1/29/2012

முதலமைச்சர் வேட்பாளர் யார்? UPFA சார்பில் டக்ளஸ் உறுதி: TNA சார்பில் மாவை, சுரேஸ், மனோ?

பேச்சுவார்த்தையில் வ/கி இணைப்பில் தீவிரம்: தேர்தலை தனித்து நடத்த தொடர் கோரிக்கை

வடமாகாண சபை தேர்தல் நடந்தால் முதலமைச்சர் வேட்பாளர் யார்?
UPFA சார்பில் டக்ளஸ் உறுதி: TNA சார்பில் மாவை, சுரேஸ், மனோ?

எதிர்க்கட்சியையாவது இழந்துவிடக் கூடாது என்பதால் புதிய முகங்களை புறக்கணிக்க TNA முடிவு!
அரசாங்கம் வட மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட கட்சி யின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் விருப்பம் தெரிவித்துள் ளதுடன் தம்மைத்தான் நிறுத்த வேண்டும் எனவும் போர்க்கொடி தூக்கி யுள்ளனர். இதற்காக பலர் தமது பாராளு மன்றப் பதவியைத் துறக்கவும் தயாரெனத் தெரிவித்துள்ளனர்.
இதனால் கட்சியின் தலைமைக்குப் பெரும் நெருக்கடி நிலை எழுந்துள்ளது. வட மாகாண சபைத் தேர்தலை அரசு நடத்தாமல் விட்டாலே இப்போதைக்கு நல்லது என எண்ணு மளவிற்கு தலைமை தள்ளப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மக்கள் ஐக்கிய முன்னணியின் சார்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முதலமைச்சர் வேட்பாளராக நிற்பதாக தெரிவிக்கப்படுகின்றமையால் அரசியலில் புதிய முகங்களை நிறுத்தி எதிர்க்கட்சியாக வரும் நிலையையும் இழந்துவிடக் கூடாது என்பதில் தமிழ்க் கூட்டமைப்பின் தலைமை கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை அத்தகையதொரு நிலை வரும் பட்சத்தில் மாவை சேனாதிராஜாவை அல்லது சுரேஷ் பிரேமச்சந்திரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவது குறித்தும் கட்சியின் தலைமை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கட்சிக்குள் இணக்கப்பாடு காணப்படா விட்டால் மனோ கணேசனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதே பொருத்தமானது எனக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரால் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திவரும் பேச்சுவார்த்தைகளில் காணி, பொலிஸ் அதிகாரக் கோரிக்கை போன்றே வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை கூட்டமைப்பினரால் வலுவாக முன்வைக்கப்பட்டுள்ளமை அனைவருக்கும் தெரிந்த விடயம்.
ஆனால் அதே தமிழ்க் கூட்டமைப்பு வட மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மூலமாக காரசாரமான அறிக்கைகளை விட்டு வருவது வேடிக்கையாக உள்ளது. மனோ கணேசன் இதனைத் தெரிந்துதான் செய்கிறாரா அல்லது அவரது நோக்கம் தேர்தலை நடத்தக் கோரி கூட்டமைப்பு போட்டியிடாவிட்டால் தனக்கு அச்சந்தர்ப்பம் கிடைக்கும் என்பது அவரது உள் நோக்கமாக எனவும் சந்தேகம் எழும் பியுள்ளது.

0 commentaires :

Post a Comment