இம்மாதம் (பெப்ரவரி) 27ம் திகதி சுவிற்சிலாந்தின் ஜெனிவா நகரில்இ 47 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவின் 19வது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இக்கூட்டம் மார்ச் 23ம் திகதி வரை தொடர்ந்து நடைபெறும். இந்த 47 நாடுகளும் 5 பிராந்திய வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில்இ ஆபிரிக்க வலயத்தில் அங்கோலாஇ பெனின்இ பொட்ஸ்வானாஇ பேர்கினா ஃபசோஇ கமரூன்இ கொங்கோஇ டியுபோதிஇ லிபியாஇ மொரித்தானியாஇ மொரிசஸ்இ நைஜீரியாஇ செனகல்இ உகண்டா என்பனவும்இ தென் அமெரிக்க – கரீபியன் வலயத்தில் சிலிஇ கோஸ்ரா றிக்காஇ கியூபாஇ ஈக்குவட்டோர்இ கவுத்தமாலாஇ மெக்சிக்கோஇ பெருஇ உருகுவே என்பனவும்இ ஆசிய வலயத்தில் பங்களாதேஸ்இ சீனாஇ இந்தியாஇ இந்தோனேசியாஇ ஜோர்டான்இ குவைத்இ கஜக்கிஸ்தான்இ மலேசியாஇ மாலைதீவுஇ பிலிப்பைன்ஸ்இ கட்டார்இ சவூதி அரேபியாஇ தாய்லாந்து என்பனவும்இ மேற்கு ஐரோப்பிய அமெரிக்க நாடுகளின் வலயத்தில் ஆஸ்திரியாஇ பெல்ஜியம்இ இத்தாலிஇ நோர்வேஇ ஸ்பெயின்இ சுவிஸ்லாந்துஇ அமெரிக்கா ஆகிய நாடுகளும்இ கிழக்கு ஐரோப்பிய வலயத்தில் ரஸ்யாஇ ரூமேனியாஇ செக்கோஸ்சிலோவாக்கியாஇ போலந்துஇ மோல்டோவா என்பனவும் அங்கம் வகிக்கின்றன.
இந்த வருட கூட்டத்தொடரில் பிரதான அம்சமாகஇ இலங்கைக்கெதிரான தீர்மானத்தை முன்னெடுக்க அமெரிக்கா தலைமையிலான மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகளும்இ புலம்பெயர் புலிகள் அமைப்புகளும் தீவிர அக்கறை காட்டி வருகின்றன. இலங்கையில் புலிகள் அழிக்கப்பட்டுப் போர் முடிவுக்கக் கொண்டுவரப்பட்ட பின்னர்இ இந்த மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகள்இ இலங்கைக்கு எதிராகத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த எதிர்ப்பு நடவடிக்கைகளை வைத்துப் பார்க்கையில்இ அவர்களது தற்போதைய தீர்மானம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.
பொதுவாகஇ அமெரிக்க ஏகாதிபத்தியம் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் உலக அரங்கில் நடாத்தி வந்த – நடாத்தி வரும் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகளை உலகின் மூலைமுடுக்கில் உள்ள அத்தனை மக்களும் நன்கு அறிவர். 1950 – 51 கொரிய யுத்தம்இ 1965 – 70 இந்தோ சீன யுத்தம்இ யூகோஸ்சிலோவாக்கியா மீதான தொடர் குண்டு வீச்சுஇ ஈராக் மீதான ஆக்கிரமிப்புஇ ஆப்கானிஸ்தான் மீதான ஆக்கிரமிப்புஇ லிபியா மீதான ஆக்கிரமிப்புஇ சிரியா - ஈரான் மீது ஆக்கிரமிப்பதற்கான முஸ்தீபு என அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அடுக்கிக்கொண்டு போகலாம்.
இந்த ஆக்கிரமிப்பு யுத்தங்களின் போதுஇ அமெரிக்காவினதும் அதன் மேற்கத்தைய கூட்டாளிகளினதும் ஆக்கிரமிப்புப் படைகள் பல இலட்சம் அப்பாவி மக்களை; கொன்று குவித்தன. வியட்நாம் யுத்தத்தின் போதுஇ ஏறத்தாழ 20 இலட்சம் வரையிலான வியட்நாம் மக்களை அமெரிக்கா தலைமையிலான படைகள் ஈவிரக்கமின்றி கொன்று குவித்தன. ஈராக் மீது விதித்த பொருளாதாரத் தடையாலும்இ பின்னர் அந்நாடு மீது தொடுத்த நேரடி யுத்தத்தினாலும் குழந்தைகள்இ வயோதிபர்கள்இ பெண்கள் உட்பட சுமார் 8 இலட்சம் ஈராக்கிய மக்களை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் கொன்று குவித்தன. ஆப்கானிஸ்தானில் 2001 ஆணடிலிருந்து இதுவரையில் ஏறத்தாள 25இ000 மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாமெனக் கூறப்படுகின்றது.
