ஐரோப்பிய விஜயமொன்றினை கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் கடந்த திங்களன்று பாரிஸ் நகரில் இடம் பெற்ற முக்கிய சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டார்.இந்நிகழ்வில் பலதரப்பட்ட கட்சிகளையும் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள்,எழுத்தாளர்கள்,அரசியல் ஆர்வலர்கள்,—என பலரும் கலந்து கொண்டனர்.அங்குஉரையாற்றிய முதலமைச்சர் கிழக்குமாகாண சபை ஊடாக மேட்கொள்ளப்பட்டு வரும் பலவிதமான அபிவிருத்தி முயற்சிகள்,அதனூடாக மாகாணம் அடைந்து வரும் முன்னேற்றம்,சமுக பொருளாதார வளர்ச்சிகள் என்பவற்றைவிரிவாக எடுத்துரைத்தார்.குறிப்பாக பால்,நெல் போன்ற உற்பத்தி துறைகளில் தேசிய உற்பத்தியில் கிழக்கு மாகாணம் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கும் நிலைக்கு வளந்திருப்பதனைசுட்டிக்காட்டினர் முதலமைச்சரது உரை மேலும் சமகால அரசியல் நிகழ்வுகள்பற்றியும் நீண்டமைந்திருந்தது.அதனைத்தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் முதலமைச்சரின் உரையைஒட்டி தத்தமது கருத்துக்களை முன்வைத்து பலகேள்விகளையும் எழுப்பினர்.இவ்வாறாக தொடங்கிய இச்சந்திப்பானது கேள்விகள், பதில்கள்,உரையாடல்கள்,விவாதங்கள் என்றவாறாக விரிவடைந்தது.முதலமைச்சரால் தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைமைக்கு எழுதப்பட்ட கடிதம், கிழக்கு வடக்கு இணைப்புஇகாணி போலிஸ் அதிகாரங்கள் பற்றிய காரசாரமான விவாதங்களும் இடம் பெற்றன.கூட்டத்தில் கலந்து கொண்ட கிழக்குமாகாண மக்கள் சார்பில் மாகாண சபையின் அபிவிருத்தி பணிகள், குறித்து எழுப்பப்பட்ட சந்தேகங்களையும் கேள்விகளையும், முதலமைச்சர் பொறுமையோடு கேட்டறிந்து விளக்கமளித்தார்.முதலமைச்சருடன் கிழக்குமாகாணசபை உறுப்பினர் பிரசாந்தன் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளின் பேச்சாளர் அசாத் மெளலானா தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளின்முக்கியஸ்த்தர்களான எம்.ஆர்.ஸ்ராலின்(ஞானம்) ,துரை போன்றோரும் இக்கூட்டத்தில்பங்கெடுத்தனர்.முதலமைச்சருடனான இச்சந்திப்பினை ஜனனயகத்திற்கான கிழக்கிலங்கை முன்னணியினர் ஏற்பாடு செய்திருந்தனர்
0 commentaires :
Post a Comment