2/15/2012

கிழக்கு பல்கலைக் கழகத்திற்கு புதிய உபவேந்தர்

கிழக்கு பல்கலைக்கழத்தின் எட்டாவது உப வேந்தராக கனடாவிலுள்ள கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நியமனம் தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவினால் கிழக்கு பல்கலைக்கழ நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர் உப வேந்தராக கடமையாற்றிய கலாநிதி என்.பத்மநாதன் 2010ஆம் ஆண்டு நடு பகுதியில் எதிர்நோக்கிய நெருக்கடி நிலையொன்றின் காரணமாக பதவி விலகியதிலிருந்து குறித்த பதவி வெற்றிடம் காணப்பட்டது.
இந்நிலையில்இ குறித்த பதவிக்கு கிழக்கு பல்கலைக்கழக பேரவையினால் பேராதனை பல்கலைக்கழக மருத்துவ துறை பேராசிரியர் ஆர்.சிவக்கநேசன்இ கிழக்கு பல்கலைக்கழக விவசாய பீட பீடாதிபதி எஸ்.சுதர்சன்இ கனடாவில் வசிக்கும் கலாநிதி கிட்ணன் கொபிந்தராசா ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தன.
இதனையடுத்தே கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா கிழக்கு பல்கலைக்கழத்தின் எட்டாவது உப வேந்தராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கணித துறையில் கலாநிதி பட்டம் பெற்ற இவர்இ 1993ஆம் ஆண்டு தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரையிலான கால பகுதியில் கிழக்கு பல்கலைக்கழத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.
கிழக்கில் நிலவிய அசாதாரன சூழ்நிலை காரணமாக 2004ஆம் ஆண்டு  நாட்டை விட்டு வெளியேறியஇ இவர் தற்போது கனடாவிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் பகுதி நேர பேராசிரியராக பணியாற்றுகின்றார்.

0 commentaires :

Post a Comment