இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் திருகோணமலை மாவட்டதிற்கான பொதுக்கூட்டம் அதன் தேசியத் தலைவர் அல்-ஹாஜ் அனஸ் தலைமையில் மூதூர் அந்-நஹார் மகளிர் மகா வித்தியாலயத்தில் 22.01.2012ம் திகதி இடம் பெற்றது. இதன்போது இடம் பெற்ற நிர்வாகத் தெரிவில் மாவட்டத்திற்கான புதிய தலைவராக பிரபல சமூக சேவையாளரும் கந்தளாய் பேராற்றுவெளி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபருமான ஜெய்னுலாப்தீன் முகம்மது அஸார் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவரின் தெரிவினைத் தொடர்ந்து இவரது வருடத்திற்கான செயற்பாடுகள் பற்றி நாம் தொடர்பு கொண்டு கேட்ட போது, திருகோணமலை மாவட்டத்தில் செயல்படாமல் உள்ள வலயரீதியிலான இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகக் குழுக்களை புதிய வேகத்துடனும் புதிய சிந்தணையுடனும் முதலில் இயங்கவைக்க வேண்டும் இதற்காக புல்மோட்டை தொடக்கம் மூதூர் தோப்பூர் வரையிலான புதிய வருடத்திற்கான பிராந்திய நிரவாகங்களைத் தெரிவு செய்ய வேண்டும் இதில் சில இடங்ளில் நிரவாகங்கள் சிறப்பாகச் செயற்படுகின்றன. அடுத்தாக ஆசிரியர்களின் குழந்தைகக்கான புலமைப்பரிசில்களைப் பெற்றுக்கொடுத்தல், ஆசிரியர்களின் நாளாந்தப் பிரச்சிணைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்தல், இன்னும் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் மூலம் திருகோணமலை மாவட்டத்தில் வளவாளர்களின் ஒன்றியம் ஒ;றை அமைத்து அதன் மூலம் கருத்தரங்குகளை மேற்கொள்ளல் போன்ற பல்வேறு திட்டங்கள் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஆ.து.அன்வர் அலி
ஆ.ளு.ஆ. இர்பான்
யு.ளு.ஆ. தானீஸ்
0 commentaires :
Post a Comment