2/05/2012

'எந்த இனத்துக்கும் எந்தப் பிராந்தியமும் சொந்தமில்லை'

'வெளிநாட்டு சக்திகள் முன்வைக்கும் தீர்வுத்திட்டத்தை ஏற்கமுடியாது'
இலங்கையிலுள்ள இனரீதியான சமூகங்கள் தனித்தனியான பிராந்தியங்களை சொந்தம் கொண்டாட முடியாது என்று அந்நாட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கை முழுவதும் எல்லா இனங்களுக்கும் சொந்தமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு சக்திகளால் முன்வைக்கப்படும் தீர்வுத்திட்டங்களின் மூலம் இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியாது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் தெரிவித்துள்ளார்.இலங்கையின் 64வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை காலை அனுராதபுரத்தில் நடைபெற்ற வைபவத்திலேயே மகிந்த ராஜபக்ஷ இந்தக் கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு

நாடாளுமன்றத்தை ஒதுக்கிவிட்டு இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாண முடியாது என்றும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றின் மூலமே இனப்பிரச்சனைக்கு சிறந்த தீர்வொன்றை முன்வைக்க முடியும் என்றும் மகிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
அதற்கு சகல அரசியல்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் இயங்கும் சில சக்திகள் நாட்டின் மீண்டும் அராஜகத்தை ஏற்படுத்த முனைவதாகவும் ராஜபக்ஷ தெரிவித்தார்.
சில நாடுகளில் ஏற்பட்ட குழப்பநிலைமைகளை இலங்கையிலும் ஏற்படுத்த இந்த சக்திகள் முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைத்த தாம் ஏற்கனவே நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் மகிந்த ராஜபக்ஷ சுதந்திர தின உரையின்போது தெரிவித்துள்ளார்.

0 commentaires :

Post a Comment