2/29/2012

| |

மீண்டும் தலைதூக்கும் டெங்கு நோயை ஒழித்துக் கட்டுவது மக்களின் கடமையாகும்

ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் இருந்த டெங்கு நோய் மீண்டும் நாட்டு மக்களின் உயிரைப் பறிக்கும் கோரத்தாண்டவத்தை ஆரம்பித்தி ருக்கிறது. இவ்வாண்டில் மாத்திரம் இதுவரையில் 6ஆயிரத்து 188 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் இது வரை 27 பேர் மரணித்திருக்கிறார்கள்.
ஜனவரி மாதத்தில் மாத்திரம் எல்லாமாக 3ஆயிரத்து 891டெங்கு நோயா ளிகளும் பெப்ரவரி மாதத்தில் 2ஆயிரத்து 247பேரும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளனர். இந்த டெங்கு நோயாளிகளில் 57.97சதவீதத்தினர் மேல் மாகாணத்தில் இருப்பதாக சுகாதார அமைச்சின் நோய்த் தடுப்பு பிரிவு அறிவிக்கின்றது.
கம்பஹா மாவட்டத்தில் 4 பேரும், களுத்துறையில் 20பேரும் கண்டியில் மூவரும் காலியில் ஒருவரும், அம்பாந்தோட்டையில் ஒருவரும், இர த்தினபுரி இருவரும் புத்தளத்திலும் மூவரும், கல்முனையில் ஒருவ ரும் டெங்கு நோயினால் மரணித்திருக்கிறார்கள்.
நம்நாட்டு மக்களின் கவனக்குறைவே டெங்கு நோய் மீண்டும் தலைதூக் குவதற்கான பிரதான காரணமாகும். இரண்டு மாதங்களுக்கு முன்னர் டெங்கு நோய் ஆபத்து குறித்து பத்திரிகைகளும், இலத்திரனியல் ஊட கங்களும் மக்களுக்கு அறிவுறுத்தல்களை விடுத்து, டெங்கு நோய் பரவாதவாறு அவர்கள் வாழும் பிரதேசங்களில் சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென்று மேற்கொண்ட பிரசாரத்தை அடுத்து, மக்கள் டெங்கு நுளம்பு ஒழிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார்கள்.
ஆயினும், கடந்த இரண்டு மாதங்களாக டெங்கு என்ற ஒரு நோய் இரு ப்பதையே மக்கள் மறந்து தாங்கள் வாழும் பிரதேசத்தை சுத்தமாக வைத்திருக்கவோ, தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள கழிவு நீர் வழிந்து செல்லும் கால்வாய்களில் உள்ள அடைப்புகளில் உள்ள குப் பைக் கூளங்களை அகற்றவோ நடவடிக்கை எடுக்கவில்லை. அத னால் டெங்கு நுளம்புகள் மீண்டும் எவ்வித துன்புறுத்தலும் இன்றி, தங்கள் பாட்டுக்கு இனவிருத்தியை மேற்கொண்டு அப்பாவி மக்களு க்கு டெங்கு நோயை பரவச் செய்து கொண்டிருந்தது.
பயங்கரவாதிகளின் தாக்குதலைப் போன்று டெங்கு நோய், எவரும் எதிர் பாராத சந்தர்ப்பங்களிலேயே மக்களை தாக்குகின்றது. டெங்கு நோய் நுளம்புகள் குறித்து அவதானம் செலுத்த மக்கள் தவறும் போதே அவை மக்களுக்கு தீங்கிழைக்கின்றன. உள்ளூராட்சி மன்றங்களின் சுகாதாரப் பிரிவினர் நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் சென்றும் டெங்கு நோய் பரவுவதை தடுப்பதற்கான பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
டெங்கு நுளம்பு இனவிருத்தி செய்யும் இடங்களை சுத்தம் செய்யாமல் வைத்திருப்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கும் இந்த உள்ளூராட்சி மன்ற சுகாதாரப்பிரிவு உத்தியோகத்தர்கள் நடவடி க்கை எடுக்கத் தவறவில்லை. இவ்விதம் நாடெங்கிலும் உள்ளூராட்சி மன்றங்கள் மேற்கொண்டு வந்த டெங்கு நுளம்பு தடுப்பு நடவடிக்கை கள் கடந்த பல வாரங்களாக பலவீனமடைந்ததை அடுத்து, மக்கள் டெங்கு நுளம்புகளை அழித்துவிடுவதில் முன்னர் கொண்டிருந்த ஆர் வமும் படிப்படியாக வலுவிழந்து மக்கள் டெங்கு நோயைப் பற்றி முற்றாக மறந்து போயினர்.
இவ்விதம் மக்களின் பொறுப்பற்ற செயற்பாடே மீண்டும் டெங்கு நோய் நாட்டில் பரவுவதற்கு பிரதான காரணமாக அமைந்திருக்கிறது. கடந்த ஓரிரு வாரங்களாக நாட்டில் பரவலாக பெய்த மழையும் டெங்கு நோயின் இனவிருத்திக்கு உறுதுணை புரிந்துள்ளது. வீட்டுக் கூரைப் பீலிகளில் நீர்வடியாமல் தங்கியிருத்தல் மற்றும் கவனிப்பாரற்ற நிலை யில் உள்ள குப்பைத் தொட்டிகளில் நீர் தேங்கி நிற்பதும் டெங்கு நோய் நுளம்புகள் இனவிருத்தி செய்யப்படுவதற்கு பிரதான காரண மாகும்.
சுகாதார அமைச்சு டெங்கு நோயாளிகளை குணப்படுத்துவதுடன் எங்கள் கடமை முடிவடைந்துவிட்டது என்ற போக்கில் பொறுப்பற்ற முறை யில் நடந்து கொள்கிறது. சுகாதார அமைச்சு நோயாளிகளை குணப் படுத்துவதில் மாத்திரமின்றி நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கும் மற்ற அமைச்சுகளுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும் பணியையும் மேற்கொள்வது அவசியமாகும்.
அதைவிடுத்து அரசாங்க திணைக்களங்களுக்கிடையில் இது நீங்கள் செய்ய வேண்டிய பொறுப்பு, இந்த விடயத்தில் நாம் தலையிட முடி யாது என்று, பொறுப்பற்ற முறையில் டெங்கு நோய் ஒழிப்பு செயற் பாடுகளை மற்றவர்கள் மீது சுமத்திவிட்டு, தாங்கள் அவற்றில் இரு ந்து விடுபடுவதற்கு எடுக்கும் முயற்சிகளும் இறுதியில் டெங்கு நோய் பெருமளவில் பரவி, இந்நாட்டு மக்களுக்கே பெரும் உபாதைகளை ஏற்படுத்துகிறது.
டெங்கு நோயை தடுக்கும் பொறுப்பு அமைச்சுகளுக்கும் அரசாங்கத் திணை க்களங்களுக்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கும் இருப்பதை நாம் ஏற் றுக் கொள்ளும் அதே வேளையில், பொதுமக்களும் தங்கள் சமூகப் பொறுப்பை உணர்ந்து டெங்கு நோய் கிருமிகளை ஒழிக்கும் பணியை நாளாந்தம் மேற்கொள்வது அவசியமாகும். மற்றவர்களின் வழிநடத்தலின் கீழ் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு பதில், மக்களே விழிப்புணர்வைப் பெற்று, டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகளை எங்கள் நாட்டில் இருந்து முற்றாக ஒழித்துவிட முன்வர வேண்டும்.
இதன் மூலமே இலங்கையில் ஓர் ஆரோக்கியமான சமுதாய அமை ப்பை நாம் உருவாக்க முடியும். டெங்கு நோய் பெரும்பாலும் சிறுவர், சிறுமியரையே தாக்கி, அவர்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்துகின்றது. எனவே, மக்கள் எமது எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வுக்கும் டெங்கு ஒழிப்பு செயற்பாடுகளுக்கும் முன்னுரிமை அளிப்பது அவசி யமாகும்.
»»  (மேலும்)

| |

ஐ.நா.மனித உரிமைகள் பேரவை: இலங்கைக்கு எதிரான பிரேரணை ஈரான், சவ+தி, கட்டார், மலேசியா முஸ்லிம் நாடுகள் இலங்கையை ஆதரிக்க தீர்மானம் அமைச்சர் சமரசிங்கவின் உரையையடுத்து பல நாடுகளின் நிலைப்பாட்டில் மாற்றம்; பாராட்டு

ஐ. நா. மனித உரிமைப் பேரவையின் 19 ஆவது அமர்வின் போது இலங்கைக்கு எதிராகக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள பிரேரணையை தோற்கடிக்க ஈரான், கட்டார், சவூதி அரேபியா, மலேசியா போன்ற முஸ்லிம் நாடுகள் உறுதியளித்துள்ளன.

இலங்கைக்கு ஆதரவு; இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள், மிலோனோ நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்

தாய்லாந்தும் இலங்கைக்கு எதிரான பிரேரணையை தோற்கடிக்கும் வகையில் வாக்களிப்பதாக அறிவித்துள்ளதாக இலங்கைத் தூதுக் குழுவுடன் ஜெனீவா சென்றுள்ள அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் பிரதி அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தெரிவித்தனர். மனித உரிமைப் பேரவையில் இலங்கைத்தூதுக் குழுத் தலைவர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆற்றிய உரையை நாடுகள் பலவும் பாராட்டியுள்ளன.
இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டு வருவது தவறானது எனவும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை செயற்படுத்த அவகாசம் வழங்க வேண்டும் எனவும் நடுநிலையான நாடுகள் பலவும் தெரிவித்ததாக பிரதி அமைச்சர் எம். எல்.ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
ஐ. நா. மனித உரிமைப் பேரவையின் 19 ஆவது அமர்வு நேற்று முன்தினம் ஜெனீவாவில் ஆரம்பமானது. இலங்கை சார்பாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையில் அமைச்சர்களான நிமல் சிரிபால டி சில்வா, ஜீ. எல். பீரிஸ், அநுர பிரியதர்சன யாப்பா, ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் அடங்கலாக 52 பேர் கொண்ட குழு ஜெனீவா சென்றுள்ளது.
அமெரிக்கா உட்பட மேலைத்தேய நாடுகள் இலங்கைக்கு எதிராக பொய்க் குற்றச்சாட்டுகள் அடங்கிய பிரேரணை ஒன்றை கொண்டு வர தயாராகி வருகின்றன. இதற்கு எதிராக நட்பு நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்காக இலங்கைத் தூதுக்குழு பல்வேறு மட்டங்களில் பேச்சு நடத்தி வருகிறது. தனித்தனிக் குழுக்களாகவும் தூதுக் குழுவாகவும் இலங்கைக் குழுவினர் பல்வேறு நாட்டு பிரதி நிதிகளுடன் தொடர்ச்சியாக பேச்சு நடத்தி வருகின் றனர்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், பிரதி அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் அடங்கலான குழுவினர் முஸ்லிம் நாட்டு பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு நடத்தினர்.
கட்டார் வெளிவிவகார அமைச்சர் கலீத் பின் முஹம்மத் அல் - அதீயா, சவூதி அரேபிய அமைச்சர் பந்தர் பின் முஹம்மது அல் அபான், மலேசிய வெளிநாட்டமைச்சர் ஹனிபா அமான், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர் சலாஹி மற்றும் அந்நாட்டு தூதுவர்களுடன் முஸ்லிம் அமைச்சர்கள் குழு பேச்சு நடத்தியதாக பிரதி அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான இலங்கைக்குழு தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர் சுரபெங் டெவிசக்கை சந்தித்த போது இலங்கைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளார். மனித உரிமை பேரவை கூட்டத்தில் அவர் இலங்கைக்கு ஆதரவாக உரையாற்றியதாகவும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஏனைய நாடுகளை கோரியதாகவும் ஹிஸ்புல்லாஹ் கூறினார். நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை செயற்படுத்தத் தேவையான உதவிகளை வழங்கவும் தாய்லாந்து அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
ஐ. நா. வில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆற்றிய உரையை பல நாடுகள் பாராட்டியுள்ள அதேவேளை முன்னைய நிலைப்பாட்டை மாற்றி அவை இலங்கைக்கு சார்பாக செயற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை இலங்கைக்கு எதிராக மேற்கத்திய வல்லரசுகள் சில முன்னெடுக்கும் செயற்பாடுகளை தோல்வியடையச் செய்ய ஈரான் எல்லா சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு உதவுமென ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர் சலாஹி இலங்கை அமைச்சர்கள் குழுவினரிடம் தெரிவித்துள்ளதாக ஜெனீவா சென்றுள்ள இலங்கையின் கைத்தொழில், வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இலங்கை குழுவுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய முன்னேற்றம் பற்றியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண மற்றும் வாழ்வாதார செயற்பாடுகள் உச்ச நிலையில் முன்னெடுக்கப்பட்டுவருவது குறித்து அமைச்சர்கள் மேலும் விளக்கமளித்ததாக அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார். ஈரான் தமது ஆதரவையும், தம்மோடு நெருக்கமாக செயற்படும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அங்கத்துவ நாடுகளிடமும், இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை வலுவிழக்கச் செய்யும் வகையில் செயற்படுவதற்கான தெளிவான விளக்கங்களையும் வழங்குவதாக வெளியுறவு அமைச்சர் சலாஹி பிரதிநிதிகளிடம் உறுதியளித்துள்ளார்.
நேற்றும் இலங்கைக்குழு பல்வேறு நாடுகளுடன் பேச்சு நடத்தியது.
ஐ. நா. மனித உரிமை அமர்வுகள் மார்ச் 23 ஆம் திகதி வரை நடை பெறவுள்ளது.
»»  (மேலும்)

| |

இத்தாலி சொகுசு கப்பலில் தீ: 1050 பயணிகள் சிக்கி தவிப்பு

தி கோஸ்டா அல்லீக்ரா” என்ற இத்தாலி சொகுசு கப்பல் இந்திய பெருங்கடலில் உள்ள மடாகாஸ்கர் என்ற தீவில் இருந்து செசெல்ஸ் தீவுக்கு புறப்பட்டு சென்றது. அதில் 1050 பேர் பயணம் செய்தனர். அவர்களில் 636 பேர் பயணிகள் 413 பேர் கப்பல் ஊழியர்கள்.
செசெல்ஸ் தீவு அருகே சென்ற போது கப்பலில் உள்ள ஜெனரேட்டர் அறையில் திடீரென தீப்பிடித்தது. எனவே கப்பலில் உள்ள மின் விளக்குகள் குZருட்டி அவசர தேவைக்கு பயன்படுத்தப்படும் ஜெனரேட்டர்கள் என அனைத்து சாதனங்களும் செயல் இழந்தன. இதனால் கப்பல் இருளில் மூழ்கியது. தகவல் தொடர்பும் துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து பயணிகளும் ஊழியர்களும் தவிப்புக்குள்ளானார்கள். அதே நேரத்தில் அந்த பகுதியில் சோமாலியா கடற்கொள்ளையர்களின் நடமாட்டமும் உள்ளது. இதுகுறித்து இத்தாலி கடற்பாதுகாப்பு படைக்கு கப்பலின் தலைமை மாலுமி தகவல் கொடுத்தார்.
இதையடுத்து மீன்பிடி படகுகளும், கடற்படை ரோந்து கப்பல்களும் அங்கு விரைந்துள்ளன. இதற்கிடையே கப்பல் ஜெனரேட்டர் அறையில் பிடித்த தீ மேலும் பரவாமல் அணைக்கப்பட்டது. பயணிகளுக்கு தேவையான உணவு பொட்டலங்கள் ஹெலிகொப்டர் மூலம் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது கப்பலில் பயணிகள் பத்திரமாக இருப்பதாகவும் மீட்பு பணிகள் விரைவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் இத்தாலியின் கோஸ்டாகன்கார்டியா என்ற பயணிகள் சொகுசு கப்பல் விபத்துக்குள்ளாகி 32 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

