ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் இருந்த டெங்கு நோய் மீண்டும் நாட்டு மக்களின் உயிரைப் பறிக்கும் கோரத்தாண்டவத்தை ஆரம்பித்தி ருக்கிறது. இவ்வாண்டில் மாத்திரம் இதுவரையில் 6ஆயிரத்து 188 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் இது வரை 27 பேர் மரணித்திருக்கிறார்கள்.
ஜனவரி மாதத்தில் மாத்திரம் எல்லாமாக 3ஆயிரத்து 891டெங்கு நோயா ளிகளும் பெப்ரவரி மாதத்தில் 2ஆயிரத்து 247பேரும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளனர். இந்த டெங்கு நோயாளிகளில் 57.97சதவீதத்தினர் மேல் மாகாணத்தில் இருப்பதாக சுகாதார அமைச்சின் நோய்த் தடுப்பு பிரிவு அறிவிக்கின்றது.
கம்பஹா மாவட்டத்தில் 4 பேரும், களுத்துறையில் 20பேரும் கண்டியில் மூவரும் காலியில் ஒருவரும், அம்பாந்தோட்டையில் ஒருவரும், இர த்தினபுரி இருவரும் புத்தளத்திலும் மூவரும், கல்முனையில் ஒருவ ரும் டெங்கு நோயினால் மரணித்திருக்கிறார்கள்.
நம்நாட்டு மக்களின் கவனக்குறைவே டெங்கு நோய் மீண்டும் தலைதூக் குவதற்கான பிரதான காரணமாகும். இரண்டு மாதங்களுக்கு முன்னர் டெங்கு நோய் ஆபத்து குறித்து பத்திரிகைகளும், இலத்திரனியல் ஊட கங்களும் மக்களுக்கு அறிவுறுத்தல்களை விடுத்து, டெங்கு நோய் பரவாதவாறு அவர்கள் வாழும் பிரதேசங்களில் சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென்று மேற்கொண்ட பிரசாரத்தை அடுத்து, மக்கள் டெங்கு நுளம்பு ஒழிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார்கள்.
ஆயினும், கடந்த இரண்டு மாதங்களாக டெங்கு என்ற ஒரு நோய் இரு ப்பதையே மக்கள் மறந்து தாங்கள் வாழும் பிரதேசத்தை சுத்தமாக வைத்திருக்கவோ, தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள கழிவு நீர் வழிந்து செல்லும் கால்வாய்களில் உள்ள அடைப்புகளில் உள்ள குப் பைக் கூளங்களை அகற்றவோ நடவடிக்கை எடுக்கவில்லை. அத னால் டெங்கு நுளம்புகள் மீண்டும் எவ்வித துன்புறுத்தலும் இன்றி, தங்கள் பாட்டுக்கு இனவிருத்தியை மேற்கொண்டு அப்பாவி மக்களு க்கு டெங்கு நோயை பரவச் செய்து கொண்டிருந்தது.
பயங்கரவாதிகளின் தாக்குதலைப் போன்று டெங்கு நோய், எவரும் எதிர் பாராத சந்தர்ப்பங்களிலேயே மக்களை தாக்குகின்றது. டெங்கு நோய் நுளம்புகள் குறித்து அவதானம் செலுத்த மக்கள் தவறும் போதே அவை மக்களுக்கு தீங்கிழைக்கின்றன. உள்ளூராட்சி மன்றங்களின் சுகாதாரப் பிரிவினர் நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் சென்றும் டெங்கு நோய் பரவுவதை தடுப்பதற்கான பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
டெங்கு நுளம்பு இனவிருத்தி செய்யும் இடங்களை சுத்தம் செய்யாமல் வைத்திருப்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கும் இந்த உள்ளூராட்சி மன்ற சுகாதாரப்பிரிவு உத்தியோகத்தர்கள் நடவடி க்கை எடுக்கத் தவறவில்லை. இவ்விதம் நாடெங்கிலும் உள்ளூராட்சி மன்றங்கள் மேற்கொண்டு வந்த டெங்கு நுளம்பு தடுப்பு நடவடிக்கை கள் கடந்த பல வாரங்களாக பலவீனமடைந்ததை அடுத்து, மக்கள் டெங்கு நுளம்புகளை அழித்துவிடுவதில் முன்னர் கொண்டிருந்த ஆர் வமும் படிப்படியாக வலுவிழந்து மக்கள் டெங்கு நோயைப் பற்றி முற்றாக மறந்து போயினர்.
