1/17/2012

திருமலை நொச்சிகுளம் வித்தியாலத்திற்கு கிழக்கு முதல்வர் விஜயம்

திருகோணமலை மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய ஓர் பாடசாலையாக கருதப்படுகின்ற தி/நொச்சிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் திடீர் விஜயம் செய்தார்.பாடசாலையிலுள்ள குறைபாடுகள் மற்றும் மாணவர்களினது கல்வி முன்னேற்றம் அத்தோடு பாடசாலையின் பௌதீக வளங்கள் தொடர்பாக கலந்துரையாடினார். பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களோடு கலந்துரையாடியதுடன் பலவேறு கஸ்டங்களுக்கு மத்தியிலும் அப்பாடசாலைக்கு சேவை மனப்பான்மையுடன் சென்று கல்வி கற்பிக்கின்ற அப் பாடசாலையின் ஆசிரியர்களை முதலமைச்சர் பாராடடினார்..

0 commentaires :

Post a Comment