2/28/2012

| |

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அவர்களுக்கு சமாதானம் மற் றும் ஜனநாயகத்திற்கான நோபல் பரிசை வழங்க வேண்டு

இலங்கை உட்பட அரபு உலக நாடுகளுக்கு துரோகம் செய்யும் மேற்கத்திய வல்லரசுகள் எல்லாம் வல்ல
இறைவனால் நிச்சயமாக தண்டிக்கப்படும்

பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ். ஏ.எச்.எம். அஸ்வர் அவர்கள் கடந்த 24ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரை.
மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே, உலகில் எங்கும் நிலைத்திருக்கும் சுதந்திரமான ஜனநாயக நாடுகளை சீர்குலைப்பதில் மேற்குலகம் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டு வருகின்றது என்பது முழு உலகத்திற்குமே நன்கு தெரியும். இந்த மேற்குலகம் உலக நாடுகளின் பொலிஸ்காரன் என்ற இருமாப்புடன் தொடர்ந்தும் நடந்து கொண்டு வருகின்றது.
தங்கள் வசமுள்ள ஆயுத பலமே இதற்கான பிரதான காரணமாகும். இவர்களுக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தவர்கள் யார்? இறைவனா? இல்லை. இந்த அதிகாரத்தை சாத்தானின் அதிகாரம் என்றே நாம் நினைக்க வேண்டி யிருக்கிறது. ஆனால், அவர்கள் ஒரு யதார்த்தத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு நாள் இறைவனின் அதிகாரத்தினால் அழிந்து போவார்கள் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வது நல்லது.
இறைவனின் சக்தியே உலகிலுள்ள மிகப் பெரிய பலம் என்பதை இந்த மேற்குலகம் தங்களுக்கு சாதகமான முறையில் மறந்து செயற்படுகின்றது. இறைவனே இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியவர்.
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஏனைய மேற்குலக நாடுகள் இந்த உண்மையை ஒருநாள் உணர்ந்து கொண்டு, அழிவை எதிர்நோக்குவது நிச்சயம். பிரச்சினைகளை ஏற்ப டுத்துபவர்கள், தில்லுமுள்ளுகள் செய்பவர்கள், மற்றவர்களுக்கு தீங்கிழைப்பவர்கள் ஆகியோர் ஒரு நாள் பூஜ்ஜிய நிலைக்கு தள் ளப்படுவார்கள் என்பதை அல்லா ஹ¥த்தஆலா அல்குர்ஆனில் எடுத் துரைத்துள்ளான். எல்லாம் வல்ல அதிகாரத்தைப் படைத்தவன் அல்லாஹ¥த்தஆலா ஜல்ல ஜலாலுஹ¥ அம்மனவாலுஹ¥, சர்வ வல்லமை பெற்றவன். சர்வ ஆதிக்கமும் கொண்டவன்.
சர்வதேச மற்றும் தேசிய மட் டத்திலான சதிகாரர்களாக உள்ளவர்கள் இஸ்லாமிய உலகை பூஜ்ஜிய நிலைக்கு தள்ள எத்தனிக்கிறார்கள். அவர்கள், டியுனீஸியா, எகிப்து, லிபியா, யெமன், பஹ்ரென் மற்றும் சிரியாவில் ஓரளவு வெற்றியீட்டிய பின்னர், இன்று அமைதியான சமாதானத்தை வென்றெடுத்த இலங்கையை இலக்கு வைத்து செயற்படுகிறார்கள்.
சர்வதேச ஊடகங்கள் இன்று வேண்டுமென்றே இந்நாடுகளுக்கு எதிராக செய்திகளை வெளியிட்டு, அந்நாடுகளை சீர்குலைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. நேட்டோ இராணுவத்தினர் புனித அல்குர்ஆனை எரிக்கும் காட்சியை அவை காண் பித்தன. ஒருவன் எதிரியாக இருந்தாலும் அவனது சடலத்திற்கு மரியாதை செலுத்துவது மனிதப் பண்பாகும். ஆப்கானிஸ்தானில் மரணித்த மாவீரர்களின் சடலங்களின் மீது இந்த நேட்டோ இராணுவத்தினர் சிறுநீர் கழித்த காட்சி வேதனையை அளிப் பதாக அமைந்திருக் கின்றது.
இந்த சர்வதேச சதிகாரர்கள் ஒரு புதிய நாடகத்தை இப்போது தயாரித்து வருகின் றார்கள். அந்த நாடகம் என்ன? கிரிக்கட் விளையாட்டின் போது வர்ணனையாளர்கள் பயன் படுத்தும் சொற்பதத்தை நான் பாவிப்பேனேயானால், உலகத்தில் உள்ள சமாதானத்திற்காக பிரபலம் பெற்ற ஒரு துடுப்பாட்டக் காரரை இந்த மேற்கு நாடுகள் ஆட்டமிழக்கச் செய்வதற்கு சதித்திட்டம் இடுகின்றன என்றுதான் கூற வேண்டும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இரு தடவைகள் ஜனா திபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது தடவை மிக அதிகப் பெரும்பான்மை வாக்குகளுடன் தெரிவானார்.
இவர், மக்களில் இருந்து தோன்றிய மண்ணின் மைந்தனாவார். அரபுநாடுகளில் ஏற்பட்ட அனர்த்தங்களைப் போல் இலங்கையில் சதித்திட்டங்களை மேடையேற்றுவது முற்றாக மாறுபட்ட முயற்சியாகவே அமையும். ஜனாதிபதி அவர்களின் நிறைவேற்று அதிகாரம் இந்நாடெங்கிலும் வடக்கிலும், கிழக்கிலும், மேற்கிலும், தெற்கிலும், மத்திய பிரதேசங்களிலும் வலுப்பெற்று விளங்குகின்றன. இதனை மேற்குலகம் புரிந்து கொள்வது நல்லது.
அரபு நாடுகளைச் சேர்ந்த சிரியா, லிபியா உட்பட மற்றைய நாடுகளின் நகரங்களில் பணத்தை வாரி இறைத்து ஊடகங்களின் ஆதிக்கம், வலுப்பெற்று விளங்கியது. இதன் மூலம் அந் நாடுகளில் அமைதியின்மை, கலவரங்கள் போன்ற வன்முறைகளை அந்நாட்டு அரசாங்கங்களுக்கு எதிராக ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டது.
தவிர்க்க முடியாத காரணங்களினால் எங்கள் நாட்டின் எரிபொரு ட்களின் விலை அதிகரிப்பட் டதை அடுத்து சிலாபத்திலுள்ள கடற்றொழிலாளர்கள் தங்களுக்கு சில அரச சார்பற்ற அமைப் புகளின் ஆதரவை அடுத்து, கிளர்ச்சி செய்வதற்கும் எத்தனித்தனர். ஆயினும், நாடெங்கிலும் உள்ள மீனவ சமூகத்தினர் குறிப்பாக பயங்கரவாதத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட வடக்கு, யாழ்குடா நாட்டிலும் மக்கள் அமைதியாக எரிபொருள் விலை அதிகரிப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
சிலாபம் மற்றும் நீர்கொழும்பை அடுத்துள்ள சகல பிரதேசங்களிலும் அமைதியும், சமாதானமான சூழ்நிலையும் நிலவுகின்றது. இது எவ்விதம் ஏற்பட்டதென்று நீங்கள் சிந்திக்கலாம். உள்ளூரில் உள்ள சதிகார கும்பல்கள் சர்வதேசத்தில் உள்ள தங்கள் சதிகார எஜமானர்களின் தூண்டுதலின் பேரில் ஒரு குறிப்பிட்ட அளவிலான அப்பாவி கடற்றொழி லாளிகளை வன்முறையில் ஈடுபடு வதற்கு தூண்டிவிட்டதே இதற்கான காரணமாகும்.
இம்மாதம் 27ம் தினத்தன்றை நாம் ஜெனீவா நாடகத்தினம் என்று அழைக்கலாம். எங்கள் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் நற்பெயரை பாதுகாப்பதற்காக இந்நாட்டு மக்கள் இலட்சக்கணக்கில் வீதியிறங்கி, ஜனாதிபதியை பாதுகாக்கும் நோக்கத்துடன் சர்வதேச சதிகார வலையமைப்புக்கு எதிராகவும் தங்கள் எதிர்ப்பையும், ஆர்ப்பாட்டத்தையும் மேற்கொள்ளவிருக்கிறார்கள். கிரஹம் கிaன் தனது அக்லி அமெரிக்கன் அதாவது அவலட்சணமான அமெரிக்கன் என்ற புத்தகத்தில் இதைதான் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜெனீவாவில் இந்த மேற்கத்திய நாடுகள் அநாவசியமான பிரேரணையை அங்கீகரித்து, சிரியாவில் ஏற்பட்டதைப் போன்ற ஒரு நிலையை இலங் கையிலும் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். இதன் மூலம் இலங்கையிலும் தங்கள் ஆக்கிரமிப்பை செலுத்துவதற்கு அவர்கள் எத்த னிக்கிறார்கள்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அரசாங்கம் படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. இந்த சந்தர்ப்பத்தில் எங்கள் எதிர்க்கட்சித் தலைவர் அமெரிக்க அரசாங்கத்திற்கும் ஜெனீவாவில் உள்ள ஏனையோருக்கும் இவற்றுக்கான பதிலை அரசாங்கத்திடம் இன்று அறிந்து கொள்ள வேண்டு மென்று அழுத்தங்களை செலுத்தி வருகிறார். இது ஒரு தேசத்துரோக செயலாகும். எமது நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கிய காலகட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இவ்விதம் நடந்து கொள்கிறார். அவர் இன்றைய சூழ்நிலையில் இந்நாட்டு மக்களுடன் இணைந்து செயற்பட வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவரின் கடந்த கால அரசியலை நாம் திரும்பி பார்ப்போமேயானால் அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாட்டுக்கு துரோகம் இழைக்கக்கூடிய வகையில் நடந்து கொண்டிருப்பது தெரியவரும். அவர், சர்வதேச நாணய நிதி நிறுவனத்திற்கு சென்று, இலங்கைக்கு நிதி உதவி வழ ங்க வேண்டாம் என்று கூட துரோகத் தனமான கருத்தை வெளியிட்டிருக்கிறார். சர்வதேச அரசியலிலும் அவர் யகூ திகளுக்கு ஆதரவாக செயற்பட்டி ருக்கிறார். இவ்விதம் தான் அவர் தேசத்திற்கு துரோகம் இழைக்கும் வகையில் நடந்து கொள்கிறார்.
ஐக்கிய நாடுகள் சபையில் இந்த மனிதர் நியாயமற்ற முறையில் ஈராக்கை ஆக்கிரமிப்பு செய்த மேற்குநாடுகளின் செயல் சரியானது என்று வாதாடினார். இவர் செய்யும் ஒவ்வொரு செயலும் தேசத்திற்கு தீங்கிழைக்கும் தேசத்துரோக செயலாக அமைந்துள்ளது.
சபாநாயகர் அவர்களே, எங்கள் நாட்டை இந்த எதிர்க்கட்சித் தலைவர் முஸ்லிம்களை குறிவைத்து கண்டனக் குரல் எழுப்புகிறார். இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தனது சகாவான இம்தியாஸ் பாக்கிர் மார்கார் அவர் களை ராஜபக்ஷ ஹேவலயாகே இம்தியாஸ் பாக்கிர் மார்கார் என்று பெயர்சூட்டி அவமானப்படுத்தினார்.
இது இஸ்லாத்திற்கு செய்த துரோ கமாகும். ஒரு முஸ்லிமின் பெயருடன் இன்னுமொரு மதத்தை தழுவுபவரின் பெயரை இணைத்து கூறுவது தவ றாகும். இதற்கு மறுபக்கமும் இரு க்கிறது. ஒரு தூய்மையான அதி உன்னத சிங்கள பெயரும் இவ்விதம் எதிர்க்கட்சித் தலைவரினால் துஷ் பிரயோகிக்கப்பட்டு சிங்கள சமூ கத்திற்கும் அவமானத்தை ஏற்ப டுத்தியிருக்கிறார்.
எதிர்க்கட்சித் தலைவர் நம்நாட்டு மக்களுக்கு ஒரு தகவலை வெளியிட வேண்டுமானால் சிங்களத்தில் பேசுவார். ஆயினும், மேற்குலகிலுள்ள தனது நண்பர்களுக்கு ஒரு விடயத்தை புரிய வைக்க விரும்பினால் ஆங்கி லத்தில் உரத்த குரலில் தெளிவாக பேசுவார். இவ்விதம் அவர் உள்ளூர் மக்களுக்கு ஒரு கருத்தையும், வெளி உலகில் உள்ளவருக்கு இன்னுமொரு கருத்தையும் தெரிவிக்கும் ஜெய்கல் மற்றும் மிஸ்டர் ஹைட் என்ற இருவேடங்களை அணிந்து இன்று மக்களை ஏமாற்றுகிறார்.
இந்த துரோகிகளின் செயற்பாடுகள் அவர்களுக்கோ, சமூகத்திற்கோ நன்மையை ஏற்படுத்தப் போவதில்லை. இதனால் இவர்கள் நீண்டகாலாம் எதிர்கட்சியிலேயே தேங்கி இருக்க வேண்டியிருக்கும்.
கடந்த காலத்திலும் உள்ளூரிலும், வெளிநாட்டிலும் உள்ள சக்திகள் எங்கள் அன்புக்குரிய ஜனாதிபதி அவர்களுக்கு தீங்கிழைப்பதற்கு எடுத்த முயற்சிகளை பார்த்திருக்கிறோம். என்றாலும் ஜனாதிபதி அவர்கள் தெய்வாதீனமாக அவற்றை தவிர்த்துக் கொண்டிருக்கிறார்.
ஜெனீவாவில் இவ்விதம் நாட்டுக்கு எதிராக துரோ கச் செயலை மேற்கொள் ளும் சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜ பக்ஷவின் தென்னிலங்கையில் உள்ள பச்சை மண்ணில் விலை மதிப்பற்ற மாணிக்கக்கற்கள் கண் டெடுக்கும் அதிர்ஷ்டமும் ஏற் பட்டுள்ளது. ஆகவே, இந்த நாட்டை நான் ஒரு விலை உயர்ந்த ஒரு இரத் தினக்கல்லோடு ஒப்பிட விரும் புகிறேன். எங்கள் நாட்டில் ஜன நாயகம் தழைத்தோங்கிறது என்று கூறுவதில் நான் பெருமைப் படுகிறேன்.
நாம் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்து நிலைத்திருக்கச் செய்து வருகின்றோம். 30 ஆண்டு காலம் நீடித்த பயங்கரவாத யுத்தத்தின் பின் னர் எங்கள் நாடு இன்று பாரிய அபி விருத்தி திட்டங்களை நோக்கி வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறது. இது போன்ற அபிவிருத்தி எங்கள் நாட்டின் வரலாற்றில் இதுவரையில் ஏற்பட்டதே இல்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று உலகத் தலைவர்களில் உன்னத நிலையில் இருக்கும் தேசத் தலைவராகும். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீ மூன் நேரில் சந்தித்த போது இந்த பாராட்டைத் தெரிவித்தார். எங்கள் ஜனாதிபதிக்கு தெற்காசியாவின் தலைமைத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.
இரண்டு தடவைகள் மக்களின் ஆணையை அவர் பெற்றதற்காகவே இப்பதவி கொடுக்கப் பட வேண்டும். மேற்கத்திய வல்லரசுகள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அவர்களுக்கு சமாதானம் மற் றும் ஜனநாயகத்திற்கான நோபல் பரிசை வழங்க வேண்டுமென்று நான் சிபாரிசு செய்கிறேன்.
»»  (மேலும்)

