1/13/2012

பெரிய கட்சியில் இருக்கும் தங்களால் என்ன பயன் மட்டு மக்களுக்கு

பெரிய கட்சியிலிருந்து கொண்டு தாங்கள் அரசின் இதயத்தை தொடடிருக்கின்றீர்கள். தங்களால் மட்டக்களப்பில் என்ன அபிவிருத்தி செய்ய முடிந்திருக்கிறது என்பதனை தாங்கள் சற்று சிந்திக்க வேண்டும். என்ன என்ன அபிவிருத்தி தாங்கள் செய்திருக்கின்றீர்கள் என்பதை ஒரு மேடையில் பேசினால் ரொம்ப நல்லா இருக்கும் கௌரவ பிரதி அமைச்சர் அவர்களே.
கௌரவ பிரதி அமைச்சர் அவர்களே! தாங்கள் கடந்த 11.01.2012 இன்றைய வீரகேசரி பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தீர்கள் “சிறிய கட்சிகளாக இருந்து கொண்டு அரசாங்கத்தின் வாலைப் பிடித்துக் கொண்டிருப்பதனை விட சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலே இணைந்து கொள்ளுங்கள்” எனக் குறிப்பிட்டிருந்தீர்கள்.
கிழக்கில் சிறிய கட்சியினை வைத்து வழிநடாத்துகின்ற முதலமைச்சர் பிள்ளையானால் எவ்வளவு அபிவிருத்தி செய்ய முடிகின்றது. இது தங்களுக்கு தெரியுமோ என்ன? தங்களிடம் நான் தயவாக கேட்டுக் கொள்வது என்னவென்றால், தங்களது பெரிய கட்சியிலே பிரதித் தலைவராக இருக்கின்ற தாங்கள் பகிரங்கமாக பேச வேண்டும். அதாவது தங்களது கட்சியானது சிறுபான்மை மக்களுக்கு எத்தகைய தீர்வு திட்டத்தினை வைத்திருக்கின்றது. தங்களது நிதி ஒதுக்கீட்டில் அல்லது முயற்சியினால் எவ்வளவு அபிவிருத்தி நடந்திருக்கின்றது எனக் கூற வேண்டும்.
தங்களுக்கு தனது கட்சியின் கொள்கை என்ன என்றே தெரியாது. இப்படி இருக்கும் போது தாங்கள் எங்கே பேசப் போகின்றீர்கள். தங்களது அண்ணணின் பெயரிலே தமது சொந்த ஊரிலே பிள்ளையான் கலாச்சார மண்டபம் கட்டுகின்றார். தனது சொந்த அண்ணணின் பெயரிலே யாரோ ஒருவன் கலாச்சார மண்டபம் கட்ட வெட்கம் இல்லாமல் அபிவிருத்தி அபிவிருத்தி என்று பேசுகின்றீர்களே! என்ன அமைச்சரே எதுவுமே விளங்குதில்ல போல. விளங்கும் விளங்கும் அடுத்த அமைச்சரவை தெரிவின்போது எல்லாம் விளங்கும்.
நன்றி.
மட்டு நரசிம்மன்

0 commentaires :

Post a Comment