இவ்விதம் மக்களின் பொறுப்பற்ற செயற்பாடே மீண்டும் டெங்கு நோய் நாட்டில் பரவுவதற்கு பிரதான காரணமாக அமைந்திருக்கிறது. கடந்த ஓரிரு வாரங்களாக நாட்டில் பரவலாக பெய்த மழையும் டெங்கு நோயின் இனவிருத்திக்கு உறுதுணை புரிந்துள்ளது. வீட்டுக் கூரைப் பீலிகளில் நீர்வடியாமல் தங்கியிருத்தல் மற்றும் கவனிப்பாரற்ற நிலை யில் உள்ள குப்பைத் தொட்டிகளில் நீர் தேங்கி நிற்பதும் டெங்கு நோய் நுளம்புகள் இனவிருத்தி செய்யப்படுவதற்கு பிரதான காரண மாகும்.
சுகாதார அமைச்சு டெங்கு நோயாளிகளை குணப்படுத்துவதுடன் எங்கள் கடமை முடிவடைந்துவிட்டது என்ற போக்கில் பொறுப்பற்ற முறை யில் நடந்து கொள்கிறது. சுகாதார அமைச்சு நோயாளிகளை குணப் படுத்துவதில் மாத்திரமின்றி நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கும் மற்ற அமைச்சுகளுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும் பணியையும் மேற்கொள்வது அவசியமாகும்.
அதைவிடுத்து அரசாங்க திணைக்களங்களுக்கிடையில் இது நீங்கள் செய்ய வேண்டிய பொறுப்பு, இந்த விடயத்தில் நாம் தலையிட முடி யாது என்று, பொறுப்பற்ற முறையில் டெங்கு நோய் ஒழிப்பு செயற் பாடுகளை மற்றவர்கள் மீது சுமத்திவிட்டு, தாங்கள் அவற்றில் இரு ந்து விடுபடுவதற்கு எடுக்கும் முயற்சிகளும் இறுதியில் டெங்கு நோய் பெருமளவில் பரவி, இந்நாட்டு மக்களுக்கே பெரும் உபாதைகளை ஏற்படுத்துகிறது.
டெங்கு நோயை தடுக்கும் பொறுப்பு அமைச்சுகளுக்கும் அரசாங்கத் திணை க்களங்களுக்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கும் இருப்பதை நாம் ஏற் றுக் கொள்ளும் அதே வேளையில், பொதுமக்களும் தங்கள் சமூகப் பொறுப்பை உணர்ந்து டெங்கு நோய் கிருமிகளை ஒழிக்கும் பணியை நாளாந்தம் மேற்கொள்வது அவசியமாகும். மற்றவர்களின் வழிநடத்தலின் கீழ் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு பதில், மக்களே விழிப்புணர்வைப் பெற்று, டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகளை எங்கள் நாட்டில் இருந்து முற்றாக ஒழித்துவிட முன்வர வேண்டும்.
இதன் மூலமே இலங்கையில் ஓர் ஆரோக்கியமான சமுதாய அமை ப்பை நாம் உருவாக்க முடியும். டெங்கு நோய் பெரும்பாலும் சிறுவர், சிறுமியரையே தாக்கி, அவர்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்துகின்றது. எனவே, மக்கள் எமது எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வுக்கும் டெங்கு ஒழிப்பு செயற்பாடுகளுக்கும் முன்னுரிமை அளிப்பது அவசி யமாகும்.