| |

இலட்சக்கணக்கான மக்கள் பேரணி ; எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இலங்கையின் இறைமையில் தலையிட வேண்டாமென நாடெங்கும்

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்பட உள்ள பொய்க் குற்றச்சாட்டுக்களடங்கிய பிரேரணைக்கு எதிராக வடக்கு, கிழக்கு உட்பட நேற்று நாடு முழுவதும் பாரிய கண்டனப் பேரணிகள் நடத்தப்பட்டன. நேற்றுக் காலை முதல் மாலை வரை இடம்பெற்ற இந்தப் பேரணிகளில் இன, மத, அரசியல் பேதமின்றி இலட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
நாடு பூராவும் இடம்பெற்ற இந்தப் பேரணிகளில் சிங்கள, முஸ்லிம், தமிழ், கிறிஸ்தவ, கத்தோலிக்க மதத் தலைவர்கள், பெண்கள், வேடுவர்கள், கலைஞர்கள், அரசாங்க ஊழியர்கள், அரசியல்வாதிகள், பல்வேறு அமைப்புகள் உட்பட பெருந்திரளான வர்கள் கலந்துகொண்டனர். இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டதோடு அன்றாட நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்தன.
தேசிய கொடியையும் ஜனாதிபதியின் உருவப்படத்தையும் தாங்கியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டங்களின்போது அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஆகியோரின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன. சில பிரதேசங்களில் கறுப்புக் கொடிகள் ஏற்றப்பட்டிருந்த தோடு கடைகளும் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
150 ற்கும் அதிகமான நகரங்களில் மிகப் பிரமாண்டமான முறையில் ஆர்ப்பாட்ட பேரணிகள் நடைபெற்ற தோடு பிரதான ஆர்ப்பாட்டப் பேரணி புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது. நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் ஊர்வலமாக வந்த மக்கள் இந்த பேரணியில் கலந்துகொண்டனர்.
பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமான கண்டனப் பேரணியில் கொட்டும் மழைக்கு மத்தியில் மக்கள் பங்கேற்றனர். கண்டனப் பேரணி 2 மணி நேரம் வரை நீடித்தது. லேக்ஹவுஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பெருந்திரளான ஊழியர்களும் இதில் பங்கேற்றதோடு நிறுவன தலைவர் உட்பட பணிப்பாளர்களும் கலந்துகொண்டனர்.
பிரதேச மட்டத்தில் நடைபெற்ற எதிர்ப்புப் பேரணிகளில் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், எம். பிக்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர். இதேவேளை ஆர்ப்பாட்டப் பேரணிகளின்போது ஐ.நா. அலுவலகங்கள், அமெரிக்க தூதரகம் என்பவற்றிற்கு மகஜர்களும் கையளிக்கப்பட்டன.
கம்பளை
பிரதமர் டி. எம். ஜயரட்னவின் தலைமையில் கம்பளை நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் பெருமளவு மக்கள் கலந்துகொண்டனர். இதில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மதத் தலைவர்கள், பிரதி அமைச்சர் ஏ. ஆர். எம். ஏ. காதர் உட்பட பலரும் பங்குபற்றினர். இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர் டி. எம். ஜெயரத்ன,
நாட்டின் இறைமைக்கும் தேசிய சுதந்திரத்திற்கும் உயிர் தியாகம் செய்யவும் இலங்கை மக்கள் தயாராக உள்ளனர். நாட்டின் சுதந்திரத்திற்காக இன, மத கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றுபட்டுள்ளனர்.
சுதந்திர தேசமான இலங்கை மீது கைவைக்க அதிகார சக்திகள் முயற்சி செய்கின்றன. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக ஏதும் தீர்மானமொன்றை நிறைவேற்றுவதனால் அது இலங்கை மக்களின் பிணங்களுக்கு மேலே நடக்க வேண்டும்.
ஒற்றுமையாக வாழும் மக்களிடையே பிளவை ஏற்படுத்தி பெற்ற வெற்றிகளை குழப்ப சதி நடைபெறுகிறது. இதற்கு எதிராக இன்று ஆரம்பிக்கப்படும் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றார். மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமெரிக்காவின் யோசனைக்கு எதிரான பேரணிகள் நடைபெற்றன.
வடக்கு, கிழக்கில் நடைபெற்ற பேரணிகளில் பெருமளவு தமிழ் மக்கள் கலந்துகொண்டனர். யாழ், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் பல்வேறு நகரங்களிலும் பேரணிகள் நடத்தப்பட்டன. ஏறாவூரில் நடைபெற்ற பேரணியில் சர்வதேசத் தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இங்குள்ள கடைகளும் மூடப்பட்டிருந்தன. மட்டக்களப்பு நகரில் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் தலைமையில் நடைபெற்ற பேரணியில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்பாலானவர்கள் கலந்துகொண்டனர். மட்டக்களப்பு இந்து கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமான பேரணி மட்டக்களப்பு கச்சேரி முன்பாக நிறைவடைந்தது. இதன்போது ஐ.நா. சபைக்கு கையளிப்பதற்காக மாவட்ட செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
காத்தான்குடியிலும் கடைகள் அடைக்கப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பென் கீ மூனின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
திருகோணமலை மணிக்கூண்டுக்குக் கோபுரத்திற்கு முன்பாக கிழக்கு ஆளுநர் மொஹான் விஜேவிக்ரமவின் தலைமையில் நடந்த பேரணியில், பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
ஆதிவாசிகள்
தம்பானை பகுதியில் நடைபெற்ற பேரணியில் ஆதிவாசிகள் பலரும் கலந்துகொண்டனர்.
ஹொரவப்பொத்தானை
ஹொரவப்பொத்தானை நகரில் நடந்த பேரணியில் சிங்கள, முஸ்லிம் மதத்தலைவர்கள் உட்பட அநேகர் கலந்துகொண்டனர். அமைச்சர் எஸ். எம். சந்ரசேனவின் தலைமையில் பேரணி நடைபெற்றது.
புத்தளம்
புத்தளம் நகர சபை மேயரின் தலைமையில் புத்தளம் நகரில் நடைபெற்றது. சிலாபம் நகரில் நடைபெற்ற பேரணிக்கு பிரதி அமைச்சர் நியூமால் பெரேரா தலைமை வகித்தார்.
கம்பஹா மாவட்டம்
ஜா- எல நகரில் அமைச்சர் பிலிக்ஸ் பெரேராவின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இலங்கைக்கு எதிராக எத்தகைய சதி முன்னெடுக்கப்பட்டாலும் மக்கள் ஒன்றுபட்டால் எதுவும் செய்ய முடியாது என அமைச்சர் இங்கு தெரிவித்தார்.
கந்தானை பகுதியில் டாக்டர் சுதர்சினி ஜெராஜ் பெர்ணாந்து புள்ளேயின் தலைமையில் நடைபெற்றது. பிரதி அமைச்சர் சரத் குணரத்னவின் தலைமையில் நீர்கொழும்பில் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கொழும்பு
கொழும்பில் பல்வேறு பிரதேசங்களிலும் பாரிய எதிர்ப்புப் பேரணிகள் நடைபெற்றன.
பம்பலப்பிட்டியில் இருந்து ஆரம்பமான பேரணியில் மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலான உட்பட பெருந்திரளான மக்கள், மதத் தலைவர்கள் கலைஞர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்துகொண்டனர்.
ஊர்வலமாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க தூதரகத்திற்கு செல்ல முற்பட்டபோதும் பொலிஸார் வீதித் தடைகளை இட்டு அதனை தடுத்தனர். இதனையடுத்து ஒரு குழுவினருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டதோடு அவர்கள் அமெரிக்க தூதரகத்தில் மகஜரொன்றை கையளித்தனர்.
வெலிகம
வெலிகம நகரில் நடைபெற்ற பேரணியில் சிங்கள, முஸ்லிம் மதத்தலைவர்கள், அமைச்சர் மஹிந்த யாப்பா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இலங்கைக்கு எதிரான சதியை முறியடிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என அவர் கோரினார். இந்த பேரணியின்போது அமெரிக்க ஜனாதிபதியின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. முலடியனவில் பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பாவின் தலைமையில் பேரணி நடந்தது.
காலி
காலி பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக நடைபெற்ற பாரிய பேரணியினால் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது. காலி மாவட்ட எம்.பி.கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
ஹம்பாந்தோட்டை
பெலியத்தை பகுதியில் ஓழுங்கு செய்யப்பட்ட எதிர்ப்பு ஊர்வலத்தில் பிரதி அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ எம்.பி. உட்பட மதத் தலைவர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
கண்டி
தலதா மாளிகைக்கருகில் நடைபெற்ற மத அனுஷ்டானங்களின் பின்னர் கண்டி நகரில் எதிர்ப்புப் பேரணி நடைபெற்றது. பிக்குமார் உட்பட பெருமளவு மக்கள் இதில் பங்கேற்றனர்.
வடக்கு
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பேரணியில் வட மாகாண ஆளுநர் ஜி. எ. சந்ரசிரி, யாழ். சு.கா. அமைப்பாளர் அங்கஜன் உட்பட பெருமளவு தமிழ் மக்கள் கலந்துரையாடினர். பேரணி முடிவில் யு. என். டி. பி. அலுவலகத்தில் மகஜர் கையளிக்கப்பட்டது. மன்னாரில் நடந்த பேரணியில் மீனவர்கள் உட்பட பலர் பங்குபற்றியது குறிப்பிடத்தக்கது.
ஹுனைஸ் பாரூக் தலைமையில் பேரணி நடைபெற்றது. கிளிநொச்சி, முல்லைத்தீவு நகரங்களில் நடந்த பேரணிகளிலும் அதிகமான தமிழ் மக்கள் பங்குபற்றினர். இலங்கை மீதான வெளிநாட்டுத் தலையீட்டைக் கண்டித்து அவர்கள், பெற்ற சுதந்திரத்தை மீளப்பெற இடமளிக்க முடியாது என்று கோஷமிட்டனர்.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சட்டத்தரணிகள் சங்கம் ஐ.நா. அலுவலகத்தில் மகஜரொன்றை கையளித்தனர்.
நேற்று முன்தினமும் நாட்டின் சில பகுதிகளில் பேரணிகள் நடத்தப்பட்டதோடு இன்றும் பேரணிகள் தொடர்ந்து இடம்பெறும் என அறிவிக்கப்படுகிறது.
»»  (மேலும்)

2/27/2012

| |

கிராமப்புறப் பாடசாலைகளும் வலுவடைய வேண்டும் கி.மா.ச.உ.பூ.பிரசாந்தன்

தனிமனித ஆளுமை வளர்ச்சியடைய கல்வி என்பது மிக முக்கியமாக உள்ளது. கிழக்கு
மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் தூரநோக்கிய சிந்தனையில்
கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கிழக்கு மாகாண சபை
செயற்பட்டு வருகின்றது.
பாடசாலைகளுக்கான பௌதீக வளங்கள், ஆசிரிய, ஆளணி
வளங்கள் கொடுக்கப்பட்டு பூரணத்துவப்படுத்தப்பட்டு வருகின்றது. 2012ம்
வருட இறுதிக்குள் தட்டுப்பாடாக உள்ள பாட ரீதியான ஆசிரியர்களுக்கான
நியமனங்கள் வழங்கப்பட்டு ஆசிரிய ஆளணி தேவை முற்றாக
சீர்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆனால்
இன்றும் எமது கிராமப்புறத்திலுள்ள பலர் நகர்ப்புற பாடசாலைகளில்
பிள்ளைகளைச் சேர்ப்பதற்கு முண்டியடித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந் நிலை
தூரநோக்கிய பயணத்திற்கு பொருத்தமானதாக காணப்பட மாட்டாது.
ஆசிரிய நிமனங்களின் போதும், நேர்முகத் தேர்வுகளின் போதும் நகர்ப்புற
பாடசாலைகளுக்கு வேறாகவும், கிராமப்புற பாடசாலைகளுக்கு வேறாகவும்
ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு பாட ரீதியாகவும் ஆசிரியர்கள்
நியமிக்கப்படுகின்ற போது ஒவ்வொரு துறைக்கும் தகுதியான ஆசிரியர்களே
நியமிக்கப்படுகின்றார்கள். அதே போன்று நகர்ப்புற பாடசாலைகளுக்கு வேறு
பாடத்திட்டம், கிராமப்புற பாடசாலைகளுக்கு வேறு பாடத்திட்டம் என
பாடத்திட்டங்கள் வகைப்படுத்தப்படவில்லை.
ஆனால் கிராமப்புறங்களில்
இருக்கின்றவர்கள் நகர்புறப் பாடசாலைகளில் தங்களது பிள்ளைகளைச்
சேர்ப்பதற்கு முண்டியடிப்பதை எம்மால் காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக
அரச உயர் பதவி வகிக்கும் அதிகாரிகளின் பிள்ளைகளும் கிராமப்புறப்
பாடசாலைகளில் கல்வி கற்பதன் மூலம் கிராமப்புறப் பாடசாலைகளின்
அபிவிருத்தியில் அதிகாரிகள் கண்ணும் கருத்துடனும் செயற்படக்கூடிய நிலை
தோற்றுவிக்கப்படும்.
கிராமப்புறப் பாடசாலைகளுக்குத் தேவையான ஆளணிகளும், பௌதீக வளங்களும்
வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் பாடசாலையின் கல்வி, இன்னோரன்ன
செயற்பாடுகளிலும் நாம் விழிப்புடன் செயற்பட்டு வருகின்றோம். மாணவர்களின்
கல்வியில் அதிக அக்கறையுடன் செயற்படுகின்ற அதிபர்கள், ஆசிரியர்களைப்
பாராட்டுவதோடு, கல்வி கற்பிக்காது தமக்கு வழங்கப்பட்டுள்ள பதவிகளை
துஷ்பிரயோகம் செய்கின்ற அதிகாரிகளுக்கு எதிராக நிருவாக ரீதியான நடவடிக்கை
எடுப்பதற்கும் தயங்கப் போவதில்லை. கல்வி என்பதே எமது தமிழ் சமூகத்தின்
முதகெலும்பாக உள்ளது. இதனை யாரும் தனிப்பட்ட சுயநலங்களுக்காக
கையாள்வதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை.
இன்று கிழக்கு மாகாணத்தின்
கிராமப்புறப் பாடசாலைகளின் பெறுபேறுகள் ஓரளவு அதிகரித்துள்ள போதும் மிக
விரைவில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பி;கை எமக்கு
உண்டு. இதற்கு பிள்ளைகளின் பெற்றோரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
அண்மையில் மட்ஃஆரையம்பதி சிவா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு
நிகழ்வுக்கு பிரதம அதீதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
»»  (மேலும்)

