ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்துள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சுவிட்சர்லாந்தில் புலம்பெயர் மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.அந்த சந்திப்பில் பெருந்திரளான மக்களின் மத்தியில் புலம்பெயர் மக்களுடான சந்திப்பு சனியன்று இடம்பெற்றது .
நேற்றைய தினம் சுவிஸ்லாந்தில் பெருந்திரளான மக்களின் மத்தியில்
கிழக்குமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை
புலிகள் கட்சியின் தலைவருமாகிய சந்திரகாந்தன் உரையாற்றினர் .
அங்கு புலம்பெயர்ந்த மக்களின் மத்தியில் முதலமைச்சர் உரையாற்றுகையில்
கிழக்கில் இடம்பெறும் அபிவிருத்தியும் மற்றும் கட்சியின் கொள்கைகளையும் விளக்கினார் ,
தொடந்து அங்கு சமுகமளித்திருந்த சுவிஸ் வாழ் புலம்பெயர் மக்களும்
கல்விமான்களும் ,,புத்திஜீவிகளும் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு
பாராட்டுகளையும் ,முதலமைசரினால் மேற்க்கொள்ள படும் சகல அபிவிருத்திக்கும் ,தமிழ் மக்கள் விடுதலைப்புகள் கட்சியின் வளர்ச்சிக்கும் சுவிஸ் வாழ் கிழக்கு புலம் பெயர் மக்களால் சகல பங்களிப்பையும் தருவதாகவும் உறுதியளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment