வாகனேரி கோகுலம் வித்தியாலயத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் வளங்கப்பட்ட 2 மாடிக்கட்டட திறப்பு விழா இன்று (09.02.2012) பாடசாலையின் அதிபர் பாலச்சந்திரன் தலமையில் இடம்பெற்றது. இக் கட்டடத்தை பிரதம அதிதியாக கலந்து கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் திறந்து வைத்தார். பாடசாலையின் அதிபரினால் அதிதிகளுக்கு நினைவுச்சின்னம் வளங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வுக்கு அதிதிகளாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி, கல்குடா வலையக்கல்வி பணிப்பாளர் சுபா சக்கரவர்த்தி, கோட்டக்கல்வி அதிகாரி குணலிங்கம், முதலமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி அ.செல்வேந்திரன், பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :
Post a Comment