கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கடந்த 01.01.2012 அன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களுக்கு மடல் ஒன்றினை அனுப்பி இருந்தார். அதன் சாராம்சம் வடக்கு கிழக்கு இணைப்பு தவிர்ந்த ஏனைய அதிகாரங்கள் தொடர்பில் தான் பேசத் தயார் என்பதே அதுவாகும்.
இன்றைய(24.01.2012) தகவல்களின்படி தமிழ் தேசிய கூட்டமைப்பு முதலமைச்சர் சந்திரகாந்தனின் கடித்திற்கு சாதகமான பதிலை ஓரிரு தினங்களில் அனுப்பி இரா சம்பந்தனுக்கும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்குமிடையில் முக்கிய சந்திப்பொன்றும் இடம்பெற உள்ளதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வேளையிலே தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அறிக்கை அரசனுமான அரியநேந்திரன் கடந்த 22.01.2012 பளுகாமத்தில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்விலே அன்று காணி, பொலிஸ் அதிகாரம் வேண்டாம் என்றவர்கள் இன்று தமிழ் தேசிய கூட்டடைப்பிற்கு கடிதம் எழுதுகின்றனர்.”என பேசியிருந்தார். நான் அவரிடம் ஒன்றை கேட்க விரும்புகின்றேன். அதாவது தங்களது தமிழ் தேசிய கூட்டமைப்பானது புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவுற்ற பின்னர்தான் அதிகாராம் பற்றி பேச ஆரம்பித்தார்கள். பிள்ளையான் அவ்வாறல்ல என்று முதலமைச்சராக பதவி ஏற்றாரோ அன்றிலிருந்து அதிகாரம் தொடர்பில் பேசத் தொடங்கி விட்டார். ஏன் தாங்கள் கூட அரசியிலில் பிரவேசித்த காலத்திலே என்றாவது இது தொடர்பில் சிந்தித்து இருப்பீர்களோ? அல்லது விடுதலைப் போராட்டத்திற்காக தங்களது குடும்பத்திலோ அல்லது தாங்களோ நேரடி பங்களிப்பு ஏதும் செய்தவரோ? என்று சிந்திக்க வேண்டும். ஆனால் தாங்கள் சொல்கின்ற அந்த பிள்ளையான் தனது 15ஆவது வயதிலே விடுதலைப் போராட்டத்தில் இணைந்து தமிழ் மக்களின் உரிமைக்காக சுமார் பதினைந்து வருடம் போராடி விழுப்புண் அடைந்த வரலாறு தங்களுக்கு தெமரியுமோ என்ன? அதெல்லாம் தெரியாமலா என்ன. தங்களுக்கு ஏதாவது ஒரு நாள் பேசி அது சுடரொளி பத்திரிகையிலும் தமிழ் வின் இணையத்தளத்திலும் வரவேண்டும் அப்படி இருந்தால் போதும் ஐயாவுக்கு.
நான் உண்மையான மட்டக்களப்பானுக்கு பிறந்தவன் என்ற வகையில் நினைக்கின்றேன் தற்போது பிள்ளையானின் கடிதம் தங்களுக்கு புளிகரைக்குது போல ஏன் என்றால் பிள்ளையானுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேசினால் தனது வண்டவாளங்கள் உண்மை நிலை தலைமைக்கு தெரிய வந்தால் தான் ஓரங்கட்டப்பட்டுவிடுவேனோ என்ற பயம் இருக்குப்போல அதுதான் ஐயா கொக்கரிக்கிறார்.
அறிக்கை மன்னன் அவர்களே பி;ளளையான் தங்களது தலைமைக்கு எழுதிய கடித்ததை முதலில் முழுமையாக படியுங்கள் அதன் மேடைகளில் விமர்சியுங்கள். கிழக்கு மாகாண சபை ஒன்று இல்லை அதற்கு ஒரு முதலமைச்சர் இல்லை என்று கிழக்கு மானகாண மக்களின் மனதை புண்படுத்திய தங்களது தலைமைக்கு கடிதம் எழுதியிருக்கின்றார் என்றால் அது அவரது பெரிய மனதை எங்களுக்கு காட்டுகின்றது. தனது குறுகிய அரசியல் நோக்கங்கள் அதிலே எதுவும் இல்லை என்பதனை அவர் தெளிவாக குறிப்பிடட்டிருந்தார். ஒட்டுமொத்த தமிழ் மக்னகளின் நலனுக்காக செயற்படுபவன் என்ற வகையிலே அதனை எழுதி இருந்தார் என்பதனை தாங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வளவு பெருமனதுடன் ஒரு மட்டக்களப்பான் எழுதிய கடித்திற்கு இன்னொரு மட்டக்களப்பான் விமர்சிப்பதென்பது உண்மையில் வேதனையளிக்கிறது. எது எப்படியோ இப்படியான மட்டக்களப்பானும் இன்றும் இருக்கத்தான் செய்கின்றான். மக்கள் பதில் சொல்வார்கள் .
நன்றி
மட்டு நரசிம்மன்.
0 commentaires :
Post a Comment