1/14/2012

முதலமைச்சரின் வேண்டுதலின்பேரில் பிரதேச செயலாளர்களின் இடமாற்றம் மறு அறிவித்தல் வரும்வரை ஒத்திவைப்பு

கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் வேண்டுகோளுக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச செயலாளர்களின் இடமாற்றம் மறு அறிவித்தல் வரும் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதேச செயலாளர்களும் மாவட்டத்திற்குள்ளேயே இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்கள். மேற்படி இடமாற்றமானது சரியான முறைமைகளைப் பின்பற்றி நடைபெறவில்லை என பொதுமக்கள், கிராம சேவையாளர்கள், பொது அமைப்புக்கள் தமது அதிருப்தியை தெரிவித்திருந்தார்கள்.
குறிப்பாக வவுணதீவு பிரதேச செயலாளரின் இடமாற்றத்தை இரத்துச் செய்யக் கோரி பிரதேச செயலக முன்றலிலே கவனஈர்ப்பு போராட்டமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மேற்குறித்த இடமாற்றம் தொடர்பில் பொது அமைப்புக்கள், கிராம சேவையாளர்கள் அமைப்பு, மற்றும் பொது மக்கள் கிழக்கு மாகாண முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தததையடுத்து, நேரடியாக ஜனாதிபதியிடம் தெரியப்படுத்தி குறித்த இடமாற்றத்தினை பிற்போட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதன் பிரகாரம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இன்று(13.01.2012) மறு அறிவித்தல் வரும் வரை இடமாற்றத்தினை  பிற்போடும்படி தொலைநகல் மூலம் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் சு.அருமைநாயகத்திடம் பணிக்கபட்டுள்ளது.

0 commentaires :

Post a Comment