ஜனாதிபதியின் கிராமங்கள் தோரும் மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் வாழைச்சேனை திகிலிவெட்டை கிராம சேவகர் பிரிற்கான மின் விநியோகம் இன்று வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ரீ.உதயஜீவதாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், மின்சார சபையின் வாழைச்சேனை பிரதேச பொறுப்பதிகாரி என்.சோதிராஜா, வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
கடந்த 2009ஆம் ஆண்டு தேசநிர்மான அமைச்சின் எழுபத்தெட்டு இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இம் மின்விநியோகத் திட்டம் இன்று மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
இம்மின் விநியோகத்தின் மூலம் திகிலிவெட்டை, குளத்து வெட்டை, வாத்தியார்ரகல், வகுனகுடா, நாவலம் பட்டி ஆகிய கிராம மக்கள் நன்மை பெறவுள்ளதாக வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் உதயஜீவதாஸ் தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment