மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழுதடைந்துள்ள பஸ் வண்டிகளை திருத்தம் செய்து தரும்படியும் சாலை நிர்வாகத்தை சீர் செய்து தரும்படியும் சாலை நிர்வாக முகாமையாளரை இடம்மாற்றம் செய்து தரும்படியும் இரண்டு மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊழியர்களுக்கான சம்பளப்பணத்தை வழங்குவதற்க்கான நடவடிக்கைகளை மேற்க்கொள்ளமாறும் தெரிவித்து இவ் பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதனால் வாகரை,வாழைச்சேனை, மட்டக்களப்பிற்க்கான போக்குவரத்து சேவையில் பாதிப்புக்கள் ஏற்பட்டன.
மறு அறிவித்தல் வரும் வரையில் இப்போராட்டம் தொடருமென்றும் அதுவரையில் தங்களது பஸ் சேவை இடம்பெறமாட்டாது என்றும் ஆர்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
0 commentaires :
Post a Comment