அதன் பிரகாரம் குறித்த பிரச்சினையானது ஒரு மதப் பிரச்சினையாக உருவெடுக்காது அது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் தாக்கத்தை ஏறபடுத்துவதற்கு அப்பால் மாகாணம் மாத்திரமன்றி நாட்டிலும் இது ஓர் பாரிய தாக்கத்தை ஏறபடுத்துகின்ற நிலையினை தோற்றுவித்திருக்கின்றன. அந்த வகையிலே கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று(25.02.2012) மட்டு மறை மாவட்ட ஆயர் அவர்களை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
உண்மையில் சரஸ்பதி சிலை கல்விக் கூடங்களில் வைப்பது என்பது ஓர் சாதாரண விடயம் அதே வேளை இவ்வாறாக கத்தோலிக்க பாரம்பரியத்தைக் கொண்ட ஓர் பாடசாலையில் திடீரென அதாவது அது சார்ந்த மாணவர்கள் ,ஆசிரியர்களுக்கு தெரியாமல் வைத்ததென்பது தங்களுக்கு மனவேதனையளிப்பதாகவும். அதே வேளை இதனை சரியான முறையில் பாடசாலை நிருவாகம் அணுகியிருந்தால் இவ்வாறானதொரு பாராதுரமான பிரச்சினை தோன்றியிருக்காது எனவும் ஆயர்தரப்பில் கருத்து தெரிவிக்கப்படுகின்றது.
உண்மையில் பாடசாலையின் இயல்பு நிலை பாதிக்கபபடுவதென்பது ஏற்றுக்காள்ளமுடியாத ஒன்றாகும். இந்த சிலைவிவகாரத்தினால் பாடசாலை நிருவாகம் குழம்பி இருக்கிறது என்பது உண்மையில் வேதனையளிக்கிறது. இருந்தும் இதனைச் சிலர் அரசிலாக்கியது அதனை விட வேதனையளிக்கிறது. உண்மையில் சரஸ்பதி சிலை அமையப்பெறுவதற்காகன சாத்தியப்பாடுகள் 80 வீதம் இருக்கிறது. அதனை சரியான முறையிலே அணுகாமல் தாபித்தது என்பது கிறஸ்த்தவ மக்களிடையே ஓர் சந்தேகத்தை ஏறபடுத்தியதுடன் ஓர் பதற்ற நிலையினையும் தோற்றுவித்திருக்கிறது.ஆனால் எது எவ்வாறிருப்பினும் சரஸ்பதி சிலை நிறுவுவதில் எந்த பிரச்சினையும் இருக்கப்போவதில்லை. ஆனால் அதனை சரியான முறையில் அமைப்தற்கான வழிகள் இருக்கின்றன அதன்படி செயற்பட்டு அதனை நிறுவ முடியும். மாறாக ஆர்ப்பாட்டம,; பணி பகிஸ்கரிப்பு, வெளிநடப்பு செய்தல் என்பவற்றின் மூலம் மாவர்களினது கல்வியே பாதிக்படும். எனவே இறல்பு நிலைக்கு பாடசலை நிருவாகம் திரும்பி சீராக இயங்க வேண்டும்.
ஆயர்தரப்பினர்களோடு இது தொடர்பில் பேசிய போது அவர்கள் குறுகிய ஓர் காலக்கெடு கேட்டிருக்கின்றார்கள் அதன்படி இரு சமூகத்தினரின் விருப்போடு சிலை நிறுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகம் இரு;பதாகவும் முதலைமைச்சர் சி.சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
உண்மையில் இனநல்லுறவுடன் கூடிய ஓர் சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டிய பாரிய பொறுப்பில் பாடசாலைகளின் பங்கு அளப்பரியது. அவ்வாறு இருந்தும் மதம் சார்ந்த பிரச்சினைகள் மாணவர்கள் மத்தியிலே உருவாக்கப்படுதற்கான சூழலை இச் சம்பவம் ஏற்படுத்தி இருப்பது உண்மையில் வேதனையளிக்கின்றது. இந்துவாக இருந்தாலும் சரி கிறிஸ்த்வராக இருந்தாலும் சரி பிறரது மனம் வேதனைப்படாதவண்ணம் நடந்தால் எந்தப் பிரச்சினையும் தோன்றாது எனவும் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.