இலங்கை உட்பட அரபு உலக நாடுகளுக்கு துரோகம் செய்யும் மேற்கத்திய வல்லரசுகள் எல்லாம் வல்ல
இறைவனால் நிச்சயமாக தண்டிக்கப்படும்
பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ். ஏ.எச்.எம். அஸ்வர் அவர்கள் கடந்த 24ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரை.
மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே, உலகில் எங்கும் நிலைத்திருக்கும் சுதந்திரமான ஜனநாயக நாடுகளை சீர்குலைப்பதில் மேற்குலகம் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டு வருகின்றது என்பது முழு உலகத்திற்குமே நன்கு தெரியும். இந்த மேற்குலகம் உலக நாடுகளின் பொலிஸ்காரன் என்ற இருமாப்புடன் தொடர்ந்தும் நடந்து கொண்டு வருகின்றது.
தங்கள் வசமுள்ள ஆயுத பலமே இதற்கான பிரதான காரணமாகும். இவர்களுக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தவர்கள் யார்? இறைவனா? இல்லை. இந்த அதிகாரத்தை சாத்தானின் அதிகாரம் என்றே நாம் நினைக்க வேண்டி யிருக்கிறது. ஆனால், அவர்கள் ஒரு யதார்த்தத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு நாள் இறைவனின் அதிகாரத்தினால் அழிந்து போவார்கள் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வது நல்லது.
இறைவனின் சக்தியே உலகிலுள்ள மிகப் பெரிய பலம் என்பதை இந்த மேற்குலகம் தங்களுக்கு சாதகமான முறையில் மறந்து செயற்படுகின்றது. இறைவனே இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியவர்.
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஏனைய மேற்குலக நாடுகள் இந்த உண்மையை ஒருநாள் உணர்ந்து கொண்டு, அழிவை எதிர்நோக்குவது நிச்சயம். பிரச்சினைகளை ஏற்ப டுத்துபவர்கள், தில்லுமுள்ளுகள் செய்பவர்கள், மற்றவர்களுக்கு தீங்கிழைப்பவர்கள் ஆகியோர் ஒரு நாள் பூஜ்ஜிய நிலைக்கு தள் ளப்படுவார்கள் என்பதை அல்லா ஹ¥த்தஆலா அல்குர்ஆனில் எடுத் துரைத்துள்ளான். எல்லாம் வல்ல அதிகாரத்தைப் படைத்தவன் அல்லாஹ¥த்தஆலா ஜல்ல ஜலாலுஹ¥ அம்மனவாலுஹ¥, சர்வ வல்லமை பெற்றவன். சர்வ ஆதிக்கமும் கொண்டவன்.
சர்வதேச மற்றும் தேசிய மட் டத்திலான சதிகாரர்களாக உள்ளவர்கள் இஸ்லாமிய உலகை பூஜ்ஜிய நிலைக்கு தள்ள எத்தனிக்கிறார்கள். அவர்கள், டியுனீஸியா, எகிப்து, லிபியா, யெமன், பஹ்ரென் மற்றும் சிரியாவில் ஓரளவு வெற்றியீட்டிய பின்னர், இன்று அமைதியான சமாதானத்தை வென்றெடுத்த இலங்கையை இலக்கு வைத்து செயற்படுகிறார்கள்.
சர்வதேச ஊடகங்கள் இன்று வேண்டுமென்றே இந்நாடுகளுக்கு எதிராக செய்திகளை வெளியிட்டு, அந்நாடுகளை சீர்குலைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. நேட்டோ இராணுவத்தினர் புனித அல்குர்ஆனை எரிக்கும் காட்சியை அவை காண் பித்தன. ஒருவன் எதிரியாக இருந்தாலும் அவனது சடலத்திற்கு மரியாதை செலுத்துவது மனிதப் பண்பாகும். ஆப்கானிஸ்தானில் மரணித்த மாவீரர்களின் சடலங்களின் மீது இந்த நேட்டோ இராணுவத்தினர் சிறுநீர் கழித்த காட்சி வேதனையை அளிப் பதாக அமைந்திருக் கின்றது.
