2/19/2012

மாடு அல்ல மணி கட்டின மாடு சொல்லுதுங்கோ

வட மாகாணத் தமிழர்கள் குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் சேகரித்து வைத்திருக்கின்ற தகவல்கள் மிகவும் சுவையானவையும், சுவாரஷியம் நிறைந்தவையும் ஆக உள்ளன.
வட மாகாண தமிழர் – பெருமை பிடித்தவர்கள் என்கிற உப தலைப்பில் இத்தகவல்கள் எழுதப்பட்டு உள்ளன
பரந்த விரிந்த சமுதாய நோக்கின்படி வட மாகாண தமிழர்களுக்கும், கிழக்கு மாகாண தமிழர்களுக்கும் இடையில் மிக நீண்ட காலமாகவே பதற்ற நிலை காணப்பட்டு வருகின்றது
பொதுவாக இந்து உயர் சாதியைச் சேர்ந்த வட மாகாண தமிழர்கள் அதிகம் படித்தவர்கள், நகரவாசிகள். கிழக்கு மாகாண தமிழர்கள் பொதுவாக வறியவர்கள், கிராமவாசிகள்.
இலங்கையில் யாழ்ப்பாணம்தான் தமிழர்களின் கலாசார அடையாளத்தின் மையமாக விளங்குகின்றது என்று காலம் காலமாக சொல்லி வருகின்றனர். பெருமை பிடித்தவர்கள்.
கல்வியில் உயர்ந்தவர்கள் என்று சுயம் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். ஏராளமான பாடசாலைகள் யாழ்ப்பாணத்தில் உள்ளன. அமெரிக்க சபைகளினால் 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பல பாடசாலைகள் இங்கு உள்ளன.
கல்வித் தகைமைகள் காரணமாக பிரித்தானியர் ஆட்சியிலும் வட மாகாண தமிழர்கள் பயன் பெற்றனர். குறிப்பாக எழுதுவினைஞர் பதவி உட்பட பல பதவிகளிலும் அமர்த்தப்பட்டனர். வட மாகாண தமிழர்கள் என்கிறபோது இந்து வெள்ளாளர்களை குறிக்கின்றோம்.
யாழ்ப்பாண தமிழர்களில் பலர் கொழும்பில் மிகவும் வசதியாக உள்ளனர், வர்த்தகம் செய்கின்றார்கள். வெளிநாடுகளில் செல்வச் செழிப்புடன் வசிக்கின்ற இலங்கைத் தமிழர்களில் அநேகர் யாழ்ப்பாணத்தார்.
இலங்கையில் 23 சதவீதமானவர்கள் தமிழர்கள் என்றால் 18 சதவீதமானவர்கள் இலங்கைத் தமிழர், 05 வீதமானவர்கள் மலையகத் தமிழர். இலங்கைத் தமிழரில் மூன்றில் இரண்டு பங்கினர் யாழ்ப்பாணத்தார்.
வட மாகாண தமிழர்களில் அநேகர் அகம்பாவமும், தற்பெருமையும் பிடித்தவர்கள் என்பதை வட மாகாணத்தார் இயல்பாகவே ஏற்றுக் கொள்கின்றனர்.
யாழ்ப்பாணத்தார் எங்குல்லாம் போகின்றனரோ அங்கு சொத்துக்களை வாங்கி குட்டிப் பிரபுக்கள் போல் வாழ்கின்றனர், இவர்களின் தலைக் கனத்தை விளங்கிக் கொள்ள முடிகின்றது என யாழ்ப்பாண கத்தோலிக்க பாதிரியார் நிக்கொலஸ் தெரிவித்தார்.
ஆளப் பிறந்தவர்கள் என்கிற உணர்வு வட மாகாண தமிழர்களுக்கு உள்ளது, இலங்கையில் தமிழ் சமுதாயத்தை கட்டாயம் தலைமை தாங்கி நடத்த வேண்டியவர்கள் என்கிற உணர்வை பிறப்புரிமையாக கொண்டு இருக்கின்றனர் என்று சுரேஸ் பிறேமச்சந்திரன் கூறினார்.
தூதரகத்தில் இருந்து 2004 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இவ்விபரங்கள் கிடைத்து உள்ளன.

0 commentaires :

Post a Comment