1/12/2012

நிகரகூவா ஜனாதிபதியாக டானியல் ஓட்டேகா மூன்றாவது முறையாகவும் தேர்வு

நிகரகூவா நாட்டின் ஜனாதிபதியாக டேனியல் ஓர்டிகா மூன்றாம் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மத்திய அமெரிக்க நாடான நிகரகூவா நாட்டின் ஜனாதிபதி தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6 ம் திகதி நடந்தது. தற்போது ஜனாதிபதியாக சான்டினிஸ்டா தேசிய விடுதலை முன்னணி கட்சியைச் சேர்ந்த (எப்.எஸ்.என்.எல்) டானியல் ஓட்டேகா மூன்றாம் முறையாக போட்டியிட்டார். நேற்று முன்தினம் வாக்குகள் எண்ணப்பட்டன.
இதில் எப்.எஸ்.என்.எல். கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான டானியல் ஓட்டேகா 60 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தொடர்ந்து மூன்றாவது முறையாக இவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 90 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் இவரது தலைமையிலான கூட்டணி கட்சிகள் 62 இடங்களில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து ஜனாதிபதியாக டானியல் ஓட்டேகா அடுத்த ஐந்தாண்டுகள் வரை (2016) பதவி வகிப்பார்.

0 commentaires :

Post a Comment