கிழக்கு மாகாணத்தின் பட்டிப் பொங்கல் விழா இன்று(16.01.2012) வெகு விமர்சையாக மட்டக்களப்பு மாவட்டத்pன் அதிகளவான கால்நடைகளைக் கொண்டமைந்த குடும்பி மலை மற்றும் மியான்கல் ஆகிய இடங்களில் கொண்டாடப்பட்டது.
கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் து.நவரெட்ணராஜா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாககலந்து கொண்டு படடிப் பொங்கல் விழாவினைச் சிறப்பித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கால்நடை அமைப்புக்கள் இவ் விழாவில் கலந்து கொண்டு தங்களது கால் நடைகளுக்கு பொங்கல் பொங்கி மகிழ்ந்ததோடு அவற்றிற்கு நன்றியையும் செலுத்தினார்கள்.
தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி பூஜைகள் இடம்பெற்று கால்நடைகளுக்கு நன்றி செலுத்துகின்ற இப் பட்டிப் பொங்கல் விழாவானது முதன் முறையாக ஒரு காட்டுப் பிரதேசத்தில் இடம்பெற்றது இதுவே முதற் தடைவ என்பது குறிப்பிடத்தக்கது.
இப் பொங்கல் விழாவில் கலந்து பொண்ட கால்நடை அமைப்புக்களுக்கு சிற்நத பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. சிறந்த பட்டிப் பொங்கலுக்கான பரிசு தும்பங்கேணி கால்நடை வளர்ப்போர் சங்கத்திற்கு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கோறளைப்பற்று தெற்கு-கிரான் பிரதேச செயலாளர் தவராஜா,மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வைத்தியர்கள், விவசாய அமைச்சின் அதிகாரிகள், கால் நடை விவசாய அமைப்புக்கள் மற்றும் பண்ணiயாளர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
0 commentaires :
Post a Comment