தொடர்ந்து அவர் பேசுகையில், உண்மையில் இந்த வருடத்தின் முதன் நாளிலே முதலாவதாக நான் கையொப்பமிட்ட கடிதம் என்றால் அது தமிழ் தேசிய கூட்டைப்பிற்கு அனுப்பிய கடிதம்தான். ஆனால் பொறுப்பு வாய்ந்த மற்றும் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்றெல்லாம் கொல்கின்ற பழமை வாய்ந்த கட்சி இன்று 50நாளாகியும் பதில் அனுப்பவில்லை என்பது உண்மையில் வேதனை அளிக்கிறது.
ஏன் என்றால் இது என்னையோ அல்லது எனது கட்சியையோ அல்லது எனது முதலமைச்சர் பதவியையோ கேவலப்படுத்தும் செயல் அல்ல. உண்மையில் ஒட்டு மொத்த எமது கிழக்கு மாகாண தமிழ் மக்கள் அனைவரையும் கேவலப்படுத்தும் செயலாகும். ஏன் இதனை நான் சொல்கின்றேன் என்றால் தற்போதைய யதார்த்த பூர்வமான விடயங்களை அதாவது வடக்கு கிழக்;கு இணைப்புத் தவிர்ந்த அதிகாராப்பகிர்வு விடயங்கள் பற்றி பேசுவதற்காகவே நான் அக் கடித்தினை வரைந்திருந்தேன்.
அதாவது எமது மக்களின் உரிமை மற்றும் அதிகாரங்கள் பற்றி பேசவதற்கு எனது பூரண ஒத்துழைப்பும் தங்களுக்கு இருக்கும் என்ற தோரணையில் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் சார்பாக எழுதியிருந்தேன.; அதற்கு எந்தவொரு பதிலும் வழங்காத கட்சி எவ்வாறு எதிர்காலத்தில் கிழக்கு மாகாண மக்களின் அபிலாசைகளை புரிந்து கொண்டு அரசியல் செய்யப் போகிறார்கள். இவர்கள் காலங்காலமாக எம்மை ஏமாற்றியது போல் இன்றும் எம்மை ஏமாற்றுவார்களா? என்று பார்ப்பதற்கு இக் கடிதம் ஓர் சிறந்த சான்று என்றால் கூட அது மிகையாகாது. ஏன் என்றால் கிழக்கிலிருப்பவர்கள் என்ன சொன்னாலும் வடக்கிலுள்ள அரசியல் வாதிகளுகு;கு செவிடன் காதில் சங்கு ஊதினால் போல இருக்கும் எனவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாரை மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சோ.புஸ்பராஜா, மட்டக்களப்பு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் போரதீவுப் பற்று பிரதேச சபையின் தவிசாளர் சிறிதரன், பட்டிருப்பு வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், கிராம அமைப்புக்கள் மற்றும் பிரதேச புத்திஜீவிகள் எனப் பலர் கலந்து சிறப்பித்தார்கள். இன்று திறந்த வைக்கப்படட் பாடசாலையானது பட்டிருப்பபு வலயத்திலே 67ஆவது பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது.