30ஆவது மாகாண முதலமைச்சர்கள் மாநாடு கண்டியில் இன்று(19.02.2012) நடைபெற்றது. மாகாண முதலமைச்சர்கள் மாநாட்டின் தலைவரும் மத்திய மாகாண முதலமைச்சருமான சரத் ஏக்கநாயக்க தலைமையில் இன்றைய மாநாடு ஆரம்பமானது.
எட்டு மாகாண சபைகளைச் சேர்ந்த முதலமைச்சர்கள் இதில் கலந்துகொண்டிருந்த போதிலும், ஊவா மாகாண முதலமைச்சர் ஷசிந்திர ராஜபக்ஸ அதில் கலந்துகொண்டிருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி பீ.பீ ஜயசுந்தர ஆகியோரும் மாநாட்டில் கலந்து்கொண்டனர். மாகாண முதலமைச்சர்களின் 31 ஆவது மாநாடு ஊவா மாகாணத்தில் நடைபெறவுள்ளது.
0 commentaires :
Post a Comment