1/07/2012

முஸ்லிம்களை அரவணைத்துச் செல்லக் கோரும் புத்திஜீவிகள்

நிர்மலா ராஜசிங்கம்
இலங்கையில் தமிழர் தலைமைகளும் தமிழ் சிவில் சமூகமும், முஸ்லிம்களை ஒன்றிணைத்துச் செல்லவேண்டும் என்றும், வடக்கே யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு வந்து தங்கள் வாழ்வைத் தொடங்க உதவ வேண்டும் என்றும் சுமார் 70 புத்திஜீவிகள் கையொப்பமிட்டு கோரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பும் அரசும் அரசியல் தீர்வு குறித்த பேச்சு வார்த்தைகளை நடத்திவரும் பின்னணியில் இந்த அறிக்கை வந்திருக்கிறது.

இந்த அறிக்கையின் காலப்பின்னணி குறித்து அதில் கையொப்பமிட்டவர்களில் ஒருவரான, நிர்மலா ராஜசிங்கம் அவர்கள் தமிழோசையிடம் பேசுகையில், தமிழர்கள் தாம் பெரும்பான்மை இனத்திடமும் அரசாங்கத்திடமும் என்ன எதிர்பார்க்கிறார்களோ, அதனை தம் மத்தியில் வாழும் சிறுபான்மை சமூகங்களுக்கு வழங்க அவர்கள் தயாராக இல்லை என்று கூறினார்.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இன்னமும் போதிய உதவிகள் அரசாங்கத்தில் இருந்து கிடைக்கவில்லை என்கின்ற போதிலும், அவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்றும், ஆனால், முஸ்லிம்கள் அந்த சிந்தனை வட்டத்திலேயே இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

0 commentaires :

Post a Comment