களுவன்கேனியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட மீன்பிடிப் படகுகள் தரித்து நிற்கும் துறைமுகத்தின் செயற்பாடுகள் இதுவரை காலமும் அங்குள்ள மீன்பிடி சங்கத்தினால் செயற்படுத்தப்படாமல் அசமந்தப்போக்கில் கைவிடப்பட்டிருந்தது. இதனை அறிந்த கிழக்கு முதல்வர் நேரடியாக அப்பகுதிக்கு சென்று மீன்பிடி சங்கங்களை அழைத்து இன்றே ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், செங்கலடி பிரதேச செயலாளர், பிரதி பிரதேச செயலாளர் சித்திரவேல், ஏறாவூர்பற்று பிரதேச தவிசாளர் வினோத் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி திணைக்கள அதிகாரிகள், மீனவர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
0 commentaires :
Post a Comment