1/24/2012

குருகுலத்தை அரசியலுக்கு பயன்படுத்தி வரும் செயலுக்கு களுதாவளை பொது அமைப்புக்களின் ஒன்றியம் கண்டனம்

பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா களுதாவளை திருஞானசம்பந்தர் குருகுலத்தை அரசியலுக்கு பயன்படுத்தி வரும் செயலுக்கு களுதாவளை பொது அமைப்புக்களின் ஒன்றியம் கண்டனம்

மட்டக்களப்பு களுதாவளையில் தாய் தந்தையரை இழந்த சிறுவர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட திருஞானசம்பந்தர் குருகுலம் தற்போது அரசியல் நடாத்தும் இடமாக மாறியிருக்கின்றது. அண்மைக் காலமாக களுதாவளை திருஞானசம்பந்தர் குருகுலத்திலிருந்து அனுப்பப்படுகின்ற கடிதங்கள் அனைத்தம் அனுப்புனர் முகவரி பொன் செல்வராஜா பாராளுமன்ற உறுப்பினர் என்று அனுப்பப்படுகின்றது.

நேற்று இடம்பெற்ற நிர்வாக சபை பொதுக் கூட்டத்திற்கான அழைப்பினையும் செல்வராஜாவின்முகவரி இட்டே அனுப்பப்பட்டிருக்கின்றன். 500 பேருக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கின்றனர். அனைவருக்கும் அனுப்பப்பட்ட கடிதங்களிலும் அனுப்புனர் முகவரி பொன் செல்வராஜாவின் முகவரி இடப்பட்டிருக்கின்றது. இவ் விடயம் தொடர்பில் பாரிய எதிர்ப்பலைகள் உருவாகி இருக்கின்றன.

இவ்விடயம் தொடர்பில் களுதாவளை பொது அமைப்புக்களின் ஒன்றியம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கின்றது. அவ் அறிக்கை எமக்கும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருக்கின்றது அதனை தருகின்றோம்.

களுதாவளை திருஞானசம்பந்தர் குருகுலத்தை அரசியலுக்கு பயன்படுத்துவதை வண்மையாகக் கண்டிக்கின்றேம் எனும் தலைப்பில் அறிக்கை அமைந்திருக்கின்றது. 

மேலும் அவ் அறிக்கையில் களுதாவளை திருஞானசம்பந்தர் குருகுலத்தில் தாய் தந்தையரை இழந்த பல சிறுவர்கள் தங்கியிருந்து தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இக் குருகுலம் ஆரம்பிக்கப்பட்டு பல தசாப்தங்கள் ஆகின்றன இக் குருகுலம் மூலம் கஸ்ரத்தின் மத்தியில் தமது கல்வியைத் தொடர முடியாமல் இருந்த பல சிறார்கள் நல்ல நிலைக்கு வந்திருக்கின்றனர். இக் குருகுலத்தினால் உருவாக்கப்பட்ட பல மாணவர்கள் இன்று பல உயர் பதவிகளில் இருக்கின்றனர்.

ஆனாலும் தற்போது இக் குருகுலத்தில் இடம் பெறுகின்ற செயற்பாடுகள் இங்கு தற்போது இருக்கின்ற சிறார்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதுடன். இக் குருகுலம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கத்திலிருந்து விலகிச் செல்வதாக அமைந்திருக்கின்றது.

தற்பொழுது குருகுலத்திலிருந்து அனுப்பப்படுகின்ற கடிதங்களில் அனுப்புனர் முகவரியில் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜாவின் முகவரி இட்டு அனுப்பப்படுகின்றமை வருந்தத்தக்க விடயம். பல தசாப்தங்களாக இயங்கிவரும் இக் குருகுலம் இதுவரை ஒருபோதும் அரசியல் தலையீடு இன்றி செயற்பட்டு வந்தது. ஆனால் தற்போது அரசியல் தலையீடும் அரசியல் இலாபம் தேட முற்படுபவர்களின் செயற்பாடும் கண்டிக்கத்தக்க விடயம்.

சமூக சேவை நோக்கத்துடன் இயங்கி வந்த இக் குருகுலம் இப்பொழுது செல்வராஜாவிற்கு ஒப்படைக்கப்பட்டு விட்டதா? குருகுல நிர்வாகசபை எங்கே போய்விட்டது? உங்கள் அரசியல் இருப்புக்காக வெறுமனே அனாதரவற்ற சிறார்களின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள்.
இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும். இவ் விடயம் தொடர்பாக கிழக்குமாகாண முதலமைச்சருக்கும் சமூக சேவைகள் அமைச்சு உட்பட உரிய அதிகாரிகளுக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 commentaires :

Post a Comment