நாடு நகர திட்டமிடல் திருத்தச் சட்டமூலம் தொடர்பாக கிழக்கு மாகாண சபையில் எதிர்வரும் 13ம் திகதி கொண்டுவரப்படவுள்ள காலநிலையில் இன்று கிழக்கு மாகாண சபாநாயகர் எச்.எம்.எம்.பாயிஸ் தலமையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பங்குபற்றுதலுடன் மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் கிழக்கு மாகாண சட்டமூலம் தொடர்பாக ஆராய்வுக்குழு எதிர்வரும் 13ம் திகதி நாடு, நகர திட்டமிடல் தொடர்பாக கிழக்கு மாகாண மக்களுக்கு எவ்வாறான பாதிப்புக்கள் பாதகமாக அமையுமா? சாதகமாக அமையுமா? என்பது தொடர்பாக ஆராய்ந்து உரிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். பாதகமாக அமையுமிடத்து எவ்வாறான திருத்தம் இடம்பெற வேண்டும் என்ற முன்மொழிவுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
நாடு, நகர திட்டமிடல் சட்டமூலம் தொடர்பாக பல்வேறுபட்ட கருத்துக்கள் கட்சியின் தலைவர்களினாலும், உறுப்பினர்களாலும் முன்வைக்கப்பட்டு வருகின்ற வேளையில் கிழக்கு மாகாணசபையின் அபிப்பிராயத்துக்காக மத்திய அரசினால் முன்வைக்கப்பட்ட பிரேரனை தொடர்பாக கிழக்கு மாகாணத்தில் அங்கம் வகிக்கும் கட்சிககளினால் திருத்தம் முன்வைக்கப்பட வேண்டும் என்பதிலும் இந்த சட்டமூலத்தினால் கிழக்கு மாகாண மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதிலும் கண்னும் கருத்துமாக செயற்பட வேண்டும் என்றும் கலந்துரையாடப்பட்டது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண அமைச்சர்களான உதுமாலெவ்பை, விமலவீர திஸாநாயக்க, து.நவரெட்னராஐh, மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
0 commentaires :
Post a Comment