இவை தவிர தென் அமெரிக்காவின் சர்வாதிகார ஆட்சிகளின் ஊடாகவும்இ ஆபிரிக்காவின் எதேச்சாதிகார ஆட்சிகளின் ஊடாகவும்இ மத்திய கிழக்கில் சியோனிச கொலைகார இஸ்ரேல் மூலமாகவும்இ ஈரானின் மன்னர் ஷாஇ பிலிப்பைன்சின் சர்வாதிகாரி மார்க்கோஸ் போன்றவர்கள் மூலமாகவும்இ அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் மேற்கத்தையக் கூட்டாளிகளும் நடாத்திய மனிதப் படுகொலைகளும்இ சதி – சூழ்ச்சி நடவடிக்கைகளும் எண்ணுக்கணக்கில் அடங்காதவை.
அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கை மட்டுமின்றிஇ அதன் உள்நாட்டுக் கொள்கைகளும் மக்கள் விரோதமானது என்றபடியால்தான்இ அங்கு கடந்த வருடம் ‘வோல் ஸ்றீற்றை கைப்பற்றும் போராட்டம்’ ஆரம்பமாகி அது அமெரிக்கா முழுவதும் மட்டுமின்றிஇ மேற்கு ஐரோப்பா முழுவதும் பரவியது. இன்றும் அமெரிக்கச் சனத்தொகையில் சுமார் 40 வீதமானோர் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் அவலம் அந்த நாட்டில் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அவ்வாறெல்லாம் இருப்பினும் அமெரிக்கா தன் ஏகாதிபத்தியக் கொள்கையைக் கைவிட்டதாகவோஇ தனது போக்கை மாற்றிக் கொண்டதாகவோ இல்லையென்பதையேஇ அது அண்மையில் லிபியா மீது தொடுத்த போரும்இ தற்பொழுது சிரியாஇ ஈரான் மீது ஆக்கிரமிக்க எடுத்து வரும் முயற்சிகளும் எடுத்துக் காட்டுகின்றன.
மறுபக்கத்தில் புலிகள் அமைப்பு எல்லோருக்கும் நன்கு தெரிந்த தமிழ் இனவாத பிற்போக்கு பாசிச இயக்கமாக இருந்து வந்ததுடன்இ ஏகாதிபத்தியத்துக்கு மிகவும் விசுவாசமான ஒரு அமைப்பாகவும் செயல்பட்டு வந்தது இரகசியமானதல்ல. அது ஏகாதிபத்தியத்தின் ஆசியாவுக்கான மூல உபாயத்தின் திட்டங்களை தென்னாசியாவில் செயல்படுத்தி வந்தது. அதன் காரணமாகவே அது இலங்கையில் பிரிவினையை மேற்கொண்டுஇ அந்த நாட்டைச் சீர்குலைத்துச் சின்னாபின்மாக்குவதற்கு முயற்சித்தது மட்டுமின்றிஇ இந்தியாவையும் சீர்குலைக்க முயன்றது. புலிகளின் செயற்பாடுகளுக்கு தமிழகத்தில் ஆதரவளிக்கும் அத்தனை சக்திகளும் ஏகாதிபத்தியதாசர்களாக இருப்பதுடன்இ அமெரிக்காவுக்குச் சார்பான தேசிய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியும் புலிகளை ஆதரிப்பதும் அதனால்தான்.
புலிகளை தென்னாசியாவின் சியோனிஸ்டுகளாக வளர்த்து வந்த ஏகாதிபத்தியம்இ இறுதிக்கட்டப் போரின் போதுஇ புலிகளை இலங்கை இராணுவம் தோற்கடிப்பதிலிருந்து காப்பாற்றுவதற்குப் பகீரதப் பிரயத்தனம் செய்தது. அது முடியாது என்ற போதுஇ புலித் தலைமையைப் பாதுகாத்து நாட்டிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்ற முனைந்தது. ஆனால் ஏகாதிபத்தியத்தின் இந்தத் திட்டங்களை இலங்கை தனது நட்பு நாடுகளின் - குறிப்பாக இந்தியாவின் உதவியுடன் - முறியடித்து வெற்றிவாகை சூடியது.
