2/23/2012

| |

செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தின் வருடார்ந்த இல்ல விளையாட்டுப் போட்டி

செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தின் 2012ம் ஆண்டிற்கான வருடார்ந்த இல்ல மெய்வலுனர் திறனாய்வு போட்டி வித்தியாலயத்தின் அதிபர் அருள்ராஜா தலைமையில் இன்று(02.02.2012.) இடம் பெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து சிறப்பித்தார். மேலும் சிறப்பதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் வலயக் கலிவி பணிப்பாளர் திருமதி புள்ளநாயகம் ,மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் சிவகுணம்,கல்வி திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஊர் மக்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.சேரன், சோழன்,பாண்டியன் என மூன்று இல்லங்கள் இவ் வித்தியாலயத்திலே அமையப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.