் தேவையில்லை" 

முலாயம் சிங் யாதவ்
தமது கட்சிக்கு வாக்களித்த உத்திரப் பிரதேச மக்களுக்கு மிகுந்த நன்றிகளை தெரி்வித்துக் கொள்வதாக முலாயம் சிங் யாதவ் பிபிசியிடம் தெரிவித்தார்.
"இந்தத் தோல்வியை அடுத்து பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டிய அவசியமும் இல்லை, நாடாளுமன்றத்துக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய தேவையும் இல்லை"
மாநிலத் தேர்தல்களில் ஏற்பட்ட தோல்விகள் காரணமாக இதுவரை எந்தப் பிரதமரும் பதவி விலகிய மரபு இல்லை. எனவே ஏன் மன்மோகன் சிங் அவர்கள் பதவி விலக வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும் மாயவாதி அரசால் பெரும் பொருட்செலவில் நிறுவப்பட்ட அவரது கட்சி சின்னமான யானை சிலைகள் மற்றும் அவர் உட்பட அவரால் அமைக்கப்பட்ட தலித் தலைவர்களின் சிலைகள் ஆகியவை எதுவும் இடிக்கப்டாது எனவும அவர் தெரிவித்தார்.
»»  (மேலும்)

| |

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடைக்கால தடை உத்தரவு

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன மீது நடவடிக்கை எடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன தாக்கல் செய்த மனுவை இன்று (06.03.2012) நீண்ட விவாதத்திற்கு எடுத்துக் கொண்ட கொழும்பு மாவட்ட நீதிபதி டி.கனேபொல இவ்வுத்தரவைப் பிறப்பித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தான் 18வது யாப்பு சீர்திருத்த வேளையில் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியதாக தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க முற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பின் இந்நடவடிக்கை சட்டவிரோதமானதென அறிவிக்கும்படி பொடியப்பு பியசேன தனது மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
»»  (மேலும்)

| |

விடுதலைப் புலிகளினால் இலக்குவைக்கப்பட்டதன்காரணமாகவேவெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

dsc_0095.jpgகிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஊழல்களை ஒளித்துக்கட்டுவேன்என கிழக்குப் பல்கலைக் கழகத்தின் புதிய உபவேந்தராக பொறுப்பேற்றுள்ள கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தெரிவித்துள்ளார் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் எவ்விதமான ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் இடம்பெறாதவாறு நிதிஇ நிருவாகம் மற்றும் கல்விசார் நடவடிக்கைகளை எதிர்காலத்தில் முன்னெடுப்பதே எனது இலக்கு
கடந்த 7 வருடங்களாக கனடாவிலுள்ள பல்கலைக் கழகங்களில் பேராசிரியராக பணியாற்றிய அவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம் பெற்றதையடுத்து மீண்டும் நாடு திரும்பியுள்ளார். நேற்று பல்கலைக்கழகத்தில் தனது பொறுப்புக்களை ஏற்ற பின்னர் இடம்பெற்ற பத்தரிகையாளர்கள் சந்திப்பின்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட புதிய உபவேந்தர்
கிழக்கப் பல்கலைக் கழகத்தில் கடந்த காலங்களில் நிதி நிருவாகம் மற்றும் கல்விசார் நடவடிக்கைகளில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக பலராலும் கூறப்படுவது உண்மை. ஆனால் எதிர்காலத்தில் அவை இடம்பெறாதாவாறு தனது பணி முன்னெடுக்கப்படும்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நான் மாணவனாக கல்வி கற்ற காலத்திலிருந்தே இப்படியான முறைகேடுகள் இடம்பெற்றுவருகின்றன. பல்கலைக் கழகங்களில் ஊழல் மற்றும் முறைகேடு என்பது எல்லா பல்கலைக்கழகங்களிலும் இடம்பெறுகிறது.
2004 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பிளவு காரணமாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த புத்திஜீவிகள் விடுதலைப் புலிகளினால் இலக்குவைக்கப்பட்டதன் காரணமாகவே பல கல்விமான்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்படியான நெருக்கடி நிலை காரணமாக அப்போது நாட்டைவிட்டு நானும் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
எதிர்காலத்தில் இப்படியான நிலை இடம்பெறமாட்டாது என்ற நம்பிக்கை இருப்பதன் காரணமாகவே நான் தற்போது நாடு திரும்பி இந்த பதவியை பொறுப்பபேற்றுள்ளேன் என்று கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தெரிவித்தார்.
»»  (மேலும்)

3/06/2012

| |

கிழக்கு பல்கலைக்கழத்தின் புதிய உப வேந்தர் கடமைகளை பொறுப்பெற்றார் !கிழக்கு முதல்வரும் பங்கேற்ப்பு

கிழக்கு பல்கலைக்கழத்தின் புதிய உப வேந்தராக ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா இன்று(05.03.2012) திங்கட்கிழமை கடமைகளை பொறுப்பேற்றார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தினால் புதிய உப வேந்தருக்கு மகத்தான் வரவேற்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் உயர் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஜயந்த நவரெட்ண உயர் கல்வி அமைச்சின் ஆலோசகர் கலாநிதி நிமால் குணதிலக உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
உப வேந்தராக கடமையாற்றிய கலாநிதி என்.பத்மநாதன் 2010ஆம் ஆண்டு பதவி விலகியதிலிருந்து குறித்த பதவி வெற்றிடம் காணப்பட்டது. இதனால் கலாநிதி பிரேம்குமார் பதில் உப வேந்தராக கடமையாற்றி வந்தார்.
குறித்த பதவிக்கு கிழக்கு பல்கலைக்கழக பேரவையினால் பேராதனை பல்கலைக்கழக மருத்துவ துறை பேராசிரியர் ஆர்.சிவகணேசன் கிழக்கு பல்கலைக்கழக விவசாய பீட பீடாதிபதி எஸ்.சுதர்சன் மற்றும் கனடாவில் வசித்த கலாநிதி கிட்ணன்
கோபிந்தராசா ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.
இதனையடுத்தே கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா கிழக்கு பல்கலைக்கழத்தின் ஏழாவது உப வேந்தராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர்களில் உப வேந்தராக நியமனம் பெற்றுள்ள முதலாவது நபர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஸா என்பதுடன் 1989ஆம்ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவனாக நுழைந்த இவர் கணித துறையில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளார். அத்துடன் 1993ஆம் ஆண்டு தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரையிலான கால பகுதியில் கிழக்கு பல்கலைக்கழத்தில் விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார்.
பின்னர் கிழக்கில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக 2004ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறிய இவர் கனடா பல்கலைக்கழகமொன்றில் பகுதி நேர விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)