கட்டார் நாட்டின் அமீர் ஷேக் ஹமட் பின் கலீபா அல்தானி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற் கொண்டு நேற்று இலங்கை வந்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த கட்டார் தலைவருக்கு நேற் றுப் பிற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அவர்களினால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
கட்டார் தலைவருடன் அந்நாட்டின் உயர் மட்ட தூதுக்குழுவொன்றும் இலங் கைக்கான விஜயத்தினை மேற்கொண் டுள்ளதுடன் நேற்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் கட்டார் அமீருக்குமிடையில் பேச்சுவார்த்தை யொன்றும் நடைபெற்றது.
இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கட்டார் தலைவருக்கு இரவு விருந்துபசாரம் ஒன்றை வழங்கி கெளரவித்தார்.
நேற்றுப் பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த கட்டார் தலை வருக்கு விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. இரு நாடுகளினதும் தேசிய கீதமிசைக் கப்பட்டு கட்டார் தலைவரை கெளரவிக்கும் வகையில் 21 பீரங்கி வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன.
இவ்வரவேற்பு நிகழ்வில் வெளிநாட்ட மைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், அமைச்சர்கள் ஏ.எச்.எம். பெளஸி, அநுர பிரியதர்ஷன யாப்பா, பீலிக்ஸ் பெரேரா, மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட அமைச்சர்கள், பிரதியமைச் சர்கள் முக்கியஸ்தர்கள், முப்படைத் தளபதிகளும் கலந்து கொண்டனர்.
இன்று காலை பிரதமர் டி.எம். ஜய ரட்னவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் கட்டார் தலைவர் அதனையடுத்து நாடு திரும்பவுள்ளார்.
0 commentaires :
Post a Comment