கிராமங்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் நேரடியாக மக்கள் முன்னிலையில் இனங்காணப்பட்டு, அவர்களது ஒப்புதலோடு திட்டங்கள் முன்மொழியப்பட்டு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றது. இன்று(02.01.2012) 2012ம் ஆண்டிற்கான முதலாவது அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான ஆரம்ப அபிவிருத்தி கூட்டத்தினை மயிலம்பாவெளி கருணாலய ஒன்று கூடல் மண்டபத்திலும், நாவற்கேணிக்கான கூட்டம் நாவற்கேணி கிராம அபிவிருத்திச் சங்க கடடிடத்திலும் இடம் பெற்றது.
கிராமங்களுக்கான அடிப்படையுடன் உடனடித் தேவைகள் என்பன ஆராயப்பட்டு நிறைவேற்றப்படும் முதலமைச்சர் தெரிவித்தார். கிராமிய வீதிகள், கல்வி அபிவிருத்தி, வாழ்வதார வசதிகள், ஏனைய உட்கட்டுமான வசதிகள் என்பன இத்திட்டத்தினுள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
0 commentaires :
Post a Comment