இந்த சர்வதேச சதிகாரர்கள் ஒரு புதிய நாடகத்தை இப்போது தயாரித்து வருகின் றார்கள். அந்த நாடகம் என்ன? கிரிக்கட் விளையாட்டின் போது வர்ணனையாளர்கள் பயன் படுத்தும் சொற்பதத்தை நான் பாவிப்பேனேயானால், உலகத்தில் உள்ள சமாதானத்திற்காக பிரபலம் பெற்ற ஒரு துடுப்பாட்டக் காரரை இந்த மேற்கு நாடுகள் ஆட்டமிழக்கச் செய்வதற்கு சதித்திட்டம் இடுகின்றன என்றுதான் கூற வேண்டும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இரு தடவைகள் ஜனா திபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது தடவை மிக அதிகப் பெரும்பான்மை வாக்குகளுடன் தெரிவானார்.
இவர், மக்களில் இருந்து தோன்றிய மண்ணின் மைந்தனாவார். அரபுநாடுகளில் ஏற்பட்ட அனர்த்தங்களைப் போல் இலங்கையில் சதித்திட்டங்களை மேடையேற்றுவது முற்றாக மாறுபட்ட முயற்சியாகவே அமையும். ஜனாதிபதி அவர்களின் நிறைவேற்று அதிகாரம் இந்நாடெங்கிலும் வடக்கிலும், கிழக்கிலும், மேற்கிலும், தெற்கிலும், மத்திய பிரதேசங்களிலும் வலுப்பெற்று விளங்குகின்றன. இதனை மேற்குலகம் புரிந்து கொள்வது நல்லது.
அரபு நாடுகளைச் சேர்ந்த சிரியா, லிபியா உட்பட மற்றைய நாடுகளின் நகரங்களில் பணத்தை வாரி இறைத்து ஊடகங்களின் ஆதிக்கம், வலுப்பெற்று விளங்கியது. இதன் மூலம் அந் நாடுகளில் அமைதியின்மை, கலவரங்கள் போன்ற வன்முறைகளை அந்நாட்டு அரசாங்கங்களுக்கு எதிராக ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டது.
தவிர்க்க முடியாத காரணங்களினால் எங்கள் நாட்டின் எரிபொரு ட்களின் விலை அதிகரிப்பட் டதை அடுத்து சிலாபத்திலுள்ள கடற்றொழிலாளர்கள் தங்களுக்கு சில அரச சார்பற்ற அமைப் புகளின் ஆதரவை அடுத்து, கிளர்ச்சி செய்வதற்கும் எத்தனித்தனர். ஆயினும், நாடெங்கிலும் உள்ள மீனவ சமூகத்தினர் குறிப்பாக பயங்கரவாதத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட வடக்கு, யாழ்குடா நாட்டிலும் மக்கள் அமைதியாக எரிபொருள் விலை அதிகரிப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
சிலாபம் மற்றும் நீர்கொழும்பை அடுத்துள்ள சகல பிரதேசங்களிலும் அமைதியும், சமாதானமான சூழ்நிலையும் நிலவுகின்றது. இது எவ்விதம் ஏற்பட்டதென்று நீங்கள் சிந்திக்கலாம். உள்ளூரில் உள்ள சதிகார கும்பல்கள் சர்வதேசத்தில் உள்ள தங்கள் சதிகார எஜமானர்களின் தூண்டுதலின் பேரில் ஒரு குறிப்பிட்ட அளவிலான அப்பாவி கடற்றொழி லாளிகளை வன்முறையில் ஈடுபடு வதற்கு தூண்டிவிட்டதே இதற்கான காரணமாகும்.
