1/17/2012

எழுச்சி பெரும் எல்லை கிராமங்கள்

திருகோணமலை மாவட்டத்திலே அதிகளவான சிங்களமக்களைக் கொண்டமைந்தாலும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களும் வாழ்ந்துவருகின்ற மொறவௌ பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தமிழ் ஆலயங்களை முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் நேரில் சென்று பார்வையிட்டார்.
குறித்த ஆலயத்தின் நிருவாக சபையினர்களோடு கலந்துரையாடி ஆலயத்தின் புனர்நிர்மானம் தொடர்பாகவும் அதிக கவனம் செலுத்தி தாம் உதவுவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். கடந்த பல காலங்களில் ஏறப்பட்ட வன்செயல்களினால் அதிகம் இவ் ஆலயங்கள் பாதிக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.


 மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குடும்பி மலைப் பிரதேசத்திற்கு இன்று(16.01.2012) கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் விஜயம் செய்தார். அப்பிரதேச மக்களின் அழைப்பின் பேரில் சென்ற முதலமைச்சர் சந்திரகாந்தன் அங்குள்ள புராதன ஆலயங்களான பிள்ளையார் மற்றும் கண்ணகை அம்மன் ஆலயங்களையும் தரிசித்து குறித்த ஆலயங்களின் புனர்வுத்தாரணத்திற்காக நிதிகளையும் ஒதுக்கீடு செய்துள்ளார்.
அத்தோடு அங்குள்ள மக்களின் முக்கிய தேவைகளான பாலர் பாடசாலை, விவசாய வீதி, பாடசாலை, விவசாய செய்கைகக்கான குளம் புணரமைப்பு (ஆத்திகாட்டுக்குளம்) மற்றும் மீனவர்களுக்கான மீன்பிடி உபகரணங்கள் என பல்வேறு அபிவிருத்திகளையும் உதவிகளையும் தாம் வழங்க உள்ளதாக முதலமைச்சர் சந்திரகாந்தன் அங்கு உரiயாற்றும் போது தெரிவித்தார்.

0 commentaires :

Post a Comment