| |

மட்டு மறை மாவட்ட ஆயருக்கும் முதலமைச்சருக்குமிடையில் முக்கிய சந்திப்பு

அண்மையில் மட்டக்களப்பில் வெகுவாகப் பேசப்படுகின்ற மட்/ வின்சன்ட் மகளிர் உயதரப் பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட சரஸ்வதி சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் தோன்றி உள்ளன. அதாவது குறித்த பாடசாலையானது 192 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாடசாலையாகும். இப் பாடசாலையானது மெதடிஸ்த்த  திருச்சபையினால் ஆரம்பிக்கப்ட்டு பின்னர் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு பாடசாலையாகும். இதற்கென்று பல பாரம்பரியங்களும் அமையப் பெற்றிருக்கின்றன.அந்த வகையில் தற்போது புதிதாக ஒரு சரஸ்வதி சிலை அமைக்கப்பட்டு அதனை அகற்றுமாறு கத்தோலிக்க சமூகத்தினர் அகற்றக்கோரி அதன் பின்னர் பாடசாலை அதிபரினால் அது அகற்றப்பட்டுவிட்ட நிலையில் தற்போது பாடசாலையின் இயல்பு நிலை பாதிக்கும் வகையில் பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் இருக்கின்றன.
அதன் பிரகாரம் குறித்த பிரச்சினையானது ஒரு மதப் பிரச்சினையாக உருவெடுக்காது அது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் தாக்கத்தை ஏறபடுத்துவதற்கு அப்பால் மாகாணம் மாத்திரமன்றி நாட்டிலும் இது ஓர் பாரிய தாக்கத்தை ஏறபடுத்துகின்ற நிலையினை தோற்றுவித்திருக்கின்றன. அந்த வகையிலே கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று(25.02.2012) மட்டு மறை மாவட்ட ஆயர் அவர்களை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
உண்மையில் சரஸ்பதி சிலை கல்விக் கூடங்களில் வைப்பது என்பது ஓர் சாதாரண விடயம் அதே வேளை இவ்வாறாக கத்தோலிக்க பாரம்பரியத்தைக் கொண்ட ஓர் பாடசாலையில் திடீரென அதாவது அது சார்ந்த மாணவர்கள் ,ஆசிரியர்களுக்கு தெரியாமல் வைத்ததென்பது தங்களுக்கு மனவேதனையளிப்பதாகவும். அதே வேளை இதனை சரியான முறையில் பாடசாலை நிருவாகம் அணுகியிருந்தால் இவ்வாறானதொரு பாராதுரமான பிரச்சினை தோன்றியிருக்காது எனவும் ஆயர்தரப்பில் கருத்து தெரிவிக்கப்படுகின்றது.
உண்மையில் பாடசாலையின் இயல்பு நிலை பாதிக்கபபடுவதென்பது ஏற்றுக்காள்ளமுடியாத ஒன்றாகும். இந்த சிலைவிவகாரத்தினால் பாடசாலை நிருவாகம் குழம்பி இருக்கிறது என்பது உண்மையில் வேதனையளிக்கிறது. இருந்தும் இதனைச் சிலர் அரசிலாக்கியது அதனை விட வேதனையளிக்கிறது. உண்மையில் சரஸ்பதி சிலை அமையப்பெறுவதற்காகன சாத்தியப்பாடுகள் 80 வீதம் இருக்கிறது. அதனை சரியான முறையிலே அணுகாமல் தாபித்தது என்பது கிறஸ்த்தவ மக்களிடையே ஓர் சந்தேகத்தை ஏறபடுத்தியதுடன் ஓர் பதற்ற நிலையினையும் தோற்றுவித்திருக்கிறது.ஆனால் எது எவ்வாறிருப்பினும் சரஸ்பதி சிலை நிறுவுவதில் எந்த பிரச்சினையும் இருக்கப்போவதில்லை. ஆனால் அதனை சரியான முறையில் அமைப்தற்கான வழிகள் இருக்கின்றன அதன்படி செயற்பட்டு அதனை நிறுவ முடியும். மாறாக ஆர்ப்பாட்டம,; பணி பகிஸ்கரிப்பு, வெளிநடப்பு செய்தல் என்பவற்றின் மூலம் மாவர்களினது கல்வியே பாதிக்படும். எனவே இறல்பு நிலைக்கு பாடசலை நிருவாகம் திரும்பி சீராக இயங்க வேண்டும்.
ஆயர்தரப்பினர்களோடு இது தொடர்பில் பேசிய போது அவர்கள் குறுகிய ஓர் காலக்கெடு கேட்டிருக்கின்றார்கள் அதன்படி இரு சமூகத்தினரின் விருப்போடு சிலை நிறுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகம் இரு;பதாகவும் முதலைமைச்சர் சி.சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
உண்மையில் இனநல்லுறவுடன் கூடிய ஓர் சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டிய பாரிய பொறுப்பில் பாடசாலைகளின் பங்கு அளப்பரியது. அவ்வாறு இருந்தும் மதம் சார்ந்த பிரச்சினைகள் மாணவர்கள் மத்தியிலே உருவாக்கப்படுதற்கான சூழலை இச் சம்பவம் ஏற்படுத்தி இருப்பது உண்மையில் வேதனையளிக்கின்றது. இந்துவாக இருந்தாலும் சரி கிறிஸ்த்வராக இருந்தாலும் சரி பிறரது மனம் வேதனைப்படாதவண்ணம் நடந்தால் எந்தப் பிரச்சினையும் தோன்றாது எனவும் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.
»»  (மேலும்)

| |

மட்டு மாநகர பிரதி மேயரை அறைக்குள் வைத்து பூட்டிய உறுப்பினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!- சிவகீதா பிரபாகரன்

