2/24/2012

| |

மட்/ வின்சன்ற் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையின் மூன்று மாடிக் கட்டிடம் திறந்து வைப்பு மட்/ வின்சன்ற் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையின் மூன்று மாடிக் கட்டிடம் திறந்து வைப்பு


கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் வேண்டுதலின் பிரகாரம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 30 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மேற்படி பாடசாலையின் மூன்றுமாடி கட்டிடமானது இன்று(23.02.2012) பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அவர்களினால் திறந்து வைக்கபட்டது.
விஞ்ஞான ஆய்வுகூடம், வகுப்பறைக்கட்டிடம் மற்றும் ஒன்று கூடல் மண்டபம் என மூன்று கட்டிடத்தொகுதிகளைக் கொண்ட மூன்று மாடிக் கட்டிடத்திறப்பு விழா நிகழ்வானது வித்தியாலயத்தின் அதிபர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் அதிதிகளாக அமைச்சர் ஏ.எச்.எம் பௌஸி, பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.ஏம்.ஹிஸ்புல்லாஹ், பசீர் சேகுதாவுத், மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வே, மாகாண சபை உறுப்பினர்களான எ.சி.கிருஸ்ணானந்தராஜா, பூ.பிரசாந்தன், மட்டு அரச அதிபர் சு.அருமைநாயகம், மட்டு மாநகர பிரதி மேயர் ஜோர்ச் பிள்ளை, ஏறாவூர் நகர சபைத் தலைவர் அலிஸாஹிர் மௌலானா, பிரதேச செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா மற்றும் பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.