ஏலவே எதிர்வரும் 28ந் திகதி இடம்பெறவிருந்த கிழக்கு மாகாண சபை அமர்வானது ஒரு நாள் முந்தியே(27.02.2012) கூட இருப்பதாக மாகாண சபையின் தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ் தெரிவித்துள்ளார். தற்போது மாகாண சபைகளின் ஒப்பதலுக்காக அனுப்பப்பட்டுள்ள நாடு நகரத்தி திருத்தச் சட்டமூலம் கடந்த 13.02.2012ந் கிழக்கு மாகாண சபையின் அங்கிகாரத்திற்கு சமர்ப்பித்த போது அதில் குறிப்பிட்ட சில மாற்றங்களை செய்து தரும்படி திரும்ப அனுப்பட்டிருந்தது. அப்போது எதிர்வரும் சபை அமர்வு 28.02.2012 அன்று கூடும் எனவும் தவிசாளர் பாயிஸ் அவர்கள் தெரிவித்திருந்தாh. ஆனால் தற்போது ஒருநாள் முந்தி கூடப்படவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வில் திருத்தங்களளுடன் கூடிய நாடு நகரத்திருத்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.