தனது திட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தோல்வியடைந்ததின் காரணமாக மிகவும் கடுப்பில் இருந்த ஏகாதிபத்திய சக்திகள்இ அடுத்த கட்டமாக இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமது நம்பிக்கைக்குரிய விசுவாசியான முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகக் களத்தில் இறக்கியதுடன்இ அவருக்கு ஆதரவாக ஐ.தே.கஇ தமிழ் தேசியக் கூட்டமைப்புஇ ஜே.வி.பிஇ மனோ கணேசன் போன்றோரையும் அணிதிரட்டியது.
அதாவது புலிகளை இறுதிப் போரில் காப்பாற்ற முடியாமல் போன ஏகாதிபத்தியம்இ 180 டிகிரி பல்டியடித்து புலிகளைத் தோற்கடித்ததில் முக்கிய பங்கு வகித்தவர் எனக் கருதப்பட்ட முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் புகழை வைத்து அவரை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற வைக்கலாம் எனக் கனவு கண்டது. இந்தக் கேவலமான அரசியல் காய் நகர்த்தலில்இ தமிழர்களுக்கு எதிராக வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்தவரும்இ புலிகளை மட்டுமின்றி பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களையும் கொன்று குவிக்கக் காரணமாயிருந்த பொன்சேகாவைஇ தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது ஏகாதிபத்திய விசுவாசம் காரணமாக ஆதரிக்க முன்வந்தது. பொன்சேகாவின் பின்னால் அணிதிரண்டு நின்ற அதே சக்திகளே இப்பொழுது ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அnரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்துடனும் இணைந்து நிற்கின்றன.
ஆனால் இலங்கை மக்கள் எப்பொழுதும் போலவே சரியான விடயங்களை இனங்கண்டுஇ ஜனாதிபதித் தேர்தலில் பிற்போக்கு சக்திகளினதும்இ ஏகாதிபத்தியவாதிகளினதும் பிரதிநிதியான சரத் பொன்சேகாவைத் தோற்கடித்து தாய்நாட்டைப் பாதுகாத்தனர். இலங்கை மக்களின் இந்தத் துணிச்சலானஇ சரியான முடிவுஇ ஏகாதிபத்திய சக்திகளை மேலும் சினம் கொள்ள வைத்தது.
அதுமாத்திரமின்றி மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசாங்கம் சர்வதேச உறவுகளில் சோசலிச நாடுகளான சீனாஇ கியூபாஇ வியட்நாம்இ வட கொரியா என்பனவற்றுடனும்இ ஏகாதிபத்திய எதிர்ப்பு நாடுகளான ஈரான்இ கடாபியின் லிபியாஇ சிரியாஇ பாலஸ்தீனம்இ வெனிசூலா போன்ற நாடுகளுடனும்இ அமெரிக்காவுடன் வல்லரசு மோதலில் உள்ள ரஸ்யா மற்றும் முரண்பாடுகளைக் கொண்டுள்ள இந்தியாஇ பாகிஸ்தான் போன்ற நாடுகளுடனும் நெருங்கிய உறவுகளைப் பேணியமை இந்த ஏகாதிபத்திய சக்திகளுக்குப் பிடிக்காத இன்னொரு விடயமாகும்.
இலங்கையில் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த எல்லா சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கங்களும் இடதுசாரிகளையும்இ ஜனநாயகவாதிகளையும்இ தேசியவாதிகளையும் தனது அரசில் பங்காளிகளாக இணைத்துக்கொண்டதால்இ அத்தகைய ஓர் அரசு இருக்கும்வரை தென்னாசியாவில் தமது திட்டங்கள் எதனையும் நிறைவேற்ற முடியாது என்பது ஏகாதிபத்தியவாதிகளுக்கு நன்கு தெரியும். இலங்கை ஒரு நீணட ஜனநாயக பாரம்பரியத்தை உடைய நாடு என்பதாலும்இ தற்போதைய அரசாங்கம் மக்களின் பெரும்பான்மையான ஆதரவுடன் ஆட்சிக்கு வந்துள்ளதாலும்இ ஈராக் அல்லது லிபியப் பாணி ஆட்சிக் கவிழ்ப்பு எதனையும் இலங்கையில் அரங்கேற்ற முடியாது என்பதும் ஏகாதிபத்தியவாதிகளுக்குத் தெரியும்.
