கடந்த 01.01.2012 அன்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தேன் அக்கடிதத்தில் கூட்டமைப்பின் அரசுடனான பேச்சுவார்த்தைகளின்போது வடக்கு கிழக்கு இணைப்பு தவிர்ந்த பொலிஸ் காணி அதிகாரங்கள் தொடர்பாக பேசப்படும்போது அதற்கு அதரவு வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடாத்த நாம் தயாராக இருக்கின்றோம் என்று குறிப்பிட்டு அனுப்பி இருந்தேன். ஆனாலும் சம்பந்தனிடம் இருந்து இன்னும் பதில் கிடைக்கவில்லை. இனிமேலும் பதில் கிடைக்கும் என்று நம்பிக்கை இல்லை. என்று மடஃகளுதாவளை மகா வித்தியாலய வருடாந்ந இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் உரையாற்றுகையில் ஒரு தமிழ் கட்சியன் தலைவராகவும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு முதலமைச்சர் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்த அழைப்பு விடுக்கின்றபோது அதனை அலட்சியப்படுத்தி தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி ஒரு இணக்கப்பாட்டுக்கு வர முன்வராத கூட்டமைப்பினர் அரசாங்கத்துடன் பேசி தமிழ் மக்களுக்கு என்ன தீர்வினை பெற்றுத்தரப் போகின்றனர்.
வெறுமனே தமிழ் மக்களை ஏமாற்றி தமிழர்களை படுகுழியில் தள்ளும் முயற்சியில் கூட்டமைப்பினர் ஈடுபடுகி்றனர். எமது கட்சியானது மாகாணசபை முறமைமூலம்தான் தீர்வினைப்பெற முடியும் என்பதனை வலியுறுத்தி வருகின்றோம். அன்று நாம் மாகாண சபையை கைப்பற்றியபோது மாகாணசபை ஒன்று இல்லை என்று சொன்னவர்கள் இன்று மாகாணசபை முறமை தொடர்பாக பேச முன்வருகின்றனர்.
கூட்டமைப்பினரிடம் ஒரு தெளிவான அரசியல் திட்டம் இல்லை. கூட்டமைப்பினரின் இவ்வாறான செயற்பாடுகளை நோக்கி மக்கள் சென்றார்களானால். தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குறியான நிலைதான். மக்கள் உண்மைகளையும் யதார்த்தங்களையும் இன்றைய தேவைகளையும் உணர்ந்து செயற்பட வேண்டும். கிழக்கு மாகாணம் துரிதமாக வளர்ச்சி அடைந்து வருகின்றது இதனை எவராலும் மறுக்க முடியாது.
நாமும் உலக மாற்றத்திற்கு ஏற்ப மாறவேண்டி இருக்கின்றது. எமது சமூகத்தின் கல்வித்துறை வளர்ச்சிபெற வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். நாம் கல்வித்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம். அதனை கருத்திற்கொண்டு எமது கல்விச் சமூகமும் சிறந்த கல்வியலாளர்களை உருவாக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இவ் விழாவில் முதலமைச்சர் அவர்கள் பொன்னாடை போற்றி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை அதிபர் திருநாவுக்கரசு தலைமையில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளர் ந.புள்ளநாயகம் கொளரவ மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் உட்பட பல கல்வித்துறை சார்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.
0 commentaires :
Post a Comment