மட்டக்களப்பு மாநகர பிரதி மேயர் ஜோர்பிள்ளையை அவரது அலுவலக அறையினுள் மாநகரசபை உறுப்பினர் ஒருவரால் வைத்து பூட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடி நடவடிக்கையெடுக்கப்படும் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாநகரசபையில் உள்ள பிரதி மேயரின் அலுவலக அறையினுல் வைத்து மாநகரசபை உறுப்பினர் ஒருவரால் பூட்டப்பட்டதாக வெளியான செய்தி தொடர்பில் கேட்டபோதே அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டு அகற்றப்பட்ட சரஸ்வதி சிலை தொடர்பான முரண்பாடு காரணமாகவே இந்த குழப்பநிலையேற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாநகர பிரதி மேயர் ஜோர்பிள்ளை தெரிவித்தார்.
இது ஒரு அடாவடித்தனமான செயல் என கண்டித்துள்ள அவர், இது தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்படவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் கேட்டபோது,
இது மாநகரசபையினுள் நடந்த சம்பவம் என்றபடியால் இது தொடர்பில் முழுமையான நடவடிக்கையினை மாநகர முதல்வர் எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.
இதுதொடர்பில் தாங்கள் முழுமையான அவதானிப்பில் இருப்பதாகவும் இதற்கு பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன்,
மாநகர பிரதி மேயர் ஜோர்பிள்ளையை அவரது அலுவலக அறையினை மாநகரசபை உறுப்பினர் தவராசா பூட்டியதானது பிழையான விடயம். இது தொடர்பில் பிரதி முதல்வர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் குறித்த உறுப்பினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையெடுப்பது தொடர்பில் பரிசீலனை செய்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
»»  (மேலும்)

2/26/2012

| |

படகுச் சேவையுடன் கூடிய சிறுவர் பூங்கா அங்குரார்ப்பணம்.

மட்டக்களப்பு முகத்தவாரம் களப்பை அண்டிய பகுதியில் சிறுவர்களுக்கான பூங்கா மரயன் நிறுவனத்தினால் அமைக்கபட்டு அங்குரார்ப்பணம் இன்று(25.02.2012) கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் அவர்களினால் செய்து வைக்கப்பட்டது. அதிலே சிறுவர்களுக்காக விசேடமாக வடிவமைக்கபட்ட படகுச் சேகைள் மற்றும் வெளிநாட்டவர்களையும் கவரக் கூடியவகையில் தோணி மற்றும் படகுச் சேவைகளும் ஆரம்பிக்கட்டுள்ளன.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், மாநகர மேயர் திருமதி சிவகீத்தா பிரபாகரன், பிரதி மேயர் ஜோர்ச் பிள்ளை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் நெடுஞ்செழியன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா மற்றும் பலரும் கலந்து கொண்டார்கள்.
»»  (மேலும்)

| |

வாலை சுருட்டி கொண்ட கூட்டமைப்பு

ஐநாவின் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தொடர் அமர்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கலந்துகொள்ளமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்தக் கூட்டத்தொடரில் நடைபெறும் விடயங்கள் குறித்தும் சர்வதேச சமூகம் எடுக்கின்ற நடவடிக்கைகள் குறித்தும் தமது கட்சி உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தமிழோசையிடம் கூறினார்.

போர்க்காலச் சம்பவங்களுக்குப் பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பான விடயங்கள் மற்றும் மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட விடயங்கள் உள்ளிட்ட பல விவகாரங்கள் இந்த மாநாட்டில் ஆராயப்படும் என்றும் அவர் கூறினார்.
இலங்கைப் போர்க்காலச் சம்பவங்கள் தொடர்பில் ஐநா தலைமைச் செயலர் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களும் இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களும் ஜெனீவா கூட்டத்தில் ஆராயப்படும் என்று எதிர்ப்பார்ப்பதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.
இந்த விடயங்கள் குறித்து சர்வதேச ரீதியாக தமது கட்சி விளக்கமளித்துள்ளதாகவும் அவை குறித்து சர்வதேச சமூகம் எடுக்கின்ற முயற்சிகளுக்கு அரசாங்கம் பொறுப்புடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோருவதாகவும் சம்பந்தன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
மக்களை தூண்டிவிடும் செயற்பாடுகளை தவிர்க்கவும், மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயங்கள் எழாமல் இருப்பதற்காகவும் தமது கட்சி ஜெனீவா மாநாட்டில் பிரசன்னமாகாதிருக்க தீர்மானித்ததாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மேலும் கூறினார்.
»»  (மேலும்)

2/25/2012

| |

கூட்டமைப்பினர் ஜெனீவா சென்றால் புலிகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து பதிலளிக்க வேண்டியிருக்கும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜெனீவா மனித உரிமை கவுன்ஸில் மாநாட்டில் பங்குபற்றுவார்களாயின், புலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களுக்கு அவர்கள் பதிலளிக்க வேண்டி வரும் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று முன்தினம் தெரிவித்தார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் இது தொடர்பாக மேலும் கூறுகையில் :
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் 2001 ஆம் மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் தாம் வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனங்களில் புலிகளின் ஏகபிரதிநிதிகளாகவே தாம் பாராளுமன்றம் செல்வதாகக் குறிப்பிட்டிருந்தனர். அதனால் இந்நாட்டில் புலிகள் ஆயிரக் கணக்கான அப்பாவி மக்களையும், அரசியல் தலைவர்களையும் படுகொலை செய்தும், ஊனங்களுக்கு உட்படுத்தியும், சொத்துக்களை அழித்தும் இருக்கின்றார்கள். இவர்களில் தமிழ் மக்கள் மாத்திரமல்லாமல் தமிழ் சமூக, அரசியல் தலைவர்களும் இடம் பெற்றுள்ளனர். ஆகவே இவற்றுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பதிலளிக்க வேண்டி வரும்.
புலிகளால் படுகொலை செய் யப்பட்ட தமிழ் மக்களினதும், அரசியல் தலைவர்களினதும் உறவினர்கள் ஜெனீவா சென்றி ருப்பதாக அரசாங்கத்திற்குத் தகவல்கள் கிடைத்திருக்கி ன்றன. இவர்களுக்குத் தமிழ் கூட்டமைப்பினர் பதிலளிக்க வேண்டி வரும். அரசாங்கம் மனிதாபிமான நடவடிக்கையை முன்னெடுத்த போது மனித உரிமை விவகாரத்தில் விசேட கவனம் எடுத்தது. இனங்களுக்கிடையே ஐக்கியத்தையும், புரிந்துணர்வையும் கட்டியெழுப்புவதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி இருக்கின்றது. இதனை உலகமே அறியும்.
புலிகள் மேற்கொண்ட பயங்கரவாத செயற்பாடுகளால் ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.
உடல் ஊனங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள்.
இப்பாதிப்புகளுக்கு வடக்கு, கிழக்கு மக்கள் மாத்திரமல்லாமல் தென் பகுதி மக்களும் முகம் கொடுத்துள்ளார்கள்.
இலங்கை மத்திய வங்கி, மத்திய பஸ் தரிப்பு நிலையம், காத்தான்குடி பள்ளிவாசல், தெஹிவளை ரயில் நிலையம், அநுராதபுரம் மகாபோதி விஹாரை போன்ற மக்கள் கூடுகின்ற பல முக்கிய இடங்களில் புலிகள் தங்கள் பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொண்டனர். இதனால் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்தனர். இதனை யாவரும் அறிவர்.
இவ்வாறு மனங்களைக் காயப்படுத்தும் குரூர செயல்களை புலிகள் நிறையவே மேற்கொண்டுள்ளனர். அவற்றையெல்லாம் மறந்து அமைதியாகவும் ஒன்றுமையாகவும் சமாதானமாகவும் வாழ்வதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பயங்கரவாதம் காரணமாக மூன்று தசாப்தங்களாக அழிக்கப்பட்ட பிரதேசங்களை துரிதமாகக் கட்டியெழுப்புவதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. அப்பிரதேசங்களில் இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அங்கு பாரிய அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இதனை யாவருமே அறிவர் என்றார்.
»»  (மேலும்)