இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் களுதாவளைக் கிராமத்தில் இருக்கின்ற திருஞானசம்பந்தர் குருகுலத்தில் குருகுல நிர்வாகசபை அங்கத்தவர்களுக்கான பொதுக்கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இப் பொதுக்கூட்டத்திற்கு வந்தவர்கள் பலர் இக் குருகுலத்தின் நிர்வாக சபையின் தேவையற்ற செயற்பாடுகள் தொடர்பாக விமர்சித்ததுடன். ஒரு சிலரின் சுய நலத்திற்காக சமூக நோக்கத்துடன் செயற்படும் குருகுலத்தை அரசியலிற்கு பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.
இக் குருகுலத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் 500 பேருக்கு மேல் இருக்கின்றனர். இவர்களுக்கு குருகுலத்தின் நிர்வாக சபைக் கூட்டத்திற்கான அழைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன் . செல்வராஜா அவர்களால் அனுப்பப்பட்டிருக்கின்றது.
இதனால் கூட்டத்திற்கு வருகை தந்த பலர் இக்கூட்டம் அரசியல் கூட்டமா? அல்லது குருகுலத்தின் பொதுக்கூட்டமா எனக் கேள்வி எழுப்பியதுடன் எதற்காக பொன் செல்வராஜா அவர்கள் இக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும். குருகுலத்தின் நிர்வாகசபைக் கூட்டம் நிர்வாகசபைதானே அழைப்பு விடுக்க வேண்டும் என்று கேட்கப்பட்டபோது. அங்கே வந்த பதில்கள் சிரிப்பை ஏற்படுத்தியது.
கொடுக்கப்பட்ட பதில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா அவர்கள் எங்களுக்கு கடித உறைகளை அன்பளிப்பு செய்திருக்கின்றார் என்பதாகும். குருகுலத்திற்கு பொன் செல்வராஜா அவர்களால் கொடுக்கப்பட்ட கடித உறைகள் அனைத்திற்கு அனுப்புனர் பகுதியில் தனது பதவி முத்திரையினை பதித்திருக்கின்றார். குருகுலத்தினால் அனுப்பப்படும் அனைத்துக் கடிதங்களும் அனுப்புனரின் முகவரி பொன் செல்வராஜா பாராளுமன்ற உறுப்பினர் எனும் முகவரியுடன் அனுப்பப்படுகின்றது.
தாய் தந்தையர்களை இழந்த சிறுவர்கள் இருக்கும் சமூக சேவை நோக்கம் கொண்ட இக் குருகுலத்தில் அரசியலை பயன்படுத்துவது சரியானதா? தேர்தல் காலத்தில் குருகுல மாணவர்களை தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்திய வரலாறுகளும் உண்டு.
குருகுலத்தின் கடிதங்கள் அனுப்புனர் முகவரி பொன் செல்வராஜாவின் இட்டு அனுப்பப்படுவது தொடர்பில் களுதாவளைக் கிராமத்தின் பொது அமைப்புக்கள் கண்டனங்களை தெரிவித்திருப்பதுடன் இவ் விடயம் தொடர்பாக தமது அதிருப்தியினையும் வெளியிட்டிருக்கின்றனர். காரணம் அண்மைக் காலமாக களுதாவளைக் கிராமத்திற்கு வருகின்ற அபிவிருத்தித் திட்டங்களை முடக்குவதில் பொன் செல்வராஜா அவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டதுடன் குருகுலத்தில் இடம்பெற்ற கூட்டத்திற்கு பொன் செல்வராஜா அவர்கள் வருகை தருவார் அவரை களுதாவளைக்கு வர விடாமல் தடுக்க எதிர்ப்பைத் தெரிவிக்க என்று பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலர் வந்திருந்தனர். பொன் செல்வராஜா அவர்களை ஒருபோதும் களுதாவளைக் கிராமத்தில் கால் வைக்க விடமாட்டோம் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
குருகுலத்தின் நிர்வாக சபையில் இருந்து குருகுலத்தை வைத்து அரசியல் நடாத்த நினைக்கும் நிர்வாக சபையினர் வேறு யாருமல்ல சென்ற இடமெல்லாம் தனது கதையைச் சொல்லி அழுது புலம்பும் முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் த. கனகசபை அவர்களும். இக் கனகசபையின் மறு பக்கங்கள் விரைவில் புரட்டப்படும். மீண்டும் அரசியலுக்கு வர கனவு கண்டுகொண்டிருக்கின்றார் இவர் மக்களுக்கு என்ன செய்தார் ? தனது மகனையும் உறவினர்களையும் வெளிநாடுகளுக்கு அனுப்பியதுடன் தனது குடும்த்தினருக்கும் உறவினர்களுக்கும் வேலைவாய்ப்பைப் பெற்றதுடன் 50 இலட்சம் பெறுமதியான பல வீடுகளை தனது சொந்தக்காரர்களுக்கு கொடுத்ததுடன் இன்னும் பல அனைத்தும் விரைவில் புரட்டப்படும் விபரங்களுடன். இவர் கிழக்கு மாகாண முதலமைச்சரின் பின்னால் திரிந்த காலமும் இருக்கின்றது.
மற்றவர் ப. குணசேகரம் இவர் அரசியலுக்கு வர பல ஆண்டுகளாக கனவுகண்டு சென்ற பொதுத் தேர்தலில் கூட்டமைப்பிடம் தேர்தலில் போட்டியிட இடம் கேட்டு கூட்டமைப்பு இடம் கொடுக்காததால் கருணாவின் காலைப்பிடித்து பொதுஜன ஐக்கிய முன்னணியில் போட்டியிட்டு தனது கிராம மக்களே வாக்களிக்காது படு தோல்வியை சந்தித்தவர் . இப்போது கூட்டமைப்பின் காலைப்பிடித்து திரிகின்றார்.
இவர்களுக்கு அரசியல் ஆசை வந்துவிட்டது இதனால் இக் குருகுலத்தயும் பயன்படுத்த நினைக்கின்றனர்.
அது ஒரு புறமிருக்க இந்த பொன் செல்வராஜாவிற்கு புத்தி இல்லையா? குருகுலத்திலிருந்து அனுப்பப்படும் கடிதங்களில் அனுப்புனர் முகவரியில் தனது முகவரி இட்ட கடித உறைகளை அனுப்பபச் சொல்லி இருக்கின்றாரே.
0 commentaires :
Post a Comment