1/15/2012

ஆசாமி யோகேஸ்வரன் சிவசேனா பயங்கரவாதிகளுடன் கூட்டணி

ஆசாமி  யோகேஸ்வரன் சிவசேனா பயங்கரவாதிகளுடன் கூட்டணி

கேரளா நாட்டு மாநில சிவசேனை அமைப்பின் தலைவர் பூஜ்ஜியம் புவனேந்திரா ஜு அவர்களும் தமிழ் நாட்டு மாநில சிவசேனை அமைப்பு தலைவர் உயர் நீதிமன்ற சட்டத்தரணி எஸ்.இராஜேஸ்வரன் அவர்களும் இணைந்து இரு மாநிலங்களின் சிவசேனை அமைப்புக்களை ஒன்றிணைத்து கேரளா நாட்டின் திருவானந்தபுரம் பத்மநாபா சுவாமி கோயில் முன்றலில் ஆரம்பித்த சமாதான யாத்திரையானது 69 கிலோ மீற்றர் தூரம் வரை சென்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக தலைமை தாங்கிய உலக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அரசியல் பிரதிநிதியும் கிழக்கு இந்து ஒன்றியத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் மட்டக்களப்பு மாவட்;ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் கலந்து கொண்டு காவிக் கொடியை அசைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன் தொடர்ந்து இரு மாநிலங்களிலும் வழங்கப்பட்ட வரவேற்புகளை ஏற்று சமாதான யாத்திரை முடியும் வரை விஜயத்தை மேற்கொண்டார்.
இவ் நிகழ்வில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கேரளா தமிழ் நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் இருந்து கலந்து கொண்டதுடன் ஆயிரக் கணக்கான வாகனங்களும் தொடரணியாக சென்றன 
இந்தியாவில் இடம் பெறும் அனைத்து இந்து முஸ்லிம் கலவரங்களின் சூத்திரதரிகளான  விஷ்வ ஹிந்து பரிஷத் ,சிவசேனை அமைப்புக்கள் திராவிட எதிர்ப்பிலும் முன்னணி வகிப்பன. இந்தியாவை ஆக்கிரமித்த ஆரியர்களின் அரசியல் வாரிசுகளான இவர்கள் இந்தியாவிலுள்ள திராவிடர்களின் முதல் எதிரிகளாவர்.இந்து சமயம் என்கின்ற போர்வையில் இந்தியாவின் பூர்வீக குடிகளை அடிமைகளாக்கி சாதி பிரிவினைகளை உருவாக்கிய ஆரியர்களின் இன்றயதொடர்ச்சியே இந்த சிவசேனை கூட்டமாகும் .மகாத்மா காந்தியை சுட்ட இந்த சிவசேனை கூட்டத்தினர் பல வருடங்களாக இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தனர் இந்தியாவின் பல்லின கலாசாரத்தை ஏற்றுக்கொள்ளாத இந்த இந்துத்துவவாதிகள் இந்து மதம் எனும் போர்வையில்  இந்தியாவிலுள்ள பலவித வழிபட்டு முறைகளையும் உட்கொண்டு செரித்தவர்கள் .பாம்பையும்,பார்ப்பானையும்கண்டால் பார்ப்பனை முதலின் அடி என்று உரத்து சொன்ன தந்தை பெரியார் இவர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் .அந்த பெரியாரின் அரசியல் ,கலக  செயல்பாடுகள் நிறைந்திருந்தமை காரணமாகவே இன்றுவரை இந்த இந்துத்துவ பயங்கரவாதிகளால் தமிழ் நாட்டில் கால் ஊன்ற முடியவில்லை ஆயிரம் விமர்சனங்கள் இருந்த போதும் தமிழ் நாட்டை மாறி மாறி திராவிட கட்சிகளே ஆண்டு வர முடிகின்றது.தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக இரண்டற கலந்து வள முடிகின்றது .இந்தியாவில் இருக்கின்ற எந்த ஒரு அரசியல் முற்போக்கு சக்திகளும் இந்த  விஷ்வ ஹிந்து பரிஷத் ,சிவசேனை அமைப்புகளுடன் ஒட்டி உறவடுவதில்லை உழைக்கும் மக்களுக்காக போராடும் எந்த ஒரு இடது சாரி கட்சிகளோ கம்யுனிஸவாதிகளோ இவர்கள் பக்கமே செல்வதில்லை .ஏன்அதிகம் வேண்டாம் புலிகளின் விசுவாசிகளான நெடுமாறனோ வீரமணியோ திருமாவளவனோ  விடுதலை இராசெந்திரனோ ,தியாகுவோ இவர்களில் ஒருவர்கூட இந்த இந்து பாசிச கும்பலின் பக்கம் தலை வைத்தே படுப்பதில்லை .இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இடம்பெறும் தேசிய இன போராட்ட அமைப்புக்களோ .தலித் போராளிகளோ இந்த விஷ்வ ஹிந்து பரிஷத் ,சிவசேனை கும்பலை எதிரிகளாகவே கணிப்பதுண்டு .ஆனால்அரசியலில் வலதோ இடதோ ஏதும் அறியாத தற்குறி பிரபாகரனால் வளர்க்கப்பட்ட கூட்டமைப்பினர் இன்று விஷ்வ ஹிந்து பரிஷத் கும்பலுடன் உறவு தேடி ஆசாமி யோகேஸ்வரனை தூது அனுப்பியுள்ளனர் .கிழக்கு  மாகாணத்தில் மீண்டும் ஒரு முறை இனகலவரங்களை துண்டி விடும் ஆலோசனைகளும் பொருளாதார உதவிகளும் கூட இந்த இந்து  பார்ப்பனிய பாசிச கும்பலால் யோகேஸ்வரன் எம்பி ஊடாக கூட்டமைப்பினருக்கு  வழங்கபடலாம்.
கு .சாமித்தம்பி 

0 commentaires :

Post a Comment