2/05/2012

அடுத்த வருடம் ‘தேசத்திற்கு மகுடம்’ கண்காட்சி கிழக்கு மாகாணத்தில்

2013 ஆம் ஆண்டு தேசத்திற்கு மகுடம் கண்காட்சியானது கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை மாவட்டங்களை மையப்படுத்தி  கிழக்கில் இக்கண்காட்சி நடைபெறும் என அவர் கூறினார்.
இவ்வருடத்திற்கான   தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை அநுராதபுரத்தில் இன்று  ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
மேற்படி கண்காட்சியானது  மட்டக்களப்பில் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment