கனேடிய தூதரக அரசியல் துறை செயலாளர் நேகன் பெஸ்டர் மற்றும் அரசியல் விவகார அலுவலகர் ஆகியோர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுடன் முதல்வரின் திருமலை அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். இச் சந்திப்பின் போது கிழக்கு மாகாணத்தின் சமகால அரசியல் நிலவரம் தொடர்பாகவும், அபிவிருத்தி நடவடிக்கை தொடர்பாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சரினால் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
அத்துடன் கனேடிய அரசாங்கத்தின் நிதி உதவி கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி திட்டத்தில் கிழக்கு மாகாணசபையின் பங்களிப்போடு உறுதி செய்யப்படும் எனவும் கனேடிய அதிகாரியினால் உறுதியளிக்கப்பட்டது. கிழக்கு மாகாண முதலமைச்சரின் அரசியல் நடவடிக்கையை உண்ணிப்பாக அவதானிப்பதாகவும், கிழக்கு முதல்வரின் மக்கள் சார்ந்த நடவடிக்கையை தாம் அவதானிப்பதாகவும் கனேடிய தூதரக அரசியல் துறை செயலாளர் தெரிவித்தார்.

0 commentaires :
Post a Comment