கிழக்கு மாகாண கிராமப்புற மாணவர்களுக்கு இடைநிலைக் கல்வியை வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் ஐந்து வருடங்களுக்குள் 135 பாடசாலைகளில் இடைநிலை வகுப்புக்கள் ஆரம்பிப்பதற்கான அனுமதியை கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு வழங்கியுள்ளதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ. புஸ்பகுமார தெரிவித்தார்.
கிழக்கில் யுத்த சூழ்நிலை நீங்கி அமைதியேற்பட்டபின் கிராமப்புற மாணவர்களின் இடைநிலைக் கல்வியை மேம்படுத்த வேண்டிய அவசியத்தேவை உணரப்பட்டதாலேயே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தரம் 6 முதல் தரம் 9 வரையான வகுப்புக்கள் 33 பாடசாலைகளிலும் தரம் 9 தொடக்கம் தரம் 11 வரையிலான வகுப்புக்கள் 51 பாடசாலைகளிலும் க.பொ.த. உயர்தர வகுப்புக்கள் 51 பாடசாலைகளிலும் புதிதாக ஆரம்பிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்
0 commentaires :
Post a Comment