இம்மாதம் 27ம் தினத்தன்றை நாம் ஜெனீவா நாடகத்தினம் என்று அழைக்கலாம். எங்கள் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் நற்பெயரை பாதுகாப்பதற்காக இந்நாட்டு மக்கள் இலட்சக்கணக்கில் வீதியிறங்கி, ஜனாதிபதியை பாதுகாக்கும் நோக்கத்துடன் சர்வதேச சதிகார வலையமைப்புக்கு எதிராகவும் தங்கள் எதிர்ப்பையும், ஆர்ப்பாட்டத்தையும் மேற்கொள்ளவிருக்கிறார்கள். கிரஹம் கிaன் தனது அக்லி அமெரிக்கன் அதாவது அவலட்சணமான அமெரிக்கன் என்ற புத்தகத்தில் இதைதான் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜெனீவாவில் இந்த மேற்கத்திய நாடுகள் அநாவசியமான பிரேரணையை அங்கீகரித்து, சிரியாவில் ஏற்பட்டதைப் போன்ற ஒரு நிலையை இலங் கையிலும் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். இதன் மூலம் இலங்கையிலும் தங்கள் ஆக்கிரமிப்பை செலுத்துவதற்கு அவர்கள் எத்த னிக்கிறார்கள்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அரசாங்கம் படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. இந்த சந்தர்ப்பத்தில் எங்கள் எதிர்க்கட்சித் தலைவர் அமெரிக்க அரசாங்கத்திற்கும் ஜெனீவாவில் உள்ள ஏனையோருக்கும் இவற்றுக்கான பதிலை அரசாங்கத்திடம் இன்று அறிந்து கொள்ள வேண்டு மென்று அழுத்தங்களை செலுத்தி வருகிறார். இது ஒரு தேசத்துரோக செயலாகும். எமது நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கிய காலகட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இவ்விதம் நடந்து கொள்கிறார். அவர் இன்றைய சூழ்நிலையில் இந்நாட்டு மக்களுடன் இணைந்து செயற்பட வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவரின் கடந்த கால அரசியலை நாம் திரும்பி பார்ப்போமேயானால் அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாட்டுக்கு துரோகம் இழைக்கக்கூடிய வகையில் நடந்து கொண்டிருப்பது தெரியவரும். அவர், சர்வதேச நாணய நிதி நிறுவனத்திற்கு சென்று, இலங்கைக்கு நிதி உதவி வழ ங்க வேண்டாம் என்று கூட துரோகத் தனமான கருத்தை வெளியிட்டிருக்கிறார். சர்வதேச அரசியலிலும் அவர் யகூ திகளுக்கு ஆதரவாக செயற்பட்டி ருக்கிறார். இவ்விதம் தான் அவர் தேசத்திற்கு துரோகம் இழைக்கும் வகையில் நடந்து கொள்கிறார்.
ஐக்கிய நாடுகள் சபையில் இந்த மனிதர் நியாயமற்ற முறையில் ஈராக்கை ஆக்கிரமிப்பு செய்த மேற்குநாடுகளின் செயல் சரியானது என்று வாதாடினார். இவர் செய்யும் ஒவ்வொரு செயலும் தேசத்திற்கு தீங்கிழைக்கும் தேசத்துரோக செயலாக அமைந்துள்ளது.
சபாநாயகர் அவர்களே, எங்கள் நாட்டை இந்த எதிர்க்கட்சித் தலைவர் முஸ்லிம்களை குறிவைத்து கண்டனக் குரல் எழுப்புகிறார். இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தனது சகாவான இம்தியாஸ் பாக்கிர் மார்கார் அவர் களை ராஜபக்ஷ ஹேவலயாகே இம்தியாஸ் பாக்கிர் மார்கார் என்று பெயர்சூட்டி அவமானப்படுத்தினார்.
இது இஸ்லாத்திற்கு செய்த துரோ கமாகும். ஒரு முஸ்லிமின் பெயருடன் இன்னுமொரு மதத்தை தழுவுபவரின் பெயரை இணைத்து கூறுவது தவ றாகும். இதற்கு மறுபக்கமும் இரு க்கிறது. ஒரு தூய்மையான அதி உன்னத சிங்கள பெயரும் இவ்விதம் எதிர்க்கட்சித் தலைவரினால் துஷ் பிரயோகிக்கப்பட்டு சிங்கள சமூ கத்திற்கும் அவமானத்தை ஏற்ப டுத்தியிருக்கிறார்.
