2/21/2012

பிரான்ஸ், பிரிட்டனுக்கான எண்ணெய் ஏற்றுமதி நிறுத்தம்: ஈரான் அறிவிப்பு

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் மேலும் அதிகரிப்பு
பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நிறுவனங்களுக்கான மசகு எண்ணெய் விற்பனையை ஈரான் நிறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
பிரான்ஸ் பிரிட்டனுக்கான எண்ணெய் விற்பனையை நிறுத்தி அதற்கு பதிலாக புதிய வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய் விற்க தீர்மானித்துள்ளதாக ஈரான் எண்ணெய் அமைச்சின் இணைய தளத்திற்கு தெரிவித்துள்ளார். எனினும் ஐரோப்பிய நாடுகளான நெதர்லாந்து, கிறிஸ், போர்த்துக்கல், ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக் கான எண்ணெய் விற்பனையை ஈரான் நிறுத்த வில்லை என குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியம் ஈரான்
அணு ஆயுதம் தயாரிப்பதாக குற்றம்சாட்டி எண்ணெய் தடைவிதித்தது. இந்த தடை எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ள நிலையில் ஈரான் அரசு இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஈரானிடமிருந்து தற்போது ஐரோப்பிய நாடுகள் 20 வீதமான மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. எனினும் அண் மைக்காலமாக ஈரானின் எண்ணெய் இறக்குமதியை ஐரோப்பிய குறைத்து வருகின்றன. ஈரானிடம் இருந்து கடந்த ஆண்டு நாளொன்றுக்கு 700,000 எண்ணெய் பீப்பாய்களை வாங்கிய ஐரோப்பிய நாடுகள் அதனை தற்போது 650,000 குறைத்துள்ளன.
இதில் துருக்கியே ஈராக்கிடமிருந்து அதிக மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. கடந்த ஆண்டு புள்ளி விபரத்தின்படி துருக்கி நாளொன்றுக்கு ஈரானிடம் இருந்து 200,000 எண்ணெய் பீப்பாய்களை இறக்குமதி செய்துள்ளது.
இதற்கு அடுத்ததாக கிaஸ் நாளொன்றுக்கு 80,000 பீப்பாய்களையும் ஸ்பெயின் 70,000 எண்ணெய் பிப்பாய்களையும் இறக்குமதி செய்தன.
எனினும் பிரான்ஸ், பிரிட்டன் ஆகியன ஈரான் எண்ணெய் இறக்குமதியை ஏற்கனவே குறைத்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதன்படி நேற்றைய தினத்தில் எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 121 டொலருக்கும் மேலாக பதிவாகியிருந்தது. இது கடந்த 9 மாதங்களில் பதிவான அதிகப் படியான விலையாகும்.

0 commentaires :

Post a Comment