2/16/2012

பிரதீபா தர்மதாஸவின் புதிய இசை இறுவட்டு வெளியீடு; 'அந்திக்கு முன் வாருங்கள்'

லங்கையில் இசைத்துறையின் பாடல்கள் மூலமாக மக்களின் இதயத்தைக் கவர்ந்த சிறந்த பாடகி பிரதீபா தர்மதாஸ 7 ஆண்டு நீண்ட மெளனத்திற்குப் பிறகு தனது புதிய இசை இறுவட்டை வெளியி டவுள்ளார். “ஹெந்தேவட கலின் என்ன” (“அந்திக்கு முன்வாருங்கள்”) என்ற சிங்கள பாடல்கள் அடங்கிய புதிய இறுவட்டினை இவர் வெளியிடவுள்ளார்.
ஏழு வருட நீண்ட கால மெளனத்திற்குப் பிறகு தனது ஆறாவது இறுவட்டாக வெளியிடவுள்ள “அந்திக்கு முன் வாருங்கள்” “புழுதியில் பிறந்த பெண்ணே” மற்றும் “கண்ணீர் கரையோரம்” ஆகிய மூன்று இறுவட்டுகள் வெளியிடப்படவுள்ளன. இவ் இறுவட்டு வெளியீடானது கொழும்பு தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஷ அரங்கேற்ற மண்டபத்தில் எதிர்வரும் 18 ம் திகதி மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இலங்கை இசைத்துறையில் மிகச்சிறந்த புதிய பாடலாசிரியர்களான பேராசிரியர் சுனில் ஆரியரத்தின, இரத்தன ஸ்ரீ விஜேசிங்க, பந்துல நானாயக்காரவசம், டலஸ் அழகப்பெரும ஆகியோர் இப்பாடல்களை எழுதியுள்ளனர்.
பிரதீபா தர்மதாஸ தனது பாடல்கள் மூலம் தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையிலான உறவுப் பாலத்தை அமைப்பது தொடர்பில் தனது புதிய பாடல்களை வெளியிடவுள்ளார்.
கடந்த 30 வருடங்களாக நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களில் பெண் என்ற வகையில் பார்த்தால் துன்பம், கண்ணீர், இரத்தத்தின் நிறம் என்பது வடக்கில் வாழும் பெண்ணுக்கும் தெற்கில் வாழும் பெண்ணுக்கும் ஒரேமாதிரியாக இருக்கின்றது.
ஒரு பிள்ளை இறந்து போனால் ஒரு தாயின் இதயத்தில்வரும் சோகம் வடக்கு தெற்கு என்று பேதம் இல்லை. இந்த விடயத்தை கலைஞர்களாகிய நாம் சரியாக புரிந்து கொள்ள முடியும் என்பதால் உணர்ச்சிகொள்ள வில்லை என்று நான் நினைக்கிறேன். ஆனாலும் இன்று அந்த நிலைமை முடிந்து விட்டது. இந்த நிலையில் நம் இரு இனங்களுக்குள் சகோதரத்துவத்தை உருவாக்குவதற்காக தமிழ் மொழியும் சிங்கள மொழியும் இந் நாட்டின் பிரதான மொழிகளாக வேண்டும். அத்தோடு இனங்களுக்கிடையிலான உறவுப் பாலத்தை கலைஞர்களுக்கு தான் மிகச்சிறந்த முறையில் செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன்.
பல வருடங்களுக்கு முன்பாக யாழ்தேவி என்பது இந்நாட்டில் பயணம் செய்த ஒரு புகையிரத வண்டி அல்ல, அது நமது இனங்களை இணைக்கச் செய்த ஒரு உருவப் பாலமாக இருந்தது. அந்த யாழ்தேவி தாக்குதலுக்கு உட்பட்ட நாள்தான் நமது உருவத்திற்கு மிகப்பெரிய தாக்குதல் நடந்த நாள் என்று நான் நினைக்கி றேன்.
அதனால் தான் இன்று வெளியிடும் எனது புதிய இறுவட்டில் “யாழ்தேவி” என்ற ஒரு புது பாடலையும் நான் சேர்த்துள்றேன். இதன் மூலம் இன சகோதரத்துவத்தின் பாலத்தை அமைப்பதற்காக நான் முயற்சி செய்துள்ளேன். ரத்தன ஸ்ரீ விஜேசிங்க எனும் பாடலாசிரியர் எழுதிய இப்பாடல் மூலமும் என் குரல் மூலமும் நமது சகோதரத்துவத்தின் பாலத்தை அமைப்பதற்காக கலைஞர்களாக நாம் பங்குபெறமுடியுமாயின் அதனால் நான் மிகவும் சந்தோஷப் படுவேன் என்றும் பிரதீபா தெரிவிக்கின்றார்.
புரட்சிகரமான பாடல்களை பாடிய பிரதீபாவின் முதல் இசை இறுவட்டு 1992ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. ஒரு யதார்த்தமான பாடகியான பிரதீபா தனது பாடல்கள் மூலம் மக்களின் பக்கத்திலிருந்து மக்களுக்கு ஏற்பட்ட அவல நிலையைப் பற்றி பேசினார்.
1977 ஆம் ஆண்டில் இலங்கைக்கு அறிமுகமாகிய திறந்த பொருளாதாரத்தால் இலங்கையின் கலாசாரம் எவ்வாறு பாதிக்கப்பட்டது என்று “கொலொம் தொட்டின் னெவு னெக்கா” எனும் பாடல் மூலம் பேசினார். கொழும்பு துறைமுகத்தில் கப்பல் ஏறினது நம் மனிதாபிமானம் என்றும் அதற்கு மாறாக கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தது இழிவுச் செயல் என்பது அப் பாடலின் அர்த்தமாகும். இவ்வாறு மக்கள் பக்கத்திலிருந்து மக்களுக்கு ஏற்பட்ட அவல நிலைமையை தனது பாடல்கள் மூலம் வெளிப்படுத்தியால் அப்போதைய அரசாங்கம் அப்பாடல் உள்ளிட்ட 6 பாடல்களை தடை செய்தது.
சிங்கள பாடல்கள் மட்டுமின்றி தமிழ் பாடலும் பாடிய பிரதீபா 1998 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தனது இரண்டாவது இசை இறுவட்டில் “நீ யாரோ நான் யாரோ” என்ற தமிழ் பாடலை பிரதீபா தனது இனிமையான குரலில் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர் புது இசை தலைமுறையினருடன் இணைந்து வேலை செய்வதை விரும்புகிறார். அதற்கு காரணம் இப் புதிய தலைமுறை புதிய தொழில்நுட்பத்தைக் கையாள்வதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள் ஆகும். அதுமட்டும் இல்லாமல் அவர்களை இணைத்துக் கொண்டு வேலை செய்யும் போது நேயர்களுக்கு புதியதொரு இசை அனுபவத்தை வழங்க முடியும் என பிரதீபா தெரிவிக்கின்றார்.
இசை என்பது இக் காலக்கட்டத்தில் பணத்திற்கு விற்கப்படுகின்றது. அந்த பாடல்களைப் போல் நான் என் பாடல்களை விற்க மாட்டேன். மக்களுக்காக ஒரு சிறந்த அர்த்தமுள்ள இசையை வழங்குவது தனது ஒரே நோக்கம் என்று கருதுகிறார்.
பிரதீபா தர்மதாஸ தன் ஆரம்பக் கல்வியை மாத்தறை சுஜாதா கல்லூரியில் கற்றார். கல்வி கற்கும் போதே நாடகத்துறையிலும் ஆர்வம் கொண்டார்.
சோமலதா சுபசிங்க எனும் சிறந்த நடிகையின் வழிகாட்டலின் மூலம் கலைத்துறையில் தனது முதல் காலடியை எடுத்து வைத்தார். இதைத் தொடர்ந்து பல நாடகங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார். இதில் “சிங்கபாகு”, “விகுர்த்தி”, “மூதுபுத்து”, மற்றும் “சத்யாங்கனாவீ” என்பவை இவர் நடித்த நாடகங்காளகும்.
அதன்பின்னர் பிரதீபா இசைத் துறையில் நுழைந்தார். அக்காலக்கட்டத்தின் போது இன்று அமைச்சராக இருக்கும் டலஸ் அழகப்பெரும அவர்களுடன் காதல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் டலஸ் அழகப்பெரும ஊடகவியலாளராக பணியாற்றினார். இவர்களின் திருமணம் 1994 ம் ஆண்டில் நடைபெற்றது.
புதிதாக வெளியிடப்படவுள்ள இசை இறுவட்டுக்கும் பாடலாசிரியராக இணைந்து இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமை ச்சர் டலஸ் அழகப்பெரும் அவர்கள் பிரதீபாவின் இசைப் பயணத் திற்கு உறுதுணையாகவும் இருந்து வருகின்றார்.

0 commentaires :

Post a Comment