எனவேதான் இறுதிக்கட்டப் போரில் இலங்கை இராணுவம் இழைத்ததாகக் கூறப்படும் உரிமை மீறல்களை வைத்துஇ இலங்கை அரச தலைவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்திஇ அரச தலைமையை ‘சட்டப்படி’ ஒழித்துக்கட்டிஇ நாட்டின் அரசியல் களத்தைத் ‘துப்புரவாக்கி’க் கொடுத்தால்இ மிகுதி வேலையை தமக்கு விசுவாசமான இலங்கையிலுள்ள பிற்போக்கு அரசியல் - இராணுவ சக்திகள் மேற்கொள்வார்கள் என ஏகாதிபத்தியம் கணக்குப் போடுகின்றது. ஆனால் ஏகாதிபத்தியத்தின் இந்தக் கணக்கு தப்பாகப் போகக்கூடிய வாய்ப்புகளே அதிகமாக உள்ளது.
இலங்கைக்கு எதிராக ஏகாதிபத்திய சக்திகளும்இ புலம்பெயர் புலிகளும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரவுள்ள தீர்மானம்இ உண்மையில் இலங்கையில் புலிகளை அழிக்கும் இறுதிப்போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றிய அக்கறையுடன் அல்ல. ஏகாதிபத்தியத்தின் நோக்கங்களை தென்னாசியாவில் நடைமுறைப்படுத்தத் தடையாகவுள்ள தற்போதைய இலங்கை அரசைத் தண்டிப்பதே அந்தத் தீர்மானத்தின் உள்ளார்ந்த நோக்கமாகும். அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ஒரு பிரபலமான பத்திரிகையில் அண்மையில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை ஒன்றுஇ இந்த உண்மையை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் பெரும்பாலானான நாடுகள் ஏகாதிபத்தியத்தின் செயற்பாடுகளால் கடந்த காலங்களில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டவை என்பதால்இ அவை இலங்கைக்கு ஆதரவாகவே வாக்களிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குறிப்பாக ஆசிய – ஆபிரிக்க – லத்தீன் அமெரிக்க வலய நாடுகளில் அதிகமானவை இலங்கையின் பக்கமே நிற்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. கிழக்கு ஐரோப்பிய வலயத்திலும் இலங்கையின் உறுதியான நட்பு நாடான ரஸ்யாவும் வேறு சில நாடுகளும் இலங்கையின் பக்கமே நிற்பது நிச்சயம். சில மேற்கு ஐரோப்பிய நாடுகள் மட்டுமே அமெரிக்காவுடன் சேர்ந்து இலங்கைக்கு எதிராக நிற்கக்கூடும். அரசியல் பகுப்பாய்வாளர்களின் எதிர்பார்ப்பின்படி குறைந்த பட்சம் இலங்கைக்கு ஆதரவாக ஏறத்தாழ 30 நாடுகள்வரை வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு இல்லாமல் தற்செயலாக இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் கூடஇ அது இலங்கை மக்களை ஏகாதிபத்தியத்துக்கும் அதன் உள்ளுர் அடிவருடிகளுக்கும் எதிரான போரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஐக்கியப்படுத்துவதில் கொண்டு போய் விடும். அப்படியான ஒரு போராட்டம் இதுவரை காலமும் இருந்தததைவிட உறுதியான ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் தலைமையை இலங்கையில் தோற்றுவிப்பதுடன்இ இலங்கையில் இதுவரை காலமும் இருந்த இனவாத யுத்தத்துக்குப் பதிலாகஇ உள்நாட்டு யுத்தம் ஒன்றை உருவாக்கிவிடக்கூடும். அதன் விளைவாக ஏகாதிபத்தியம் இலங்கை மண்ணில் ஒருபோதும் கால் ஊன்ற முடியாத நிலைமையையும் தோற்றுவிக்கும். ஏகாதிபத்தியம் இப்பொழுது இலங்கையில் விளையாட நினைப்பது சதாம் ஹசைன்இ கடாபி போன்ற ஒரு தனிமனித மகிந்த ராஜபக்சவுடன் அல்ல. அவர்கள் விளையாடுவது உறுதியான ஏகாதிபத்திய எதிர்ப்பப் பாரம்பரியமுள்ள இலங்கை மக்களுடன் என்பதை உணர்ந்தால்இ தமது விளையாட்டை இத்துடன் நிறுத்திக் கொள்வது புத்திசாலித்தனமாகும்.
அவ்வாறு இல்லாமல் எல்லாப் பிற்போக்குவாதிகளும் மரபுரீதியாகச் செய்துவரும் ‘பாறாங்கல்லைத் தூக்குவது தமது சொந்தக் கால்களில் போட்டுக் கொள்வதற்கே’ என்றால்இ அதை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.
நன்றி தேனீ