2/13/2012

நாடு நகரத்திட்டமிடல் திருத்தச் சட்டமூலம் தற்போது அவசியமற்றதொன்றாகும் – கிழக்கு மாகாண முதலமைச்சர்



தற்போது மாகாண சபைகளின் ஒப்புதல்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ள நாடு மற்றும் நகரதிட்டமிடல் திருத்தச் சட்மூலத்தில் சிறுபான்மை மக்களை பாதிக்கின்ற வகையில் பல சரத்துக்கள் உள்ளதனால் சிறுபான்மை மக்களின் அதிகாரங்களைப் பேசிப் பெறுகின்ற மாகாண சபையாக திகழ்கின்ற கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் அதில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரியுள்ள நிலையில் உண்மையிலே தற்போதைய நிலையில் குறித்த சட்ட மூலமானது தற்போது அவசியமற்றதொன்றாக தாம் கருதவதாக கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்று(11.02.2012) பொருளாதார அபிவிருத்தி  அமைச்சர் பசில் ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர்களுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான கிழக்கு மாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்குமிடையில் இது தொடபர்பிலான முக்கிய சந்திப்பொன்று பொருளாதார அமைச்சில் இடம் பெற்றுள்ளது.
அதன் போது கிழக்கு மாகாண சபைக்கு நாளை கொண்டுவரப்பட இருந்த குறித்த திருத்தச் சட்டமூலம் தொடர்பாக விவாதித்து, அதன் பின்னர் குறிப்பிட்ட மாற்றங்களைச் செய்யவேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இக் கலந்துரையாடலில் அமைச்சர் பசில் ராஜாக்ஸ தலைமையிலான குழுவில் பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே, புத்தசாசன அமைச்சின் செயலாளர், காணி அமைச்சின் செயலாளர், நகர அபிவிருத்தி அமசை;சின் செயலாளர்ஆகியோரும் கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவில் மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வே, கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, விவசாய அமைச்சர் து.நவரெட்ணராஜா, சுகாதரா அமைச்சர் எம்.எஸ்.சுபைர்,கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ், பிரதி தவிசாளர் ஆரியவதிகலபதி, மாகாணசபை உறுப்பினர்களான எஸ்.புஸ்பராஜா, பூ.பிரசாந்தன்,பரீட், பிரேமகுமார ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :

Post a Comment