2/13/2012

இந்திய அரசின் நிதி உதவி திட்டத்தில் கிழக்கு மாகாணத்திற்கு நாலாயிரம் வீடுகள்

இந்திய அரசின் நிதி உதவித்திட்டத்தின் கீழ் கிழக்கு மற்றம் வட மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கபட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்திற்கென 4ஆயிரம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்று(11.02.2012) இந்திய உயர்ஸ்தானிகருக்கும் முதலமைச்சருக்குமிடையில் இது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே இந்த 4ஆயிரம் வீடுகளும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதில் 3ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கான நிதியினை நேரடியாக பயனாளிகளிடம் ஒப்படைத்து அவர்களினால் குறித்த வீடகள் நிர்மாணிக்கப்படும் எனவும் ஏனைய 1000வீடுகளையும் இந்திய அரசு நிர்மானித்து கொடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலா ஓவ்வொரு வீடும் இலங்கை ரூபாயில் 550000; பெறுமதி வாய்ந்ததாகும்.
இதனை கண்காணிப்பதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான கிழக்கு மாகாண சபை ஒரு கட்டுப்பாட்டுக் குழுவினை நியமித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதற்கான முதற்கட்ட பூர்வாங்க வேலைகள் தற்போது இடம்பெற்று முடிந்துள்ள நிலையில் மார்ச் மாதத்தின் முதல்வாரத்தில் இப் பணிகள் முழுமையாக ஆரம்பமாகும் எனவும் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் தெரிவித்தார். இவ்வாறாக கிழக்கு மாகாணத்திற்கு குறித்த எண்ணிக்கையிலான வீடுகளை தந்துதவிய இந்திய அரசிற்கு தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய அரசின் உதவிதிதட்டத்தில் மொத்தமாக 49000ஆயிரம் வீடுகள் இலங்கைகக்கு வழங்கப்படவுள்ளன. இதில் மலையகம் கிழக்கு மாகாணங்களுக்கு தலா 4000ஆயிரம் வீடுகளும் ஏனையவை வட மாகாணத்திற்கும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. முழுமையாக பொருளாதார அமைச்சு இதனை மேற்பார்வை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment