புலம்பெயர்ந்து வாழும் புத்திஜீவிகளின் அழைப்பின் பேரில் விஜயம் மேற்கொண்ட முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் குழுவினர் இலங்கைக்கான ஜேர்மனிய தூதுவர் சரத்கோன்கமகே அவர்களுடன் கலந்துரையாடியதுடன், அவரால் வழங்கப்பட்ட மதிய விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான குழுவினர் ஐரோப்பிய நாடுகளுக்கான விஜயத்தினை இரு வார காலமாக மேற்கொண்டிருந்தனர். டென்மார்க், பிரான்ஸ், சுவிஸ்லாந்து, ஜேர்மன் ஆகிய நாடுகளுக்குச் சென்று கிழக்கு மாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களையும், அரசியல் பிரதிநிதிகளையும் சந்தித்து கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வருகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், எதிர்காலத்தில் கிழக்கு மக்களின் வலுவாக்கம் தொடர்பாகவும் பல கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டது.
பிரான்ஸ் நாட்டின் புலம்பெயர்ந்த அமைப்பின் ஏற்பாட்டில், புத்திஜீவிகளுடனான கலந்துரையாடல் நடைபெற்ற போது, பிரான்ஸ் புலம்பெயர்ந்த அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள், தலித் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் ஏனைய பொது அமைப்புக்களுடனும் முதலமைச்சர் சந்திரகாந்தன் குழுவினர் உரையாடிய போது, கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திப் பணிகளைப் பாராட்டியதுடன், தொடர்ந்தும் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்கு புலம்பெயர்ந்த மக்கள் சார்பாக தொடர்ந்தும் தங்களது ஆதரவுகளை வழங்குவதாக தெரிவித்தனர்.
0 commentaires :
Post a Comment