1/23/2012

பிள்ளையான் அவர்கள் தனது பெருமனதின் அடிப்படையிலே சம்பந்தனுக்கு அக்கடித்தினை எழுதியிருந்தார்.

 தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினை வழிநடாத்துகின்றவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா சம்பந்தன் அவர்களுக்கு புதிய ஆண்டின் முதல் நாளிலே ஓர் பகிரங்க மடலை எழுதி இருந்தார்.
உண்மையில் அந்த கடிதத்தை பிள்ளையான் எழுதியதன் நோக்கம் தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வின் வெளிப்படைத்த தன்மையுடன் கூடிய உண்மை நிலையினை மக்களுக்கு தெரியப்படுத்துவதாக நான் கருதுகின்றேன். அதாவது அரசியல் கட்சிகளுக்குள் ஒருபோதும் ஒருமித்த கருத்துக்கள் நிலவப் பொவது இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி இருந்தும்கூட பிள்ளையான் அவர்கள் தனது பெருமனதின் அடிப்படையிலே சம்பந்தனுக்கு அக்கடித்தினை எழுதியிருந்தார். அதற்கு 15நாட்களுக்குள் பதில் எழுதும்படியும் கேட்டிருந்தார். அதனையும் இந்த தமிழ் தேசிய கூட்டைப்பு செய்யவில்லை.ஆனால் புலிகளுக்கு துதிபாடும் இணையத்தளங்களுக்கு பொய்யான அதுவும் திரிவுபடுத்தப்படட் செய்தியினை அதவாவது பிள்ளையான் அனுப்பிய கடிதம் தொடர்பில் தெரிவித்திருந்தார்கள்.அதுவும் மட்டக்களப்பிலே இல்லாத ஓர் அமைப்பினை உருவாக்கி அதன் பெயரிலே செய்தியினை வெளியிட்டிருந்தார்கள்.
பாருங்கள் கிழக்கு மாகாண மக்களே ஓர் பொறுப்புமிக்க மக்கள் கட்சி என்று சொல்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தையே ஆட்சி செய்து கிழக்கு மாகாணத்தினை பலவழிகளிலும் அபிவிருத்தி காணச் செய்தவரும் முதலமைச்சர் கிழக்கு மாகாணத்தின் தமிழ் மக்களுக்கான தனிப்பெருங்கட்சியின் வழிநடாத்தகின்றவருமான பிள்ளையான் அவர்களுக்கு ஓர் பதில் கூட எழுதாமால் நாகரிகம் அற்ற முறையிலே தமிழ் தேசிய கூடட்மைப்பு நடந்திருப்பதானது. கிழக்கு மாகாணத்தின் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும்  அவமானப்படுத்தும் செயலாகும்.
 அந்த கடித்திலே உண்மையிலே குறிப்பிடப்பட்டுள்ளதாவது. பிள்ளiயான் சார்ந்த தனிப்பட்ட பிரச்சினைகள் அல்ல ஒட்டுமொத் தமிழ் மக்களின் அதிகாரம் எதிர்காலம் பற்றிய விடங்களாகும். இதற்கு மதிப்பளித்து பதில் அனுப்பாத தேசிய கூத்தமைப்பு எமது மாகாண மக்களுக்கு என்ன பண்ணிப் படைக்கப்போகுது.
இன்றிலிருந்து எமது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களிடம் நான் உரிமையோடு கேட்டுக் கொள்வது என்னவென்றால், எமது மட்டக்களப்பானை வடக்கான் ஏமாற்றியதும் அவர்களது கருத்துக்களுக்கு மதிப்பளிக்காமையும்தான் இன்றைய இந்த நிலைக்கு முக்கிய 1வதுகாரணம் என்பது இந்தச் செயலூடாக ஒருகணம் மீண்டும் புலப்பட்டிருக்கிறது.
காலங் கலமாக எம்மக்களையும் எமது மாவட்ட அரசியல் தலைமைகளையும் ஏமாற்றி வரலாறு, அன்று ராஜதுரை முதல் இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலே அதிகப் படியான வாக்களைப் பெற்று தமிழ் தேசிய கூத்தமைப்பின மானத்தை காப்பாற்றிய யோகேஸ்வரனுக்கு  தேசிய பட்டியலில் தேர்வான வடக்கான் சுமந்திரன் பச்ச தூசனத்தால் பேசி அனைத்து பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் வெளியாகி இருந்ததது. இவ்வாறு எம்மை மட்டம் தட்டுவதுதான் இவர்களின் வேலை.
பிள்ளயான் என்று மாகாண சபையை பொறுப்பேற்றாரோ அன்றிலிருந்து அதிகாரம் பற்றி பேசி பல தடவைகள் அரசுடன் முரண்பட்ட சம்பவங்களும் எமக்கு தெரிந்ததே. அதே நேரம் பிரபாகரனின் வாலைப் பிடித்து தொங்கிகொண்டிருந்த தமிழ் தேசிய கூத்தைமைப்பு இன்று பிரபாகரன் இல்லாது போன பின்னர் அதிகாரம் பற்றி பேசுகின்றார்கள். அன்று பிரபாகரன் உயிருடன் இருக்கும்போது தமிழீழம் என்றவர்கள் இன்று மாகாண சபை அதிகாரம் என்கின்றார்கள்.
இவர்கள் என்னதான் பேசினாலும் எமது மட்டக்களப்பிலே ஓர் பழமொழி இருக்கு அயலூர் அழகனை விட உள்ளுர் முடவன் மேலானவன் என்று. அப்டித்தான் காலங்காலமாக ஏமாற்றயி இந்த கூட்டைமைப்பக்குள் சிக்குண்ட எமது மாவட்ட தமிழ் தசிய கூட்டைப்பு எம்பிக்களை நாம் எப்படியாவது பிhரித்தெடுத்து எமது மாகாணத்தை நாமே ஆளுவோம். இதற்கு பிறகாவது நாம் அனைவரும் சிந்தித்து ஒன்றிணைவோம்.
நன்றி
மட்டு நரசிம்மன்

0 commentaires :

Post a Comment