எதிர்க்கட்சித் தலைவர் நம்நாட்டு மக்களுக்கு ஒரு தகவலை வெளியிட வேண்டுமானால் சிங்களத்தில் பேசுவார். ஆயினும், மேற்குலகிலுள்ள தனது நண்பர்களுக்கு ஒரு விடயத்தை புரிய வைக்க விரும்பினால் ஆங்கி லத்தில் உரத்த குரலில் தெளிவாக பேசுவார். இவ்விதம் அவர் உள்ளூர் மக்களுக்கு ஒரு கருத்தையும், வெளி உலகில் உள்ளவருக்கு இன்னுமொரு கருத்தையும் தெரிவிக்கும் ஜெய்கல் மற்றும் மிஸ்டர் ஹைட் என்ற இருவேடங்களை அணிந்து இன்று மக்களை ஏமாற்றுகிறார்.
இந்த துரோகிகளின் செயற்பாடுகள் அவர்களுக்கோ, சமூகத்திற்கோ நன்மையை ஏற்படுத்தப் போவதில்லை. இதனால் இவர்கள் நீண்டகாலாம் எதிர்கட்சியிலேயே தேங்கி இருக்க வேண்டியிருக்கும்.
கடந்த காலத்திலும் உள்ளூரிலும், வெளிநாட்டிலும் உள்ள சக்திகள் எங்கள் அன்புக்குரிய ஜனாதிபதி அவர்களுக்கு தீங்கிழைப்பதற்கு எடுத்த முயற்சிகளை பார்த்திருக்கிறோம். என்றாலும் ஜனாதிபதி அவர்கள் தெய்வாதீனமாக அவற்றை தவிர்த்துக் கொண்டிருக்கிறார்.
ஜெனீவாவில் இவ்விதம் நாட்டுக்கு எதிராக துரோ கச் செயலை மேற்கொள் ளும் சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜ பக்ஷவின் தென்னிலங்கையில் உள்ள பச்சை மண்ணில் விலை மதிப்பற்ற மாணிக்கக்கற்கள் கண் டெடுக்கும் அதிர்ஷ்டமும் ஏற் பட்டுள்ளது. ஆகவே, இந்த நாட்டை நான் ஒரு விலை உயர்ந்த ஒரு இரத் தினக்கல்லோடு ஒப்பிட விரும் புகிறேன். எங்கள் நாட்டில் ஜன நாயகம் தழைத்தோங்கிறது என்று கூறுவதில் நான் பெருமைப் படுகிறேன்.
நாம் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்து நிலைத்திருக்கச் செய்து வருகின்றோம். 30 ஆண்டு காலம் நீடித்த பயங்கரவாத யுத்தத்தின் பின் னர் எங்கள் நாடு இன்று பாரிய அபி விருத்தி திட்டங்களை நோக்கி வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறது. இது போன்ற அபிவிருத்தி எங்கள் நாட்டின் வரலாற்றில் இதுவரையில் ஏற்பட்டதே இல்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று உலகத் தலைவர்களில் உன்னத நிலையில் இருக்கும் தேசத் தலைவராகும். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீ மூன் நேரில் சந்தித்த போது இந்த பாராட்டைத் தெரிவித்தார். எங்கள் ஜனாதிபதிக்கு தெற்காசியாவின் தலைமைத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.
இரண்டு தடவைகள் மக்களின் ஆணையை அவர் பெற்றதற்காகவே இப்பதவி கொடுக்கப் பட வேண்டும். மேற்கத்திய வல்லரசுகள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அவர்களுக்கு சமாதானம் மற் றும் ஜனநாயகத்திற்கான நோபல் பரிசை வழங்க வேண்டுமென்று நான் சிபாரிசு செய்கிறேன்.