யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாது மக்களின் நலனைப்பற்றியும் சிந்திக்காமல் இனிமேலும் விதவைகளும் அனாதைகளும் உருவாகுவதற்கான அரசியல் செய்வதனை அனைவரும் தவிர்க்க வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேசசபை – கொக்கட்டிச்சோலை பொதுச்சந்தை திறப்பு விழா இன்று சனிக்கிழமை காலை பிரதேசசபைத் தவிசாளர் ரி.பேரின்பராஜா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
‘உலகளவில் தற்போது நடைபெற்றுவருவது பொருளாதாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்கான போராட்டமாகும். மட்டக்களப்பு மாவட்டம் தற்போது துரிதமான அபிவிருத்தியைக் கண்டு வருகிறது. நமது மாகாணமும் மாவட்டமும் கடந்த காலங்களில் இருந்த நிலையை விடவும் தற்போது பெரும் முன்னேற்றமடைந்துள்ளது. அது எதிர்காலத்தில் இன்னமும் முன்னேற்றமடையும்.
நெல்சிப் திட்டத்தில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்படும் முதலாவது சந்தையாக இச்சந்தை உள்ளது’ என்றார்.
இந்நிகழ்வில் கிழக்கு மகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.உதயகுமார், கொக்கட்டிச்சோலை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி சிறிநாத், கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எம்.எஸ்.கருணாதாஸ்இ இராணுவ முகாம் பொறுப்பதிகாரி சமன்குமார உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
0 commentaires :
Post a Comment